தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 69:9
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் வாசம் பண்ணும் இடமாகிய நம்முடைய உள்ளத்தில் அந்நிய ஸ்திரீக்கு இடம் கொடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா பரிபூரண கிருபை பெற்றதாக காணப்பட வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தப்படியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 7:1-13
சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது.
அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறு முழ நீளமும், ஐம்பது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான்.
ஒவ்வொரு வரிசைக்குப் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின் மேல் கேதுருக்களால் மச்சுப்பாவியிருந்தது.
மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.
ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் எல்லாம் சதுரமாயிருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.
ஐம்பது முழ நீளமும் முப்பது முழ அகலமுமான மண்டபத்தையும் தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராயிருந்தது.
தான் இருந்து நியாயம் தீர்க்கிறதற்கு நியாயாசனம் போட்டிருக்கும் ஒரு நியாயவிசாரணை மண்டபத்தையும் கட்டி, அதின் ஒருபக்கம் துவக்கி மறுபக்கமட்டும் கேதுருப்பலகைகளால் தளவரிசைப் படுத்தினான்.
அவன் வாசம்பண்ணும் அவனுடைய அரமனை மண்டபத்திற்குள்ளே அதேமாதிரியாகச் செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் விவாகம்பண்ணின பார்வோனின் குமாரத்திக்கும் அந்த மண்டபத்தைப்போல ஒரு மாளிகையைக் கட்டுவித்தான்.
இவைகளெல்லாம், உள்ளும் புறம்பும், அஸ்திபாரமுதல் மேல்திரணைகள்மட்டும், வெளியே இருக்கும் பெரிய முற்றம்வரைக்கும், அளவுபடி வெட்டி வாளால் அறுக்கப்பட்ட விலையேறப்பெற்ற கற்களால் செய்யப்பட்டது.
அஸ்திபாரம் பத்துமுழக் கற்களும், எட்டுமுழக் கற்களுமான விலையேறப்பெற்ற பெரிய கற்களாயிருந்தது.
அதின்மேல் உயர அளவுபடி பணிப்படுத்தின விலையேறப்பெற்ற கற்களும், கேதுருமரங்களும் வைக்கப்பட்டிருந்தது.
பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை பணிப்படுத்தின கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது.
ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான்.
மேற்கூறிய வசனங்களில் சாலொமோன் தன் அரண்மனை முழுவதையும் கட்டி முடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது. அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறு முழ நீளமும், ஐம்பது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது; அதை கேதுரு மர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின் மேல் கட்டினான். ஒவ்வொரு வரிசையிலும் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின் மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின் மேல் கேதுருக்களால் மச்சுப்பாவியிருந்தது. மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது. ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் எல்லாம் சதுரமாயிருந்தது. ஜன்னல்கள் ஐம்பது முழ நீளமும் முப்பது முழ அகலமுமான மண்டபத்தையும தூண்கள் நிறுத்தி கட்டினான்; அந்த மண்டபத்தையும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராயிருந்தது. தான் இருந்து நியாயம் தீர்க்கிறதற்கு நியாயாசனம் போட்டிருக்கும் ஒரு நியாயவிசாரணை மண்டபமும் கட்டி, அதின் ஒரு பக்கம் துவக்கி மறுபக்கம் வரைக்கும் கேதுரு பலகைகளால் தள வரிசைப்படுத்தினான். அவன் வாசம் பண்ணும் அவனுடைய அரமனை மண்டபத்திற்குள்ளே அதே மாதிரியாக செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்திக்கும் அந்த மண்டபத்தை போல் ஒரு மாளிகையை கட்டுவித்தான். இவைகளெல்லாம், உள்ளும் புறம்பும், அஸ்திபார முதல் மேல்திரணைகள் மட்டும் வெளியே இருக்கும் பெரிய முற்றம்வரைக்கும், அளவுபடி வெட்டி வாளால் அறுக்கப்பட்ட விலையேறப்பெற்ற கற்களால் செய்யப்பட்டது. அஸ்திபாரம் பத்துமுழக் கற்களும், எட்டு முழக்கற்களுமான விலையேறப்பெற்ற பெரிய கற்களாயிருந்தது; அதின் மேல் உயர அளவுபடி பணிப்படுத்தின விலையேறப்பெற்ற கற்களும், கேதுரு மரங்களும் வைக்கப்பட்டிருந்தது. பெரிய முற்றத்திற்கு சுற்றிலும் மூன்று வரிசை கேதுரு மர உத்திரங்களாலும் ஒரு வரிசை பணிப்படுத்தின கற்களாலும் செய்யப்பட்டிருந்தது. கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிரகாரத்திற்கும், அதின் முன் மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது. ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனை தீருவிலிருந்து அழைப்பித்தான்.
பிரியமானவர்களே, ராஜாவாகிய சாலொமோன் கர்த்தரின் ஆலயம் கட்டி முடித்து தனக்கு வாசம் பண்ணுவதற்கு ஒரு அரண்மனை கட்டுகிறான். அதில் உள்ள கற்களும், மரங்களும் விலையேறப்பெற்றதாக காணப்படுகிறது. அங்கு நியாயவிசாரணை மண்டபமும் கட்டுகிறான். பிரியமானவர்களே இது நமக்கு திருஷ்டாந்தத்திற்காக கட்டப்பட்டது. காரணம் என்னவென்றால் நம்மில் ராஜாதி ராஜாவாகிய கிறிஸ்து வாசம் பண்ணும் படி நம் உள்ளில் அவருக்காக அரண்மனை கட்டப்படும் என்றும்; அது தேவனுடைய வீடாகவும் கருதப்படுகிறது. அங்குதான் கர்த்தர் வாசம் பண்ணி, அவர் உலாவுகிற அரண்மனையாக விளங்குகிறது. ஆனால் சாலொமோன் தன் வாழ்க்கையில் கர்த்தர் கற்ப்பித்ததை கைக்கொள்ளாமற் போகிறான். என்னவென்றால் பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளுக்கென்று ஒரு மாளிகையை கட்டுவித்தான். இவ்விதம் அவன் கர்த்தரின் கட்டளையை மீறி அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணினது மட்டுமல்லாமல் அவளுக்காக மாளிகையையும் கட்டுவிக்கிறான். மேலும் தீருவிலிருந்து ஈராமை அழைப்பித்தான். ஆதலால் கர்த்தர் இவனுக்கு கொடுத்த விளைவுகள் பின்பு அவனுடைய வாழ்வில் நடந்தேறுகிறதை வாசிக்க முடியும். ஆகையால் தாம் கர்த்தருக்குரிய வீட்டை அந்நிய ஸ்திரீகளுக்கு இடம் கொடாதபடி அவருக்காக மாத்திரம் பிரதீஷ்டிக்கிறவர்களாக வேண்டும். இவ்விதமாக நம்மை கர்த்தருக்காக மட்டும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.