தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 1:16

அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம் ஆத்துமா பரிபூரண கிருபை பெற்றிருக்க வேண்டும்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளான மனுஷன் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 6:23-38  

சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது.

கேருபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசி முனைதொடங்கி மற்றச் செட்டையின் கடைசிமுனைமட்டும் பத்து முழமாயிருந்தது.

மற்றக் கேருபீனும் பத்து முழமாயிருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது.

ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது.

அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் செட்டைகள் விரித்திருந்ததினால், ஒரு கேருபீனின் செட்டை ஒருபக்கத்துச் சுவரிலும், மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடத்தக்கதாயிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது.

அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான்.

ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.

உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான்.

சந்நிதி ஸ்தானத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காயிருந்தது.

ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பேரீந்துகளிலும் பொன்பதியத்தக்கதாய்ப் பொன்தகட்டால் மூடினான்.

இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளைச் செய்தான்; அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது.

அதின் இரண்டு கதவுகளும் தேவதாரிப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்றக் கதவுகளுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது.

அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான்.

அவன் உட்பிராகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான்.

நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு,

பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க ஏழுவருஷம் சென்றது.

மேற்கூறப்பட்ட வசனங்களில் சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேரூபீன்களை செய்து வைத்தான்; ஒவ்வொன்றுக்கும் பத்து முழ உயரமாயிருந்தது.  கேரூபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேரூபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசிமுனை தொடங்கி மற்ற செட்டையின் கடைசி முனைமட்டும் பத்து முழமுமாயிருந்தது.  மற்ற கேரூபீனும் பத்து முழமுமாயிருந்தது.  இரண்டு கேரூபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது.  மேலும் ஒரு கேரூபீன் பத்து முழ உயரமுமாயிருந்து; மற்ற கேரூபீனும் அப்படியே இருந்தது.  அந்த கேரூபீன்கள் உள் ஆலயத்திலே வைக்கப்பட்டிருந்தது.  கேரூபீன்களின் செட்டைகள் விரிக்கப்பட்டிருந்ததினால், ஒரு கேரூபீனின் செட்டை ஒரு பக்கத்து சுவரிலும், மற்ற கேரூபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடதக்கதாயிருந்தது.  ஆலயத்தின் நடு மையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றோடொன்று தொடதக்கதாயிருந்தது.    அந்த கேரூபீன்களை பொன் தகட்டால் மூடினான்.  ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேரூபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான். ஆலயத்து தளவரிசையையும் பொன் தகட்டால் மூடினான். அல்லாமலும் சந்நிதி ஸ்தானத்தின் வாசலுக்கு ஒலிவ மரங்களால் இரட்டை கதவுகளை செய்து: மேல் சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காயிருந்தது. ஒலிவமரமான இரட்டை கதவுகளில், கேரூபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களை செய்து, அந்த கேரூபீன்களிலும், பேரீந்துகளிலும் பொன் பதியதக்கதாய் பொன் தகட்டால் மூடினான்.  இப்படியாக தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளை செய்தான்; அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது. மற்றும்

 1இராஜாக்கள் 6:34, 36  

அதின் இரண்டு கதவுகளும் தேவதாரிப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்றக் கதவுகளுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது.

அவன் உட்பிராகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான்.

மேற்கூறப்பட்ட எல்லாவற்றின்படியும் செய்து நாலாம் வருஷம் சீப் மாதம் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போட்டு, பதினோராம் வருஷம்  பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயம் முழுவதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டி தீர்ந்தது; அதை கட்டிமுடிக்க ஏழு வருஷம் சென்றது. 

பிரியமானவர்களே, இந்த ஆலயம் கட்டுவது நம் சரீரம் கிறிஸ்துவின் ஆலயமாக விளங்க வேண்டும் என்பதற்காக இதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  இந்த ஆலயம் நம் உள்ளத்தில் மூன்றாம் நாள் எழும்புகிறது, எப்படியென்றால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பாவத்திற்கு மரித்தால், அவருடைய ஆவியால் நம் ஆத்துமா எழும்புகிறது.  பின்பு கிறிஸ்து தான் கர்த்தருடைய தூதனாக நம் ஆத்துமாவாகிய தேவனுடைய ஆலயத்தில் விளங்குகிறார்.  மற்றும் நம்முடைய உள்ளத்தில் பரிபூரண கிருபை உண்டாயிருக்க வேண்டும் என்பதும், அந்த கிருபையில் நாம் நிறையப்படும் போது ஆலயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்திருக்கும்  என்பதும் இங்கு வர்ணிக்கப்படுகிறது.    இவ்விதமாக பரிபூரண கிருபைப் பெற்று கர்த்தரின் மகிமையால் நிறைந்திருந்தால் நாம் தேவனுடைய ஆலயமாகிறோம்.  இவ்விதமாக ஒப்புக் கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.