தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 105:19

கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு கீழ்படியாமல் இருந்தால்,கர்த்தர் நமக்கு விரோதமான சத்துருக்களை நமக்காக எழும்பப்பண்ணுகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் கற்பித்த கட்டளைகள் மீறாதபடி ஜாக்கிரதையாக காணப்பட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 11:15-17 

தாவீது ஏதோமில் இருக்கும்போது படைத்தலைவனாகிய யோவாப் ஏதோமிலுள்ள ஆண்மக்களையெல்லாம் சங்கரித்து, வெட்டுண்டவர்களை அடக்கம்பண்ணப்போனான்.

அவர்களையெல்லாம் சங்கரிக்குமளவும், தானும் இஸ்ரவேல் அனைத்தும் அங்கே ஆறுமாதம் இருக்கும்போது,

ஆதாதும் அவனோடேகூட அவன் தகப்பனுடைய ஊழியக்காரரில் சில ஏதோமியரும் எகிப்திற்குப்போக ஓடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாயிருந்தான்.

மேற்கூறிய வசனங்களில் கர்த்தர் சாலொமோனிடம் , அவன் செய்த பாவத்தினால் சொன்னது என்னவென்றால் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துக்கொண்ட எருசலேமினிமித்தமும் ஒரு கோத்திரத்தை மட்டும் உன் குமாரனுக்கு கொடுப்பேன் என்றார்.கர்த்தர் எதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன். தாவீது ஏதோமிலிருக்கும் போது, படைதலைவனாகிய யோவாப் ஏதோமிலுள்ள ஆண்மக்களையெல்லாம் சங்கரித்து, வெட்டுண்டவர்களை அடக்கம்பண்ண போனான்.  அவர்களையெல்லாம் சங்கரிக்குமளவும், தானும் இஸ்ரவேலனைத்தும் ஆறுமாதம் இருக்கும் போது ஆதாதும்  அவனோடே அவன் தகப்பனுடைய ஊழியக்காரரில் சில ஏதோமியரும் எகிப்துக்கு போக ஓடிப்போனார்கள். ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாயிருந்தான். அல்லாமலும் ஆதாதை குறித்து 

1இராஜாக்கள் 11:18-20 

அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, எகிப்திற்குப் பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடு கொடுத்து, இவனுக்கு ஆகாரத்தைத் திட்டம்பண்ணி, நிலத்தையும் கொடுத்தான்.

ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயை கிடைத்தபடியினால், அவன் ராஜஸ்திரீயாகிய தாப்பெனேஸ் என்னும் தன் மனைவியின் சகோதரியை அவனுக்கு விவாகஞ்செய்துகொடுத்தான்.

தாப்பெனேசின் சகோதரியாகிய இவள் அவனுக்குக் கேனுபாத் என்னும் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனைத் தாப்பெனேஸ் பார்வோனின் வீட்டிலே வளர்த்தாள்; அப்படியே கேனுபாத் பார்வோனின் வீட்டில் அவனுடைய குமாரருடன் இருந்தான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் ஆதாதுடைய குமாரனாகிய கேனுபாத் பார்வோனுடைய வீட்டில்அவன் குமாரருடன் வளர்க்கப்பட்டான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களை நாம் தியானிக்கும் போது கர்த்தர் இதனை திருஷ்டாந்தப்படுத்தியிருக்கிறது என்னவென்றால் நாம் கர்த்தரின் கட்டளைகளை நாம் மீறி கர்த்தருக்கு விரோதமான செயல்களை செய்வோமானால், அவர் நமக்கு விரோதமாக சத்துருக்களை எழும்ப பண்ணுகிறார் என்பதும் மற்றும் நாம் செய்யபோகிறதை முன்னாக அறிந்த நம்முடைய கர்த்தர் அதற்காக எங்கிருந்து சத்துருக்களை எழுப்பபண்ணுகிறார் என்பதும், அவர்கள் எங்கு வளர்க்கப்படுகிறார்கள் என்பதும் புரிய வருகிறது.  இதனை வாசிக்கிற கர்த்தருக்குள் அன்பானவர்களே, நாம் யாரும் தேவ கட்டளை மீறாதபடி நம்மை ஜாக்கிரதையாக காத்துக்கொள்ளாவிட்டால்,  கர்த்தர் நமக்கு விரோதமான சத்துருக்களை எழும்பப் பண்ணுவார்.  ஆதலால் நமக்கு விரோதமான சத்துருக்களை கர்த்தர் எழுப்பாதபடி நாம் ஒவ்வொருவரும் கர்த்தருக்கு கீழ்படியும்படி ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.