தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 51: 1

தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளமாகிய பலிபீடத்தில் தேவ கோபாக்கினை வராதபடி காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய பலிபீடம் உயிர்தெழுந்த கிறிஸ்துவின் சரீரம் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 13:1-6 

யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,

அந்தப் பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;

அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.

பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக் கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.

தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று.

அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன்போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.

யெரொபயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நிற்கும் போது, இதோ தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, அந்த பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன் மேல் தூபங்காட்டுகிற ஆசாரியர்களை உன் மேல் பலியிடுவான்; மனுஷர்களின் எலும்புகளும் உன் மேல் சுட்டெரிக்கப்படும் என்பதை கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையை கூறி; அன்றைய தினம் அவன் ஒரு அடையாளத்தை சொல்லி, இதோ இந்த பலிபீடம் வெடித்து, அதின் மேலுள்ள சாம்பல் கொண்டுட்டு போம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.  பெத்தேலில் இருக்கிற அந்த பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறிய வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனை பிடியுங்கள் என்று தன் கையை பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக்கூடாதபடிக்கு மரத்து போயிற்று.  தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால்  குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டு போயிற்று.  அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்கு, பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன் போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்ற போது; தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமூகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்பட்டது. 

பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வார்த்தைகளில் பலிபீடம் என்பது, கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்காக கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  என்னவெனில் யெரொபெயாம் ராஜாவான போது தன் விருப்பத்தின்படி பலிபீடம் கட்டினதும்,  இரண்டு கன்றுக்குட்டிகளை செய்து, இஸ்ரவேல் ஜனங்களை வழி தப்ப பண்ணினதும் இருந்ததால் கர்த்தர் அந்த பலிபீடத்தை நியாயந்தீர்க்கிறவராக  வெளிப்படுகிறார்.  ஆதலால் அந்த பலிபீடம் வெடித்து, கர்த்தர் சொன்னது போல் சாம்பல் கொட்டுண்டு போயிற்று.  மேலும் நம்முடைய உள்ளத்தில்  விக்கிரகங்களுக்கு இடம் கொடுத்து பலியிட்டால் நம்மிடமும் இவ்விதம் தேவ கோபாக்கினை உண்டாகும்.  அதற்கு நாம் எதிர்த்து நிற்போமானால் நம்முடைய மணவாட்டி சபை எந்த பரலோக ஆசீர்வாதங்களை சுதந்தரித்து கொள்ளாமல் செயலிழந்து காணப்படும்.  அப்படி நம்முடைய பாவத்தினால் கிருபையிழந்து இருப்போமானால் கர்த்தரின் பாதத்தில் மீண்டும் ஒப்புக்கொடுத்தால் கர்த்தர் நம்மை சீர்படுத்துகிறார்.  ஆதலால் நாம் நம்முடைய உள்ளத்தில் இருக்கிற எல்லா விக்கிரகங்களையும் அழித்தவண்ணமாக, நம்மை சுத்திகரித்து கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.