தேவனுக்கே மகிமையுண்டாவதாக

பிலிப்பியர் 2:2 

நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஏக சிந்தையுள்ளவர்களாக காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் பெருமைப்படாதபடி ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.  அடித்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 5:13-18

ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலரெல்லாரிலும் ஊழியத்துக்கு முப்பதினாயிரம் அமஞ்சி ஆட்களைப் பிடித்தான்.

அவர்களில் ஒவ்வொரு மாதத்திற்குப் பதினாயிரம்பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்; அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதம் தங்கள் வீடுகளிலும் இருப்பார்கள்; அதோனீராம் அந்த அமஞ்சி ஆட்களின்மேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.

சாலொமோனிடத்தில் சுமை சுமக்கிறவர்கள் எழுபதினாயிரம்பேரும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் எண்பதினாயிரம்பேரும்,

இவர்களைத்தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள்.

வெட்டின கல்லால் ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட, பெரிதும் விலையேறப்பெற்றதுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான்.

ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பாசாரிகளும், ஈராமின் சிற்பாசாரிகளும், கிபலி ஊராரும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.

 மேற்கூறிய வசனங்களின் பிரகாரம் ராஜாவாகிய சாலொமோனும், ஈராமும் உடன்படிக்கை பண்ணினபின்பு, ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலரெல்லாரிலும் ஊழியத்திற்கு முப்பதினாயிரம் அமஞ்சி ஆட்களைப் பிடித்தான்.  அவர்களில் ஒவ்வொரு மாதத்திற்குப் பதினாயிரம்பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்.  அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதம் தங்கள் வீடுகளிலும் இருப்பார்கள்.  அதோனீராம் அந்த அமஞ்சி ஆட்களின் மேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.  சாலொமோனிடத்தில் சுமை சுமக்கிறவர்கள் எழுபதினாயிரம் பேரும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் எண்பதினாயிரம் பேரும், இவர்களை தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறு பேரும் இருந்தார்கள்.  வெட்டின கல்லால் ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட, பெரிதும் விலையேறப்பெற்றதுமான கற்களை கொண்டு வர ராஜா கட்டளையிட்டான். ஆலயத்தை கட்ட, சாலொமோனின் சிற்பாசாரிகளும், ஈராமின் சிற்பாசாரிகளும்,   கிபிலி ஊராரும், அந்த மரங்களையும், அந்த கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள். 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகள் கர்த்தரின் ஆலயம் கட்டும்படி திருஷ்டாந்தமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில் ஆலயத்தின் அஸ்திபாரம் வெட்டின கற்களால் போடப்படும்படியாக விலையேறப்பட்ட கற்களை ராஜா கட்டளையிடுவது, ஆலயத்தின் அஸ்திபாரம் அடிக்கப்பட்ட ஆட்டுகுட்டியானவரும், அந்த கல் மூலைகல்லாகவும், நாமெல்லாரும் அதோடு சேர்த்து  கட்டுகிற கல்லாகவும், சிற்பாசாரிகள் என்பது கர்த்தரின் ஊழியக்காரர்களும், அதோடு சேர்ந்து ஈராமின் ஊழியக்காரர்களும், சேர்ந்து செய்வதென்றால் கர்த்தரின் ஆலயம் ஒவ்வொருவரின் ஆத்துமாவும் கிறிஸ்துவின் ஆலயமாக கட்டப்படுகிறது.  ஆனால் சாலொமோன் கட்டின ஆலயம் ஈராமோடு உடன்படிக்கை செய்தும், தீருவின் நாட்டிலிருந்து வந்த மரமும், கற்களுமாக இருந்ததாலும், அவன் உள்ளமானது ஈராமோடு உடன்படிக்கை செய்ததாலும், அவன் உள்ளத்தில் இரண்டு வித எண்ணங்கள் இருந்ததை பார்க்கிறோம்.  அப்படியாக இரண்டு கிரியைகள் நம்மில்  இருந்தால், அந்த ஆலயத்தில் கர்த்தரின் மகிமை தங்காது.  ஆதலால் பிரியமானவர்களே, கிறிஸ்துவுக்குள் ஒரே சிந்தையுள்ளவர்களாக காணப்பட வேண்டும்.  இப்படியாக நாம் ஏக சிந்தையோடு மாத்திரம் விளங்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.