தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 32:10
துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆலோசனைக்காரர் கிறிஸ்து.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ராஜாதி ராஜா கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 12: 1-6
ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.
ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கையில் இதைக் கேள்விப்பட்டான்.
அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:
உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் இலகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.
அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.
அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் சாலொமோன் மரணமடைந்த பின்பு அவனுடைய குமாரனாகிய ரெகொபெயாமை ராஜாவாக்கும் படி இஸ்ரவலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்கு போனான். அப்போது சாலொமோனை கண்டு பயந்து ஓடி போனவனாகிய நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கையில் இதனை கேள்விபட்டான். அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து ரெகொபெயாமை நோக்கி உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள் மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும் அப்போது உம்மை சேவிப்போம் என்றார்கள். அதற்கு அவன் சொன்னது நீங்கள் போய் மூன்று நாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பி வாருங்கள் என்று சொல்லியனுப்பினான். அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள். அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம்; தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமூகத்தில் நின்ற முதியாரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறு உத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்கிறான் ரெகொபெயாம் முதியோர்கள் தனக்கு சொன்ன ஆலோசனையை தள்ளி விட்டு தன்னோடே வளர்ந்து தன் சமூகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனை பண்ணி அவர்களோடே சொன்னது
1இராஜாக்கள் 12:9
அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுமொழி கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
இந்த வார்த்தைகளை கேட்ட வாலிபர்
1இராஜாக்கள் 12:10, 11
அப்பொழுது அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.
இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்லவேண்டும் என்றார்கள்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கேட்ட ரெகொபெயாம் முதியோர் சொன்ன ஆலோசனையை தள்ளிப்போட்டு வாலிபருடைய ஆலோசனையின்படியே; மூன்று நாள் பொறுத்து வரும்படி சொல்லியனுப்பினவர்களிடம் அவன்
1இராஜாக்கள் 12:14
என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளால் கடினமாய் பேசுகிறதை பார்க்கிறோம். இதென்னவெனில் ராஜா ஜனங்களுக்கு செவிக்கொடாமற் போனான்: கர்த்தர் அகியாவைக்கொண்டு யெரொபெயாமுக்கு சொன்ன வார்த்தையை உறுதிபடுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது.
பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களில் கருத்துகளை நாம் தியானிக்கும் போது கர்த்தரால் அபிஷகம் பெற்ற கர்த்தருடைய வேலைக்காரர்கள் ஒரு போதும் முதியோரின் ஆலோசனைய தள்ளிவிடாமல், நல்ல ஆலோசனைகளை ஏற்றுக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய நல்ல ஆலோசனைககாரர் கிறிஸ்து; அவரிடத்தில் நாம் காத்திருந்து எந்த காரியத்துக்காகிலும் ஆலோசனையைப்பெற்றுக்கொள்ள வேண்டும். ஆதாலால் சபையில் அபிஷேகம் பெற்ற முதியோரிடத்தில் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். அதனால் தான் கர்த்தருடைய வார்த்தை
நீதிமொழிகள் 24:6
நல்யோசனைசெய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்.
ஆதலால் பிரிமானவர்களே கிறிஸ்து தான் நம்முடைய வாழ்வில் எல்லாவற்றிலும் ஆலோசனைக்காரராக காணப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.