தேவனுக்கே மகிமையுண்டாவதாக

II தெசலோனிக்கேயர்  2:14 

நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய சரீரமாகிய கிறிஸ்துவின் ஆலயத்தில் அந்நிய அலங்காரங்களுக்கு இடம்கொடுக்கக் கூடாது.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாமே கிறிஸ்துவின் ஆலயமாக விளங்குகிறோம் என்று தியானித்தோம்.  அடுத்தபடியாக நாம் தியானிப்பது

 1இராஜாக்கள் 9:1-13 

 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு,

கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார்.

கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.

நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால்,

இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின்மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில்,

நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச் சொல்லாகவும் இருப்பார்கள்.

அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு; கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.

அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக் கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.

சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷம் முடிவிலே,

தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.

ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டு வந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை.

அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான்.

மேற்கூறபட்ட வசனங்களில் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜ அரண்மனையையும், தான் செய்ய வேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்த பின்பு, கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்கு தரிசனமானது போல இரண்டாந்தரமும் தரிசனமாகி, அவனிடம் சொன்னது என்னவென்றால், நீ என் சமூகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும், உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கதக்கதாக, அதை பரிசுத்தபடுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.  அல்லாமலும் கர்த்தர் சொன்னது 

1இராஜாக்கள் 9:4,5 

நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால்,

இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின்மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

மேலும் கர்த்தர் சொன்னது 

1இராஜாக்கள் 9:6-8  

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில்,

நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச் சொல்லாகவும் இருப்பார்கள்.

அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு; கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் எழுதப்பட்டவைகள் எல்லாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாதவர்கள் மத்தியிலே நடக்கும் போது, இவர்களை காண்பவர்கள் சொல்கிற காரியம்

1இராஜாக்கள் 9:9    

அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக் கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.

அல்லாமலும் கர்த்தருடைய ஆலயமும், ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளை கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷ முடிவிலே தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்கு கேதுரு மரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொண்டு வந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான்.  ஈராம் தனக்கு சாலொமோன் கொடுத்த பட்டணங்களை பார்க்கும்படி வந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை.  அதனாலே அவன்; என் சகோதரனே, நீர் எனக்குக்கொடுத்த இந்த பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான்.  அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கி வருகிறபடி காபூல் நாடு என்று பெயரிட்டான்.

பிரியமானவர்களே, கர்த்தரின் ஆலயமாக நாம் விளங்கினால் அவர் நமக்கு கற்பித்திருக்கிற எல்லா கட்டளை, கற்பனைகளையும் கைக்கொண்டு உத்தம இருதயத்தோடு நடந்தால் மட்டுமே நம்மிடத்தில் கிறிஸ்துவின் சிங்காசனம் என்றைக்கும் நிலைத்திருக்கும்.  மேலும் அவருடைய சொல் கேளாமல் வேறே தேவர்களை சேவித்து, அவைகளை பணிந்து கொள்கிறவர்களை குறித்து, கர்த்தர் சொல்வது என்னவென்றால் அவர்களை என் சமூகத்தை விட்டு தள்ளுவேன்.  அப்படிபட்டவர்கள் சகல ஜனங்களுக்கும் பழமொழியாகவும், வசைசொல்லாகவும் இருப்பார்கள்.  கர்த்தரின் ஆலயம் கட்டின ராஜாவாகிய சாலொமோன் தீருவினிடத்திலிருந்து கேதுரு மரங்களும், மற்றும் ஆலயத்துக்குரியவைகளை கேட்டு வாங்கினதினால் அவன் அதற்கு உரிய இடத்தை பெற்றுகொள்ளும்படி சாலொமோன் இருபது பட்டணங்களை கொடுத்தது, அவனுக்கு பிரியமில்லாமல் இருக்கிறது.  இதற்கு காரணம் என்னவென்றால் அவன் நல்ல பட்டணங்களை நாடுகிறான்.  ஆதலால் இந்த இருபது பட்டணத்திற்கும் காபூல் நாடு என்று பெயரிடுகிறான்.  ஆதலால் பிரியமானவர்களே நாம் கர்த்தரின் ஆலயமாக விளங்கினால் அந்நியனுடைய பொருட்களுக்கு நம்முடைய சரீரத்தில் இடம் கொடுக்காமல் ஜாக்கிரதையாக காணப்பட வேண்டும்.  ஏனென்றால் நம்முடைய முக்கியமான பொருளாக இருக்கிற நம் ஆத்துமாவை வஞ்சிப்பதற்கு சாத்தான் வகை தேடுவான்.  ஆதலால் நாம் வஞ்சிக்கபட்டு போகாதபடி ஜாக்கிரதையாக காணப்படும்படியாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.