தேவனுக்கே மகிமையுண்டாவதாக
I யோவான் 2: 2
நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கிருபையிலும், சத்தியத்திலும் வளர்ந்து உண்மையுள்ளவர்களாக வாழ்வோமானால் கிறிஸ்து நம்மிலிருந்து பிரகாசித்து அநேக பாவிகளை இரட்சிக்கிறவராக விளங்கிக்கொண்டிருப்பார்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரால் பெற்ற ஞானத்தை, ஜாக்கிரதையாக காத்துக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 10:15-29
ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.
சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது.
அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கு மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான்.
ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான்.
அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச்சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச் சாய்மானங்கள் அருகே நின்றது.
ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை.
ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை.
ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.
பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான்.
சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.
வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள்.
சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான்.
எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள்.
எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக் காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டு வரப்பட்டது.
மேற்கூறப்பட்ட வசனங்களில் சாலொமோன் அடித்த பொன் தகட்டால் இருநூறு பரிசைகளை செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கும் அறுநூறு சேக்கல் நிறை பொன் சென்றது. அடித்த பொன் தகட்டால் முந்நூறு கேடகங்களை செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான். பின்னும் தந்தத்தினால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதை பசும்பொன் தகட்டால் மூடினான். அந்த சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்புக்கு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைசாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைசாய்மானங்கள் அருகே நின்றது. ஆறு படிகளின் மேலும் இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படி பண்ணபடவில்லை. மேலும் ராஜாவுக்கு இருந்த பானம் பாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும் பொன்னுமாயிருந்தது. ஒன்றும் வெள்ளியினால் செய்யபடவில்லை. சாலொமோனுடைய நாட்களில் வெள்ளி ஒரு பொருளாக எண்ணப்படவில்லை. மேலும் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்திற்கு ஒரு முறை பொன்னையும், வெள்ளியையும், யானை தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டு வரும். பூமியின் ராஜக்களை பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞனத்திலும் சிறந்தவனாயிருந்தான். சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள். வருஷா வருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளி பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும, வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும், கொண்டு வருவார்கள். சாலொமோன் இரதங்களையும், குதிரை வீரரையும் சேர்த்தான். அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது. பன்னீராயிரம் குதிரை வீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்தில் வைத்திருந்தான். எருசலேமிலே ராஜா வெள்ளியை கற்களை போலவும், கேதுரு மரங்களைப் பள்ளதாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள் போலவும் அதிகமாக்கினான். சாலொமோன், தனக்கு குதிரைகளையும், புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான். ராஜாவின் வர்த்தகர்கள் புடவைகளை ஒப்பந்த விலைகிரயத்திற்கு வாங்கினார்கள். எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலையும் அறுநூறு வெள்ளிகாசும், ஒவ்வொரு குதிரையின் விலையும் நூற்றைம்பது வெள்ளி காசுமாயிருந்தது. இந்த பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களுக்கும், சீரியரின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய் கொ்டு வரப்பட்டது.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்டிருக்கிறவைகள் கிறிஸ்துவாகிய மணவாட்டி சபைக்காக திருஷ்டாந்தப்படுத்தபட்டிருக்கிறது. எப்படியெனில் கிறிஸ்துவின் சிங்காசனம் நம்மில் வைக்கப்படுகிறதாகவும், அவர் உட்காரும் இடத்தில் இரண்டு கைசாய்மானங்கள் வைக்கப்பட்டு அதில் இரண்டு சிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கிறதும் அதனை சுற்றிலும் பன்னிரண்டு சிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கிறதாகவும் செய்யப்பட்டதன் காரணம் அவருடைய இருபுறத்திலும் இரண்டு அபிஷேகம் பெற்றவர்கள் நிற்பதையும், அவர்கள் பரலோகத்தின் அனுபவத்தோடு கூட நிற்கிறார்கள் என்பதனை கர்த்தர் விளக்குகிறார் என்னவெனில்
சகரியா 4:11-14
பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன்.
மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன்.
அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன்.
அப்பொழுது அவர்; இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.
மேற்கூறப்பட்டவைகள் இதன் எடுத்துக்காட்டாக கர்த்தர் நமக்கு விளக்குகிறார். மேலும் பன்னிரண்டு சிங்கங்கள் வைக்கப்பட்டிருக்கிறது என்பது பன்னிரண்டு கோத்திர முற்பிதாக்களுக்கு திருஷ்டாந்தமும், அதன் நடுவில் ஆயுதங்கள் தரித்தவராக கிறிஸ்துவும் வெளிப்படுவதை திருஷ்டாந்தப்படுத்துகிறார். அல்லாமலும் இதனை குறித்த விளககம்
வெளி 11:4-6
பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.
ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும்.
அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு
மேலும் கிறிஸ்துவின் கிருபையும் சத்தியமும் தான் சாலொமோன் பொன்னால் அடித்த பரிசைகளும், கேடகங்களும், இவைகள் எல்லாம் நம் உள்ளத்தில் உள்ள நற்கிரியைகள். இவ்விதமாக எல்லாமே கர்த்தரின் மகிமையால் நாம் நிறையப்பட நமக்கு தெளிவுப்படுத்துகிறார். ஆனால் இதனுள் கர்த்தரின் பானபாத்திரமாக பரிசுத்த பந்திக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுக்கிறவர்களாக வேண்டும். ஆனால் ஈராம் பல விலையுயர்ந்த பலபொருட்களினால் மற்றும் அந்நிய ஆராதனைக்குரிய வஸ்துக்களினால் நம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை சேதபடுத்தும்படியாக வரும் போது விவேகத்தை பேணிக்கொள்ளுகிறவர்களாக இருக்க வேண்டும். அவ்விதம் நாம் உண்மையோடு கர்த்தருக்கு முன்பாக இருப்போமானால் பாவத்தின் அடிமையில் வாழ்கிறவர்களை அவர் விடுதலையாக்கி இரட்சிப்பின் வஸ்திரத்தை அவர்களுக்கு தரித்து, இவ்விதமாக நம்மை ஒப்பந்த விலைக்கிரமாக்கி கொள்கிறார். இப்படியாக எல்லாவித ஜாதிகளையும் அவர் இரட்சிக்க வல்லவராக விளங்குகிறார். அப்படியாக அவருடைய சித்தத்திற்கு கீழ்படிந்தவர்களாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.