தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 11:31

தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கிருபைகளை இழந்து போகாதபடி காத்துக்கொள்ளும்படியாக,  நம் உள்ளத்தில் மறைவாக இருக்கிற தேவ ஞானத்தை வெளிப்படுத்துவதில் ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவோடு விசுவாசமும், பரிசுத்தவான்களின் ஐக்கியமும் காணப்படவேண்டும் என்பதனை குறித்து நாம் தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 இராஜாக்கள் 10:1-5 

கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக,

மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங்குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்.

அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான், அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை.

சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும்,

அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,

மேற்கூறிய வசனங்களின் பிரகாரம் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஞானத்தைப்பெற்ற பின், கர்த்தருடைய நாமத்தைக் குறித்து சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீரத்தி சேபாவின் ராஜஸ்திரீக்கு கேள்வியான போது, அவன் விடுகதைகளினால் அவனை சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும் கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும், இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது தன் மனதில் இருந்த எல்லாவற்றையும் குறித்து சாலொமோனிடத்தில் சம்பாஷித்தாள்.  அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளெல்லாம் விடுவித்தான், அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைப்பொருளாயிருக்கவில்லை.  சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும், அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசைகளையும்,  அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரகாரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்ட போது அவள் ஆச்சரியத்தால் பிரமைக்கொண்டு, ராஜாவை நோக்கி சேபாவின் ராஜஸ்திரீ சொன்னது 

1இராஜாக்கள் 10:6-10 

ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று.

நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.

உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.

உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.

அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை.

மேற்கூறப்பட்ட வசனங்கள் எல்லாம் சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனை புகழ்ந்து, பின்னும் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்.  சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுக்கு கொடுத்த கந்தவர்க்கங்களின் அளவு பின்பு ஒருக்காலும் வரவில்லை.  

பிரியமானவர்களே, முந்தின வார்த்தைகள் எல்லாம் கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தப்படுத்தியது என்னவென்றால் கர்த்தரால் நாம் அபிஷேகம்பண்ணபட்டு, கர்த்தரால் நாம் ஞானம் பெற்றுக்கொள்ளும்போது, இது அநேகர்கள் அறியப்படுவதற்கு ஏதுவாகும்.  ஆதலால் இதனை அறியும் போது, உள்ளத்தில் ஏற்கனவே இருந்த பொறாமையின் ஆவிதான் அங்கிருந்து நம்மை சோதிக்கும்படியாக நம் உள்ளத்தில் எழுந்து வருகிறது என்பதனை திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால் நம் இருதயத்தையும் வெளிப்படுத்தப்படுகிற ஞானத்தையும் கண்டறியும்படியாக வருவார்கள்.  அப்படியாக நம் உள்ளத்தில் உள்ளவைகளெல்லாம் கண்டறிந்து கர்த்தரால் நமக்கு தந்த ஆசீர்வாதங்களை நாம் இழந்து போக தக்கதாக புகழ்வது போல் புகழ்ந்து, நம்முடைய இருதயம் அதன் மேல் சாயும் படியாக அநேக உலக பொருட்களால் நம்மை நிரப்பும்.  அப்போது நம்முடைய இருதயம் அதன் மேல் சாயும். அப்போது கர்த்தர் நமக்கு தந்த கிருபையைகளை நாம் இழந்து விடுவதற்கு அது ஏதுவாகும்.  ஆதலால் எந்த பூமியின் ராஜ ஸ்திரீயாகிய எந்த பரஸ்திரீக்கும் நம் உள்ளத்தில் இடம் கொடாதபடி பூமிக்குரியபொருட்களின் மேல் ஆசைக்கொள்ளாதபடி, மற்றும் யாராவது வந்து புகழ்ந்தால் அதனை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளாதபடி ஜாக்கிரதையாக நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.