தேவனுக்கே மகிமையுண்டாவதாக

கொலோசெயர் 2:9,10

ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.

மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் பரிபூரண கிருபை பெற்றுக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆலோசனைக்காரர் கிறிஸ்துவாக விளங்குகிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 12: 16-24 

ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.

பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான்.

அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர் தாவீதின் வம்சத்தை விட்டு கலகம்பண்ணிப் பிரிந்து போயிருக்கிறார்கள்.

யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதாகோத்திரம் மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை.

ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைச் சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர் லட்சத்து எண்பதினாயிரம் பேரைக் கூட்டினான்.

தேவனுடைய மனுஷனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தையுண்டாகி, அவர் சொன்னது:

நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும் யூதா வம்சத்தார் அனைவரையும், பென்யமீனரையும், மற்ற ஜனங்களையும் நோக்கி:

நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் ராஜாவாகிய ரெகொபெயாம் இஸ்ரவேலருக்கு செவிகொடாததை அவர்கள் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறு உத்தரவாக சொன்னது தாவீதோடே எங்களுக்கு பங்கில்லை; ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்கு சுதந்தரம் இல்லை; இஸ்ரவலே உன் கூடாரங்களுக்கு போய் விடு; இப்போது தாவீதே உன் சொந்த வீட்டை பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய் விட்டார்கள்.  ஆனாலும் யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர் மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.  பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதிவிசாரிப்புக்காரனாயிருந்த  அதோரமை அனுப்பினான்.  அதோரமை இஸ்ரவேலர் எல்லாரும் கல்லெறிந்துக் கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின் மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான்.  அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர் தாவீதின் வம்சத்தை விட்டு கலகம்பண்ணி பிரிந்துப்போயிருக்கிறார்கள்.  யெரொபெயாம்  திரும்பி வந்திருக்கிறான் என்று இஸ்ரவேலரெல்லாம் அறிந்தவுடனே, அவனை சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனை சமஸ்த இஸ்ரவேலின் மேலும் ராஜாவாக்கினார்கள்.  யூதா கோத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை.  ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்த போது, இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம் பண்ணவும், ராஜ்யத்தை சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாக திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துக்கொள்ளப்பட்ட யுத்தவீரர் லட்சத்து எண்பதினாயிரம் பேரைக்கூட்டினான்.  அப்போது தேவனுடைய மனுஷனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தையுண்டாகி சொன்னது, யுத்தத்திற்கு ஆயத்தமாக்கபட்டிருக்கிறவர்களோடே சொல்ல வேண்டியது; நீங்கள் போகாமலும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம் பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்கு போங்கள்.; என்னாலே இந்த காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்போது அவர்கள் கர்த்தரின்  சொல்லைக்கேட்டு கர்த்தரின் வார்த்தையின் படியே திரும்பி போய்விட்டார்கள். 

பிரியமானவர்களே மேற்கூறிய பகுதிகளை நாம் தியானிக்கையில் கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு விளக்கியது என்னவென்றால், கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படியாதவர்கள் நடுவில் கர்த்தர் கொடுத்த அபிஷேகத்தை அவர் மாற்றிவிடுகிறார் என்பதனை ராஜாவாகிய சாலொமோனிடம் சொல்கிறதை பார்க்கிறோம்.  அவர் சொன்னது போல் யெராபெயாமுக்கு பத்து கோத்திரத்தை கொடுப்பேன் என்றும்; என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்வேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட எருசலேமுக்காக ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும் என்றும், அந்த கோத்திரம்  எந்நாளும் ஒரு விளக்கு இருக்கதக்கதாக, அவனுடைய  குமாரனுக்கு கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்கிறார்.  ஏனென்றால் நம் உள்ளத்தின் பொல்லாத கிரியைகள்,  பொல்லாத சிந்தனைகள்,  பொல்லாத செயல்பாடுகள் இவையெல்லாவற்றினிமித்தமாக நாம் பெற்ற அபிஷேகம் நஷ்டமடைந்து நாம் கர்த்தரை விட்டு தூரமாகிறோம்.  ஆதலால் நம்மில் இருந்த நற்கிரியைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி விடுகிறதால் நம்முடைய ஆத்துமாவை அந்நியனுக்கு சிறைப்படுத்துகிறார்.  அதன் பிறகு நாமாக எந்த ஒரு காரியத்தலும் வெற்றிவராது, ஏனென்றால் இந்த காரியம் கார்த்தரால் நமக்கு வருகிறது என்பதனை உணருகிறவர்களாக இருக்க வேண்டும்.   அவ்விதம் சிறைப்படுத்தும் போது,  கிறிஸ்து உள்ளத்தின் ஒரு பகுதியில் அவர் வெளிப்படுகிறார்.  அவ்விதம் கிறிஸ்து வெளிப்பட்டு, மற்ற அந்நிய கிரியைகளை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறார் என்பது நம் ஆத்துமாவுக்குள் நடக்கிற ஒரு ஆவிக்குரிய யுத்தம்,  இவ்விதமாக நம் உள்ளம் முழுமையும் கர்த்தரின் ஆவியால் நிரப்பப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த காரியங்களை கர்த்தர் செய்கிறார் என்பதனை நாம் புரிந்துக்கொண்டு நம் ஆத்துமாவை முழுமையும் காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.