தேவனுக்கே மகிமையுண்டாவதாக

வெளி 19:16 

ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ராஜாதி ராஜா கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் தமஸ்குவுக்கும், சீரியாவுக்கும் நம் உள்ளத்தில் இடம் கொடாதபடிக்கும், மற்றும் ஆவிக்குரிய வாழ்வில் வீழ்ச்சையடையாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 11:27-43 

அவன் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்த முகாந்தரம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுது பார்த்தபோது,

யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரிய சமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.

அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதுச்சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில்,

அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதுச்சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு,

யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.

ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.

அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என் வழிகளில் நடவாமற்போனபடியினால் அப்படிச் செய்வேன்.

ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப் போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன்.

ஆனாலும் ராஜ்யபாரத்தை அவன் குமாரன் கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன்.

என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.

நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.

நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல, என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன்.

இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்று சொன்னான்.

அதினிமித்தம் சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான்.

சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்.

சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் எப்பராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாக கையெடுத்தான்.  அவன் அவ்விதமாக விரோதமாக கையெடுக்க காரனம் என்னவெனில் சாலொமோன் மில்லோவை கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தில் இடிந்து போன இடங்களை பழுது பார்த்த போது; யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரிய சமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான்.  அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகும் போது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புது சால்வையை போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனை கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில் அகியா தான் போர்த்துக்கொணடிருந்த புது சால்வையை பிடித்து, அதை பன்னிரண்டு துண்டாக கிழித்துப்போட்டு யெரொபெயாமை நோக்கி: பத்து துண்டுகளை எடுத்துக்கொள் என்று சொல்லி அவன் சொன்னது என்னவென்றால் ; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்கு பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன்.  ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துக்கொண்ட எருசலேம் நகரத்துக்காகவும் ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும்.  பின்னும் யெரொபெயாமுக்கு கர்த்தர் கொடுத்த வார்த்தையாவது 

1இராஜாக்கள் 11:33-39 

அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என் வழிகளில் நடவாமற்போனபடியினால் அப்படிச் செய்வேன்.

ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப் போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன்.

ஆனாலும் ராஜ்யபாரத்தை அவன் குமாரன் கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன்.

என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன்.

நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்.

நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல, என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன்.

இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்று சொன்னான்.

மேறக்கூறப்பட்டிருக்கிற வார்த்தைகளை கர்த்தர் அகியா மூலம் யெரொபெயாமிடம் சொல்ல சாலொமோன் யெரொபெயாமை கொல்ல வகை தேடினான்; அப்பொழுது யெரொபெயாம் எழுந்து,  எகிப்திற்கு சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய் சாலொமோன் மரணமடையும் நாள் மட்டும் எகிப்தில் இருந்தான். சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை யாவும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.  சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்.  சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணபட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 

பிரியமானவர்களே நம்மிடத்தில் இருக்கிற ராஜ்ரீக அபிஷேகம் நம்மில் இருந்து கர்த்தர் அதனை எடுத்து மற்றவர்களுக்கு  கொடுப்பதினால்,  நாம் ஒரு போதும் கர்த்தருடைய கட்டளை மீறாதபடி நடந்துக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்வது 

மத்தேயு 21:43  

ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.

மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் அதனை இழந்து விடாமல் நாம் ஒவ்வொருவரும் நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.  அதுவுமட்டுமல்லாமல் நம் எல்லாருடைய உள்ளத்திலும் ஒரு கோத்திரமாகிய தாவீதின் சிங்காசனம் கர்த்தர் கொடுத்த உடன்படிக்கையினால் தவற விடாமல் கர்த்தர் அதனை வைத்து கொள்வார்.  இவை எதற்கென்றால் தேவ ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு தேவனுக்கு சித்தமில்லாத எல்லா யெரொபெயாமின் துர் செயல்களை அகற்றும்படியாகயும் இப்படியாக கர்ததர் நம் உள்ளத்தை பரிசுத்தபடுத்தி எல்லா கோத்திரத்தையும் அவர் சுதந்தரமாக்கி வெற்றி சிறந்தவராக கிறிஸ்து உயிர்தெழுந்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். ஆதலால் நாம் எல்லாவற்றிலும் எச்சரிப்பாக இருந்து உயிர்தெழுந்த கிறிஸ்து நம்மில் ராஜாதி ராஜாவாக செயல்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.