தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோபு 23:3 

நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்துசேர்ந்து

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் ஆலயமாக விளங்குவோமானால் சத்திய வசனத்தால் நிறைந்தவர்களாயும், கிறிஸ்துவின் தீபம் நம் தலையின் மேல் பிரகாசிக்கிறதாயும் இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் வாசம் பண்ணும் இடமாகிய நம்முடைய உள்ளத்தில் அந்நிய ஸ்திரீகளுக்கு இடம் கொடாதபடி நம்மை ஜாக்கிரதையாக காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

 1இராஜாக்கள் 7:14-20 

 இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன்; இவன் தகப்பன் தீருநகரத்தானான கன்னான்; இவன் சகலவித வெண்கல வேலையையும் செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உள்ளவனாயிருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து, அவன் வேலையையெல்லாம் செய்தான்.

இவன் இரண்டு வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூண் பதினெட்டு முழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவு பன்னிரண்டு முழ நூலளவுமாயிருந்தது.

அந்தத் தூண்களுடைய தலைப்பில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாயிருந்தது.

தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் எவ்வேழாக இருந்தது.

தூண்களைப் பண்ணின விதமாவது: தலைப்பின்மேலுள்ள கும்பங்களை மூடும்படிக்கு, கும்பங்கள் ஒவ்வொன்றிலும் பின்னலின்மேல் சுற்றிலும் இரண்டு வரிசை மாதளம்பழங்களைச் செய்வித்தான்.

மண்டபத்தின் முன்னிருக்கும் அந்தத் தூண்களுடைய தலைப்பின்மேலுள்ள கும்பங்கள் லீலி புஷ்பங்களின் வேலையும், நாலுமுழ உயரமுமாயிருந்தது.

இரண்டு தூண்களின்மேலுமுள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகே இருந்த இடத்தில் விம்மிய இரு நூறு மாதளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது.

மேற்கூறிய வசனங்களில் ராஜாவாகிய சாலொமோன், தான் விவாகம் பண்ணின பார்வோனின் குமாரத்திக்கு மாளிகையை கட்டுவித்தான்.  பின்பு  தீருவிலிருந்து ஈராம் என்பவனை அழைத்தனுப்புகிறான்.  இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய  ஒரு கைம்பெண்ணின் மகன்; இவன் தகப்பன் தீரு நகரத்தானான கன்னான்.  இவன் சகல வெண்கல வேலையும் செய்யதக்கவனான யுக்தியும், புத்தியும்,அறிவும் உள்ளவனாயிருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து, அவன் வேலையையெல்லாம் செய்தான்.  இவன் செய்த இரண்டு வெண்கல தூண்கள் ஒவ்வொன்றும் பதினெட்டு முழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவும் பன்னிரண்டு முழ நூலளவுமாயிருந்தது.  அந்த தூண்களுடைய தலையின் மேல் வைக்க, வெண்கலத்தால் வார்ப்பிக்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்;  ஒவ்வொரு கும்பமும் ஐந்து முழ உயரமுமாயிருந்தது. மேலும் தேவாலயத்தின் உள்ளால் உள்ள கலைகள் செய்கிற விதங்கள் எல்லாம்

 1இராஜாக்கள் 7: 17-21

தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் எவ்வேழாக இருந்தது.

தூண்களைப் பண்ணின விதமாவது: தலைப்பின்மேலுள்ள கும்பங்களை மூடும்படிக்கு, கும்பங்கள் ஒவ்வொன்றிலும் பின்னலின்மேல் சுற்றிலும் இரண்டு வரிசை மாதளம்பழங்களைச் செய்வித்தான்.

மண்டபத்தின் முன்னிருக்கும் அந்தத் தூண்களுடைய தலைப்பின்மேலுள்ள கும்பங்கள் லீலி புஷ்பங்களின் வேலையும், நாலுமுழ உயரமுமாயிருந்தது.

இரண்டு தூண்களின்மேலுமுள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகே இருந்த இடத்தில் விம்மிய இரு நூறு மாதளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது.

அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலது புறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் எல்லாம் தூண்களின் கலைகள் எழுதப்பட்டிருக்கிறது.  மேலும் அந்த இரண்டு தூண்களில் வலது புறத்தில் நிறுத்தப்பட்ட தூணுக்கு யாகீன் என்றும், இடது புறத்தில் நிறுத்தப்பட்ட தூணுக்கு போவாஸ் என்றும் பெயரிட்டான்.  தூண்களுடைய சிகரத்தில் லீலி புஷ்ப வேலை செய்யப்பட்டு,இவ்விதமாய் தூண்களின் வேலை முடிந்தது. 

பிரியமானவர்களே தேவாலயத்தின் உள் கலைகள் செய்யப்படுகிறது என்றால், உள்ளான மனுஷன் கர்ததரின் வார்த்தைகளால் இரட்சிக்கப்பட்டு, கிருபையினால் அலங்கரிக்கப்பட்டு, மகிமையால் நிறையப்படுகிறதை காட்டுகிறார்.  மேலும் இரண்டு தூண்கள் ஆவியின் அபிஷேகம் பெற்றவர்களாகிய மோசே எலியா என்பவர்களின் சாட்சிகளும்,வெண்கலத்தால் வார்ப்பிக்கப்பட்ட கும்பங்கள் என்பது சத்திய வசனத்தினால் நிறைந்தவர்களாயும்,  அதின் தலையின் மேல் லீலி புஷ்பம் என்பது, நீதியின் சூரியனாக கிறிஸ்து அபிஷேகம் பெற்றவர்களின் தலையின் மேல் உதிக்கிறார் என்பதையும் விளக்குகிறார்.  இவ்விதமாக திருஷ்டாந்தப்படுத்துவதன் நோக்கம், நாமும் அவ்விதம் கிருபையினால் நிறைந்து கர்த்தரின் ஆலயமாக விளங்க வேண்டும்.  இவ்வித ஆசீர்வாதங்களால் நாம் ஆசீர்வதிக்கப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.