தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 16:20

விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் பெற்ற ஞானத்தை, ஜாக்கிரதையாக காத்துக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் கிருபைகளை இழந்து போகாதபடி காத்துக்கொள்ளும்படியாக, நம் உள்ளத்தில் மறைவாக இருக்கிற தேவ ஞானத்தை வெளிப்படுத்துவதில் ஜாக்கிரதையோடு காணப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.   

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 10: 11 – 16

ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது.

அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனைமரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை.

ராஜாவாகிய சாலொமோன் தானே சந்தோஷமாய்ச் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடே தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள்.

சாலொமோனுக்கு வியாபாரிகளாலும், சுகந்த திரவிய வர்த்தகராலும், அரபிதேசத்து சகல ராஜாக்களாலும், மாகாணங்களின் அதிபதிகளாலும் வந்த பொன்னையல்லாமல்,

ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.

சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது.

மேற்கூறப்பட்ட வசனங்களில் சேபாவின் ராஜஸ்திரீ  சாலொமோன் ராஜாவுக்கு கொண்டு வந்ததும், அதன் பின்பு ஓப்பீரிலிருந்து பொன்னைக்கொண்டு வருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனை மரங்களையும், இரத்தினங்களையும் கொண்டு வந்தது.  அந்த வாசனை மரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரண்மனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்கு சுரமண்டலங்களையும், தம்புருக்களையும் உண்டுபண்ணினான்; அப்படிபட்ட வாசனை மரங்களால் பிற்பாடு வந்ததுமில்லை, இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை.  ராஜாவாகிய சாலொமோன் தானே சந்தோஷமாய் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல்,அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடடே தன் தேசத்திற்கு திரும்பி போனாள்.  சாலொமோனுக்கு வியாபாரிகளாலும், சுகந்த திரவிய வர்த்தகராலும், அரபி தேசத்துச் சகல ராஜாக்களாலும் மாகாணங்களிலும் அதிபதிகளாலும் வந்த பொன்னையல்லாமல் ஒவ்வொரு வருஷத்திலும் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்தாயிருந்தது.  சாலொமோன் ராஜா அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளை செய்வித்தான்.  

பிரியமானவர்களே சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனிடத்திற்கு கொண்டு வந்து கொடுத்த பொருட்களை காட்டிலும் அதிகமான வெகுமதி சாலொமோன் அவளுக்கு கொடுத்து அனுப்புகிறான்.  அதன்பின்பு அவள் விருப்பப்பட்டு கேட்டதெல்லாவற்றையும் கொடுத்து அனுப்புகிறான்; இவையென்னவென்றால்  பூமியின்யெல்லையிலிருந்து  வந்த ராஜஸ்திரீயானால்; அவள் பரஸ்திரீ என்பதனை கர்த்தர் தெளிவுப்படுத்துகிறார். இதன் திருஷ்டாந்தம்  என்னவென்றால் பரஸ்திரீக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுத்தால் அவள் நம் உள்ளத்தில் இருக்கிற ஆவிக்குரிய கிருபைகளை இழந்து விடும் படியாக பல உலக ஆசைகளை உள்ளத்தில் கொண்டு வந்து நம்மிடத்தில் இருக்கிற ஆசீர்வாதங்களை அவள் எடுத்துக்கொள்ளும்படியாக ஆசைபடுவாள். அப்படியாக தான் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து விட்டு அவள் விரும்பினதை கேட்க, அவன் அவள் விருப்பத்திற்கேற்ற எல்லாம் கொடுத்து அனுப்புகிறான்.  இந்த காரியங்களெல்லாம் சாலொமோனுடைய வாழ்க்கையில் கர்த்தர் கொடுத்த ஞானத்தை கெடுப்பதற்கு காரணமாக இருக்கிறதுஎன்பதனை அ்ப்போது அவன் புரிந்து கொள்ளாமல் இருந்தான். அதேபோல் நம்மோடு பொறாமையினால் வருகிறவர்களிடம் நம் உள்ளத்தை வெளிப்படுத்தக்கூடாது.  ஆதலால் நம்முடைய உள்ளத்தை,  ஒருபோதும் எந்த விலை உயர்ந்த பொருட்களாலும் வஞ்சிக்கிற ஆவிக்கு இடம் கொடுக்காதபடி காத்துக்கொள்ள வேண்டும்.  இவ்விதமாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.