தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 19:13

துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் கற்பித்த கட்டளைகள் மீறாதபடி ஜாக்கிரதையாக காணப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமாவை அந்நிய ஸ்திரீகளின் கிரியைகளுக்கு தப்புவித்து, உத்தம இருதயத்தோடு கர்த்தரை பின் பற்றுவோம் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 இராஜாக்கள் 11:5-11 

சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.

சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான்.

இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான்.

ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நியதேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி,

அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார்.

ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன்.

மேற்கூறிய வசனங்களில்  ராஜாவாகிய சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான்.  சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதை போல கர்த்தரை பூரணமாய் பின்பற்றாமல் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தான்.  அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமேசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான். இப்படியே தங்கள் தேவர்களுக்கு தூபங்காட்டி பலியிடுகிற அந்நிய ஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான். ஆதலால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சலொமோனுக்கு தரிசனமாகி 

1 இராஜாக்கள் 11:12 

ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.

மேற்கூறிய வார்த்தைகளில் கர்த்தர் சொன்னது, கர்த்தரால் கற்ப்பித்ததை செய்யாமற்  இருதயத்தை  கர்த்தரை விட்டு திருப்பினதால் கோபத்தோடு சாலொமோனிடம் சொன்னது  என்னவென்றால், என் உடன்படிக்கையையும், என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமல் அந்நிய ஸ்திரீகள் தூபங்காட்டுகிறதற்கு மேடைகளை கட்டினதால் ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருத்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன் என்றார்.  பின்னும் கர்த்தர் சொன்னது உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம் அதை உன் நாட்களில் செய்யாமல்; உன் குமாரனுடைய கையினின்று அதை பிடுங்குவேன் என்றார்.  மேலும் அவர் சொன்னது 

1இராஜாக்கள் 11:13 

ஆனாலும் ராஜ்யம் முழுவதையும் நான் பிடுங்காமல், என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட எருசலேமினிமித்தமும், ஒரு கோத்திரத்தை நான் உன் குமாரனுக்குக் கொடுப்பேன் என்றார்.

மேற்கூறிய வசனத்தில் ஒரு கோத்திரம் மட்டும் குமாரனுக்கு கொடுப்பேன் என்றார்.  

பிரியமானவர்களே, நாம் கர்த்தரின் ஆவியால் அபிஷேகிக்கப்பட்டும், அதனை உணராமல் இருதயம் இருளடைந்து கர்த்தர் கற்ப்பித்ததை கைக்கொள்ளாமல் உடன்படிக்கையை மீறி நம்முடைய இருதயத்தை அந்நிய தெய்வங்களுக்கு இடம் கொடுப்போமானால் கர்த்தர் நம்மிடத்தில் உள்ள அபிஷேத்தை நம்மை விட்டு மாற்றுகிறார் என்பதன் திருஷ்டாந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஆதலால் பிரியமானவர்களே, நாம் ஒரு போதும் கர்த்தர் நமக்கு கற்ப்பித்ததை விட்டுவிடாமல் அதனை பின்பற்றும்படியாக ஒப்புக்கொடுப்போம். 

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.