தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 25:11 

ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்துமா வஞ்சிக்கப்பட்டு போய் விடாதபடி காக்கப்படும்படியாக; கர்த்தருக்கு சித்தமில்லாத இடத்தில் புசிக்காதபடி, குடிக்காதபடி  ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளமாகிய பலிபீடத்தில் தேவ கோபாக்கினை வராதபடி காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1 இராஜாக்கள் 13:7-17 

அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.

தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை.

ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி,

அவன் பெத்தேலுக்கு வந்தவழியாய்த் திரும்பாமல், வேறுவழியாய்ப் போய்விட்டான்.

கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்.

அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,

அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி,

தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான் தான் என்றான்.

அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.

அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.

ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போனவழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ராஜாவாகிய யெரொபெயாமுடைய வாழ்வில் தேவ கோபாக்கினைவெளிப்பட்டதும், அவன் தன்னிடம் தீர்க்கதரிசனம் உரைத்த தேவனுடைய மனுஷனிடம்  தனக்காக விண்ணப்பம் பண்ண சொல்கிறான்.  அவ்விதம் அந்த தேவனுடைய மனுஷன் விண்ணப்பம் பண்ணும்போது அவனுடைய கை முன்னிருந்தது போல் சீர்படுகிறது.  பின்னும் ராஜா தேவனுடைய மனுஷனிடம் நீ என்னோடேக்கூட வந்து இளைப்பாறு என்றும், நான் உனக்கு வெகுமானம் தருகிறேன் என்கிறான்.  அதற்கு தேவனுடைய மனுஷன் நீர் உம்முடைய வீட்டில் பாதிக்கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதில்லை; இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதும் இல்லை.  ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போன வழியாய் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்கு கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி; அவன் பெத்தேலுக்கு வந்த வழியாய் செல்லாமல் வேறு வழியாய் போய் விட்டான். மேலும் கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் பெத்தேலிலே செய்த எல்லா செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் அறிவித்தபோது; அவர்கள் தகப்பன் அவன் எந்த வழியாய் போனான் என்று அவர்களை கேட்டான்.  யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போன வழியை அவர்கள் பார்த்திருந்த படியால்; அவன் தன் குமாரருடனே கழுதையின் மேல் சேணம் வைத்துக்கொடுங்கள் என்று சொல்லவும்; அவர்கள் சேணம் வைம்து கொடுத்த பின்  அவன் அதின் மேல் ஏறி  தேவனுடைய மனுஷனை தொடர்ந்து போய், ஒரு கர்வாலி மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்த அவனை கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர் தானா என்று அவனை கேட்டதற்கு; அவன் நான்தான் என்று சொல்லவும்; அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்று சொல்கிறான்.  அதற்கு அவன் நான் திரும்பவும் உள்ளே போகமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும், தண்ணீர் குடிக்கவுமுமாட்டேன்.  ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போன வழியாய் திரும்பிவராமலும் இரு கன்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்டிருக்கிற  இந்த கர்த்தருடைய வசனத்தின் பிரகாரம், எப்படிபட்ட ராஜாக்கள், பிரபுக்கள், அதிகாரிகளாகயிருந்தாலும், கர்த்தருக்கு செலுத்துகிற பலியை சரியாக செலுத்தாமல் அவர்கள் இருந்தால் தேவனுடைய ஆலோசனை நம்மிடத்தில் வெளிபடுமானால், அந்த ஆலோசனையில் நாம் தவறாமல் தெரிவிக்கிறவர்களாகயிருக்க வேண்டும்.  ஆனால் அவர்கள் நிமித்தம் நமக்கு நெருக்கடிகள் வந்தாலும் கர்த்தருக்காக நாம் அதனை சகிப்போமானால் ஏற்ற வேளையில் கர்த்தர் வந்து நம்மை அவருடைய சித்தத்தின் படி இரட்சிப்பார்; நாம் தேவனுடைய மகத்துவத்தை காணமுடியும்.  அல்லாமலும் கர்த்தர் புசிக்கக்கூடாது என்று சொல்கிற ஸ்தலத்தில் ஒரு போதும் புசிக்கலாகாது. இங்கு நாம் பார்க்கும் போது கர்த்தர் நமக்கு திருஷ்டாந்தத்தோடு விளக்குகிறார்; என்னவெனில் அப்பமும், தண்ணீரும் தேவனுடைய மனுஷன் யூதாவிலிருந்து வந்து யெரொபெயாமுடைய வீட்டில் குடிக்கவில்லை.  என்னவென்றால் அது கர்த்தரின் வார்த்தையாயிருக்கிறது.  இந்த திருஷ்டாந்தம் என்னவென்றால் அப்பமும் தண்ணீரும் என்பது தேவனுடைய வசனம்.  அதனை நாம் அருவருப்பாகிய விக்கிரகாராதனை செய்கிற சபைகளிலிருந்து உட்கொள்ளக்கூடாது.  மேலும் கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு, உள்ளான மனுஷன் தேவ சாயலை பெற்றிருக்கும் போது நாம்விட்டு வந்த பாரம்பரிய சபைகளில் நாம் போய் தேவ வசனம் உட்க்கொள்ளக்கூடாது என்பதனை கர்த்தர் தெளிவுப்படுத்துகிறார். 

ஆதலால் கர்த்தருக்குள் பிரியமானவர்களே, நாம் எவ்விதத்திலும் கர்த்தருடைய வேலையில் அவருக்கு சித்தமில்லாமல் எந்த ஒரு இடத்திலும், புசிக்கவோ, குடிக்கவோ செய்யக்கூடாது என்பதும், மற்றும் அருவருப்பான ஆவியோடு ஆராதனை செய்கிறவர்களிடத்தில் நாம் போய் பங்கு பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதையும் புரிந்துக் கொள்ளவேண்டும்.  இவ்விதமாக மேற்கூறப்பட்டிருக்கிற கருத்துகளில் கவனமாக நடந்துக்கொள்ள பார்த்துக்கொள்ளும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.