தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கலாத்தியர் 3:12

நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கட்டாயமாக நியாயப்பிரமாண கற்பனை கைக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆலயமாகவும், பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெற்றவர்களாக காணப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது

1இராஜாக்கள் 8:1-9 

அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான்.

இஸ்ரவேல் மனுஷரெல்லாரும் ஏழாம் மாதமாகிய ஏத்தானீம்மாதத்துப் பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கூடிவந்தார்கள்.

இஸ்ரவேலின் மூப்பர் அனைவரும் வந்திருக்கையில், ஆசாரியர் கர்த்தருடைய பெட்டியை எடுத்து,

பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்து கொண்டுவந்தார்கள்; ஆசாரியரும், லேவியரும், அவைகளைச் சுமந்தார்கள்.

ராஜாவாகிய சாலொமோனும் அவனோடேகூடின இஸ்ரவேல் சபையனைத்தும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டார்கள்.

அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.

கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.

தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கே தான் இருக்கிறது.

இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.

மேற்கூறிய வசனங்களின் படி ராஜாவாகிய சாலொமோன் கர்த்தரின் ஆலயத்திற்க்குரிய வேலைகள் செய்து முடித்து, தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துக்கொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் கொண்டு வந்து கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்த பின்பு, கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டு வரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திர பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் வம்ச தலைவர் அனைவரையும் தன்னிடத்தில் கூடிவரசெய்தான்.  ஆதலால் ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதத்து பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கூடி வந்தார்கள்.  அவ்விதமாக எல்லாரும் கூடி வந்திருக்கையில் பெட்டியையும், ஆசரிப்பு கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்துக் கொண்டு வந்தார்கள்.  லேவியரும் ஆசாரியரும் அவைகளை சுமந்தார்கள்.  ராஜாவாகிய சாலொமோனும் அவனோடே கூடின இஸ்ரவேல் சபையனைத்தும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையையும், கணக்குமில்லாத திரளான ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டார்கள்.  அப்படியே ஆசாரியர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகா பரிசுத்த ஸ்தானத்திலே கேரூபீன்களுடைய செட்டைகளின் கீழே கொண்டு வந்து வைத்தார்கள். கேரூபீன்கள் பெட்டியிருக்கும் தங்கள் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளை விரித்து, உயர இருந்து பெட்டியையும், அதன் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.  மேலும் கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியில் , இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட பின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கைப் பண்ணுகிற போது, மோசே ஓரேபிலே அந்த பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் வேறொன்றும் அதிலே காணப்படவில்லை. 

பிரியமானவர்களே,  மேலே கூறப்பட்டவைகள் ; நாம் தேவனுடைய ஆலயமாக விளங்கின பின்பு, நம் உள்ளான மனுஷன் சீயோனாகவும், அங்கிருந்து கர்த்தருடைய பெட்டி என்பது கிறஸ்துவாகிய கர்த்தரின் மகிமை, இவை கர்த்தரின் சந்நிதி ஸ்தானமாகிய நம்முடைய ஆத்துமாவில், விளங்கும்படியாக திருஷ்டாந்தத்திற்கு ஆசாரியர்களும், லேவியருமாகிய அவர்கள் கர்த்தரின் மகிமை கர்த்தரின் சந்நிதி ஸ்தானமாகிய மகா பரிசுத்த ஸ்தலத்தில் விளங்கும் படியாக அங்கு வருவார்கள்.  பின்பு அதனை தூத சேனைகள் காக்கும் என்பதனை விளக்கி,  செட்டைகளை விரித்து இருக்கும் கேரூபீன்கள் கீழே வைக்கப்படுகிறது.  அவைகள் கர்த்தரின் பெட்டி மற்றும் அதன் தண்டுகள் யாவையும் மூடியிருக்கும்.  அதனுள் மேசே ஓரேபிலே வைத்திருந்த கர்த்தரின் கட்டளைகள் அதில் காணப்படுகிறது என்றால்;  கர்த்தரின் மகிமை நம்மில் விளங்க வேண்டுமானால் கர்த்தர் ஓரேபிலே வைத்து மேசேயிடத்தில் கற்பலகையில் எழுதப்பட்ட கற்பனைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.  அதில் கிறிஸ்து மகிமையாக விளங்கிக் கொண்டிருப்பார் ; அப்போது நாம் ஒவ்வொருவரும் கர்த்தருக்கு ஸ்தோத்திர பலியிட்டு தேவனை மகிமைப்படுத்துவோம். அப்படியாக நாம் கர்த்தரின் மகிமையால் எப்போதும் நிறைந்தவர்களாக காணப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.