தேவனுக்கே மகிமையுண்டாவதாக

11 கொரிந்தியர் 4:6 

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளான மனுஷன் பலப்படுத்தப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருடைய ஆலயமாக விளங்கினால்  அவர் தம்முடைய ஜனமாக்கி நம்மை கைவிடாதிருப்பார் என்பதனை குறித்து நாம் தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 6:15-22 

ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தளம்தொடங்கிச் சுவர்களின் மேல்மச்சுமட்டும், கேதுருப்பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி, ஆலயத்தின் தளத்தை தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான்.

தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டும் ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற இருபது முழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான்.

அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பதுமுழ நீளமாயிருந்தது.

ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.

கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்.

சந்நிதி ஸ்தானம் முன்புறமட்டும் இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான்.

ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன் சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன்தகட்டால் மூடினான்.

இப்படி ஆலயம் முழுவதும் கட்டித் தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான்.

மேற்கூறிய வசனங்கள் சாலொமோன் ராஜா ஆலயத்தை கட்டி முடித்த பின்பு, ஆலயத்து சுவர்களின் உட்புறத்தை, தளம் தொடங்கிச் சுவர்களின் மேல் மச்சு மட்டும், கேதுரு பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி, ஆலயத்தின் தளத்தை தேவதாரு விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான்.  தளவரிசை தொடங்கிச் சுவர்களின் ஓரமட்டும் ஆலயத்தின் பக்கங்களை தொடர்ந்திருக்கிற இருபது முழ நீளமான மறைப்பையும் கேதுரு பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானமாக கட்டினான்.    அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பது முழ நீளமாயிருந்தது.  ஆலயத்திற்குள் இருக்கிற கேதுரு மர மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலை செய்திருந்தது.  பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுரு மரமாயிருந்தது.  கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்திற்குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான்.  சந்நிதி ஸ்தானம் முன்புறம் மட்டும் இருபது முழ நீளமும், இருபது முழ அகலமும், இருபது முழ உயரமுமாயிருந்தது; அதை பசும் பொன் தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலபீடத்தையும் அப்படியே மூடினான்.  ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன்  தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன் சங்கிலிகளைப் போட்டு, அதை பொன் தகட்டல் மூடினான்.  இப்படியாக ஆலயம் முழுவதும் கட்டி தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன் தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தனத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதையும் பொன் தகட்டால் மூடினான்.   பிரியமானவர்களே கர்த்தரின் ஆலயம் கட்டப்பட்டது சாலொமோனை வைத்து கர்த்தர் நம்மில் எழுப்புகிற ஆலயத்தின் திருஷ்டாந்தம்.  மேலே கூறப்பட்ட வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் நம்முடைய உள்ளான மனுஷன் பலப்படுத்த பட வேண்டும் என்றும், மேலும் நம்முடைய இருதயம் திடப்படுத்த ப்பட வேண்டும் என்பதையும், அதனுள் நம் ஆத்துமா கிறிஸ்துவின் அன்பினால் பரிசுத்தமாக்கப்பட்டு, கிருபையினால்  நிரப்பப்பட்டு, மகிமைப்படுத்தப்படுகிறது என்பதையும், அதனுள் கிறிஸ்து வாசம் பண்ணும் படியாகவும், மற்ற எந்த அசுத்த ஆவிகளுக்கும் இடம் கொடாமல் கர்த்தரின் வசனத்தால் பாதுகாக்கப்பட வேண்டும்.  நம்முடைய ஆத்துமா தான் கர்த்தரின் சந்நிதி ஸ்தானம்.  அதனை பாதுகாக்கும் படியாக நம்முடைய இருதயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்திருக்க வேண்டும்.  இவ்விதமாக நம்முடைய உள்ளான சரீரம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.