தேவனுக்கே மகிமையுண்டாவதாக
1கொரிந்தியர் 3:16,17
நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் அவருடைய ஆலயமாக விளங்கினால் அவர் தம்முடைய ஜனமாக்கி நம்மை கைவிடாதிருப்பார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஏக சிந்தையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 6:1-14
இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப் மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான்.
சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழ நீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது.
ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபது முழ நீளமும், ஆலயத்துக்கு முன்னே பத்துமுழ அகலமுமாயிருந்தது.
பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்வித்தான்.
அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுகளைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான்.
கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழு முழ அகலமுமாயிருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காத படிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்.
ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை.
நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள்.
இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான்.
அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது.
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்:
நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்து கொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,
இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான்.
மேற்கூறிய வசனங்களில் இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்ட தொடங்கினான். சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழ நீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது. ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்கு சரியாய் இருபது முழ நீளமும், ஆலயத்திற்கு முன்னே பத்து முழ அகலமுமாயிருந்தது. பார்வைக்குக் குறுகிப் போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்கு செய்வித்தான். அவன் ஆலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானசுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய் சுற்றுக்கட்டுகளை கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினானன். கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழு முழ அகலமாயிருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காதபடிக்கு ஆலயத்தை சுற்றிலும் புறம்பே ஒட்டு சுவர்களை கட்டுவித்தான். ஆலயம் கட்டப்படுகையில் அது பணிதீர்ந்துக் கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டபடுகிற போது, சுத்திகள், வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை. நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலது புறத்தில் இருந்தது. சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள். . இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுபாவி முடித்தான். அவன் ஐந்து முழ உயரமான சுற்றுக் கட்டுகளை ஆலயத்தின் மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுரு மரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது. பின்னும் கர்த்தர் சாலொமோனிடம்
1இராஜாக்கள் 6:12-13
நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதி நியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்து கொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி,
இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார்.
மேற்கூறப்பட்டிருக்கிற கர்த்தருடையவார்த்தைகள் பிரகாரம் சாலொமோன் ஆலயத்தை கட்டி முடித்தான்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்ட வார்த்தைகளின் கருத்துக்கள் என்னவென்றால் திருஷ்டாந்தத்தோடு விளக்குகிறது பணிதீர்த்த கற்களால் ஆலயம் நம் சரீரத்தில் கட்டபடும்படியாக நமக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அடிக்கப்பட்டவராக கல்வாரி சிலுவையில் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு, பின்பு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். உயிர்தெழுந்த கிறிஸ்து நம் உள்ளத்தில் உயிர்தெழும்பும் படியாக நாம் பாவத்துக்கு மரித்து, நீதிக்கு பிழைக்கும் படியாக ஜலத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வோமானால் கர்த்தர் நம்மை மரித்தோரிலிருந்தெழுப்புகிறார். இப்படியாக கிறிஸ்து நம் சரீரத்தில் ஆலயமாக உள்ளான மனுஷனில் எழும்புகிறார். மேலும் ஆலயமாக விளங்குவோமானால் நமக்கு இடுக்கமான வாசல் என்பதையும், நம் விருப்பபிரகாரம் நடக்க முடியாது என்பதும், அல்லாமலும் நம்மில் கிறிஸ்து மீண்டும் அடிக்கப்படக்கூடாது என்பதற்காக சுத்திகள், வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அங்கு கேட்கப்பட வில்லை என்றும் எழுதப்பட்டிருக்கிறது. அல்லாமலும் அன்பினால் ஆலயம் கட்டபட வேண்டும் என்பதும், என்னவெனில் அன்பு என்பது தேவனுடைய கற்பனைகளையும் கைக்கொள்வதே அன்பு. இப்படியாக நாம் அவருடைய கட்டளை, நீதி நியாயங்களை நிறைவேற்றி, கற்பனைகளின்படியெல்லாம் நடந்துக் கொள்ளும்படிக்கு அவைகளை கைக்கொண்டால்,அவர் தாவீதோடே சொன்ன வார்த்தையை நிறைவேற்றி நம் உள்ளத்தில் அவரே ஆலயமாக விளங்குகிறார். நாம் ஒவ்வொருவரும் ஆலயமாக இருப்போமானால் நம் நடுவில் கர்த்தர் வாசம் பண்ணி நம்மை அவர் கைவிடாதிருப்பார். இவ்விதமாக நாம் தேவனின் ஆலயமாக விளங்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.