தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 25:21 

உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவை அந்நிய ஸ்திரீகளின் கிரியைகளுக்கு தப்புவித்து, உத்தம இருதயத்தோடு கர்த்தரை பின் பற்றுவோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிருபையிலும், சத்தியத்திலும் வளர்ந்து உண்மையுள்ளவர்களாக வாழ்வோமானால் கிறிஸ்து நம்மிலிருந்து பிரகாசித்து அநேக பாவிகளை இரட்சிக்கிறவராக விளங்கிக்கொண்டிருப்பார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 11:1- 4

ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான்.

கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.

அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்.

சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நியதேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் ராஜாவாகிய சாலொமோன், பார்வோன் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரன அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசை வைத்தான்.  கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை  நோக்கி சொல்லியிருந்த காரியம் என்னவென்றால் நீங்கள் அவர்களண்டைக்கும், அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தை சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்.  ஆனால் சாலொமோன் அவர்கள் மேல் ஆசை வைத்து அவர்களோடு ஐக்கியமாயிருந்தான்.  சாலொமோனுக்கு பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்.  அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போக பண்ணினார்கள்.  அவன் வயது சென்ற போது அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களை பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள். அதினால் அவன் இருதயம்  தன் தகப்பனுடைய இருதயத்தை போல் தன் தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாயிருக்கவில்லை. 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட பகுதியில் கர்த்தர் சாலொமோனுக்கு  விசேஷித்த ஞானத்தைககொடுத்திருந்தும், அவன் ராஜ்யபாரம் செய்துக்கொண்டிருக்கும் போது பார்வோனின் குமாரத்தியின்மேல் ஆசை வைத்தான் என்பது திருஷ்டாந்தத்தோடு  கூறப்பட்டிருக்கிறது என்னவெனில் நாம் கிறிஸ்துவினால் அபிஷேகம் பெற்று, விசுவாச  வாழ்க்கையில் வளரும்போது,விட்டுவிட்ட பாரம்பரிய பாவ வாழ்க்கையை மீண்டும் பின்பற்றி அதனை நேசிப்போமானால், அந்நிய ஸ்திரீயாகிய பரஸ்திரீயின் மேல் மோகித்திருக்கிறோம் என்றதால், கர்த்தர் அதனை அந்நிய தேவர்களை பின்பற்றுகிறோம் என்றும், அவ்விதம் நம்முடைய இருதயம் கர்த்தரை விட்டு வழுவி போகிறதால், நாம் கர்த்தரின் கட்டளையை விட்டுவிட்டபடியால், நாம் உத்தம இருதயத்தோடு கர்த்தரை பின்பற்றவில்லை என்கிறார்.  ஆதலால் இதனை வாசிக்கிற  அன்பானவர்களே, நாம் கர்த்தர் நமக்கு தந்திருக்கிற கட்டளைப்பிரகாரம் நாம் கீழ்படிதலை கற்றுக்கொண்டு உத்தம இருதயத்தோடு கர்த்தரை பின்பற்றும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.