தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஓசியா 11:6
ஆகையால் அவர்களுடைய ஆலோசனைகளினிமித்தம் பட்டயம் அவர்கள் பட்டணங்களுக்குள் பாய்ந்து, அவர்கள் தாழ்ப்பாள்களை நிர்மூலம்பண்ணி, அவர்களைப் பட்சிக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் தமஸ்குவுக்கும், சீரியாவுக்கும் நம் உள்ளத்தில் இடம் கொடாதபடிக்கும், மற்றும் ஆவிக்குரிய வாழ்வில் வீழ்ச்சையடையாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு கீழ்படியாமல் இருந்தால், கர்த்தர் நமக்கு விரோதமான சத்துருக்களை நமக்காக எழும்பப்பண்ணுகிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 11:21
தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான் என்றும், படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி: நான் என் சுயதேசத்துக்குப் போக என்னை அனுப்பவேண்டும் என்றான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை தியானிப்பது என்னவென்றால்; கர்த்தர் ஆதாத் என்பவனை சாலொமோனுக்கு விரோதமாக எழும்பப்பண்ணி, பின்பு அவன் குமாரன் பார்வோனுடைய வீட்டில் வளர்க்கப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான் என்றும், படைதலைவனாகிய யோவாப் இறந்து போனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி; நான் என் சுயதேசத்திற்கு போக என்னை அனுப்ப வேண்டும் என்றான். அதற்கு பார்வோன் சொன்னது
1இராஜாக்கள் 11:22-26
அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன் சுயதேசத்துக்குப்போக விரும்புகிறதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறைவு இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறைவும் இல்லை; ஆகிலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான்.
எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்; இவன் தன் ஆண்டவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவை விட்டு ஓடிப்போய்,
தாவீது சோபாவில் உள்ளவர்களைக் கொன்று போடுகையில், அவன் தன்னோடே சில மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, அந்தக் கூட்டத்திற்குத் தலைவனானான்; இவர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கே குடியிருந்து, தமஸ்குவில் ஆண்டார்கள்.
ஆதாத் பொல்லாப்புச் செய்ததுமல்லாமல், ரேசோன் சாலொமோனுடைய நாளெல்லாம் இஸ்ரவேலுக்கு விரோதியாகி, சீரியாவின்மேல் ராஜாவாயிருந்து, இஸ்ரவேலைப் பகைத்தான்.
சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை.
மேற்கூறப்பட்ட வார்த்தைகள் பார்வோன் ஆதாதிடம் சொல்கிறான். ஆனால் சாலொமோனுக்கு எலியாதாவின் குமாரன் என்னும் இரண்டாவது விரோதியை எழும்ப பண்ணினார். இவன் தன் ஆண்டவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவை விட்டு ஓடிப்போய் தாவீது சோபாவில் உள்ளவர்களை கொன்றுப் போடுகையில், அவன் தன்னோடு உள்ளவர்களில் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டுப்போய் , அந்த கூட்டத்திற்கு தலைவனானான். அவ்விதமாக அவர்கள் தமஸ்குவுக்கு போய், அங்கே குடியிருந்து ஆண்டார்கள். அல்லாமலும் ஆதாத் பொல்லாப்பு செய்ததுமல்லாமல், ரேசான் சாலொமோனுடைய நாளெல்லாம் இஸ்ரவேலுக்கு விரோதியாகி, சீரியாவின் மேல் ராஜாவாகி இஸ்ரவேலை பகைத்தான். அல்லாமலும் சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாக கையெடுத்தான்; அவன் தாயின் பெயர் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை.
பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களின் கருத்துக்களை நாம் தியானிக்கும் போது, கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தத்திற்காக பல காரியங்களை தெளிவுப்படுத்துகிறார். என்னவெனில் கர்த்தரின் கட்டளையை மீறும் போது; கர்த்தர் தமது கோபத்தில் நமக்கு விரோதமாக சத்துருக்களை எழும்பப்பண்ணுகிறார். அவ்விதம் எழும்பப் பண்ணும் போது நம் ஆத்துமாவில் தமஸ்குவின் கிரியையும், மேலும் சீரியாவின் ராஜாவுமாக நம்மில் குடியேறி நம்முடைய ஆவிக்குரிய வாழ்வை வளரவிடாதபடி வீழ்ச்சியடைய செய்யும் படியாக தேவன் சத்துருவின் கையில் நம்மை ஒப்புக்கொடுப்பார். ஆதலால் நாம் மிகவும் ஜாக்கிரதையோடு ஆவிக்குரிய வாழ்வை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.