தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 13:5,6
நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்.
கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய பலிபீடம் உயிர்தெழுந்த கிறிஸ்துவின் சரீரம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவில் பரிபூரண கிருபை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 12:25-33
யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம்பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினான்.
யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்சவசமாய்த் திரும்புகிறதாயிருக்கும்.
இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.
ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,
ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.
இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்.
அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.
யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து,
தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தர் அகியா என்னும் தீர்க்கதரிசி மூலம் பேசினது போல் ராஜாவாகிய சாலொமோன் மரித்த பின்பு, அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவாகின பின்பு கர்த்தருடைய வார்த்தையின் படியே யெரொபெயாம் பத்து கோத்திரங்களுக்கு ராஜாவாகி எப்பிராயீம் மலை தேசத்தில் சீகேமை கட்டி, அதிலே வாசம் பண்ணி, அங்கிருந்து போய் பெனுவேலைக் கட்டினான். யெரொபெயாம்: இப்போது தாவீது வம்ச வசமாய் திரும்புகிறதாயிருக்கும். அவன் சொன்னது
1இராஜாக்கள் 12:27
இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.
மேற்கூறிய வார்த்தைகளை தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்து, பின்பு அவன் யோசனை பண்ணினது என்னவென்றால்
1இராஜாக்கள் 12:28,29
ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,
ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.
மேற்கூறிய வார்த்தைகள் என்ன கூறுகிறது என்றால் யெரொபெயாம் இஸ்ரவேலின் பத்து கோத்திரங்களுக்கு ராஜாவான பின்பு, அவர்களை எருசலேமுக்கு போக விடாமல் தடுக்கும் படியாக பொன்னினால் இரண்டு கன்றுகுட்டிகளை உண்டாக்கி ஒன்றை பெத்தேலிலும் ஒன்றை தாணிலும் ஸ்தாபித்தான். அவ்விதம் ஸ்தாபித்து ஜனங்களிடம் சொன்னது; இவைகள் உங்களை எகிப்திலிருந்து வரபண்ணின உங்கள் தேவர்கள் என்கிறான். இந்த காரியம் பாவமாயிற்று. ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காக தாண் மட்டும் போவார்கள். அவன் மேடையாகிய ஒரு கோவிலைக் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான். பின்பு அவன் யூதாவில் செய்யப்படும் பண்டிகைக்குக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி பலிபீடத்தின் மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுகுட்டிகளுக்கு பலியிட்டு, தான் உண்டு பண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே தான் உண்டாக்கின பலிபீடத்தின் மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மல் பலியிட்டு தூபங்காட்டினான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களின் கருத்துக்கள் என்னவென்றால் நம் உள்ளத்தில் பூரண கிருபை பெற்றுக்கொள்ளாவிட்டால் நாம் வஞ்சிக்கப்பட்டு விடுவோம் என்பதும், மேலும் நாம் பெற்றுக்கொண்டிருக்கிற அபிஷேகம் நம்முடைய கீழ்படியாமையினால் நம்மிலிருந்து மாற்ற பட்டால் கர்த்தர் நமக்கு தருகிற தீர்ப்ப்பு என்னவென்றால் கிறிஸ்து நம்மில் ஆசாரியராக விளங்கமாட்டார் என்பதும், நமக்குள் தோன்றுகிற ஆசாரியத்துவம் ஈனமானது என்றும், கிறிஸ்து நம்மில் ஆசாரியராக எந்த காரியத்தையும் செய்யாமல் நம்முடைய சொந்தத்திலே நமக்கு தோன்றுகிற நாளிலேயும், நமக்குதோன்றுகிற படியேயும் நம் விருப்பத்தின் படியேயும் நாமும் நடந்து, நம்மை சார்ந்திருக்கிறவர்களையும் அப்படியே நடத்தி சென்று, அவ்விதமாக கர்த்தருக்கென்று ஆராதனை செய்வோம். ஆனால் அது கர்த்தருக்கு உகந்த பலியாயிராது. இதனை தான் கர்த்தர் யெரொபெயாமை வைத்து திருஷ்டாந்தப்படுத்துகிறார். ஆதலால் நாம் யாரும் அப்படியிராதபடி கர்த்தருக்கு சித்தமான பலிபீடத்து ஆராதனை செய்கிறவர்களாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.