தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 18:21 

மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் உள்ள போராட்டங்கள் மரணமும், ஜீவனும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் யெரொபெயாமின் பொல்லாத குணங்கள் வராதபடி நம்முடைய ஆத்துமாவைக் காத்துக்கொள்ள வேண்டும்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

1இராஜாக்கள் 14:15-31 

தண்ணீரிலே நாணல் அசைகிறதுபோல, கர்த்தர் இஸ்ரவேலை முறித்தசையப்பண்ணி, அவர்கள் பிதாக்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடே பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், அவர்களை நதிக்கப்பாலே சிதறடித்து,

யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.

அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.

கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.

யெரொபெயாம் யுத்தம்பண்ணினதும் ஆண்டதுமான அவனுடைய மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம்பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள்.

யூதாஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்துவருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.

அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.

தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.

ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,

கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.

அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.

ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.

ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் யெரொபெயாமின் பாவங்களில்  இஸ்ரவேலர் வீழ்ந்து போனதால் கர்த்தர் இஸ்ரவேலரை குறித்து சொன்னதை அகியா சொல்கிறான்.  அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியில் வரும் போது பிள்ளையாண்டான் செத்துப்போனான்.  கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாலும் அவனுக்காக துக்கம் கொண்டாடினார்கள்.  மேலும் யெரொபெயாம் யுத்தம் பண்ணினதும் ஆண்டதுமான மற்ற வர்த்தமானங்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.  பெரொபெயாம் ராஜ்யபாரம் பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதக்களோடே நித்திரையடைந்த பின் , அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம் பண்ணினான்: அவனுடைய நாற்பத்தொராம் வயதிலிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம்  விளங்கும் படி  இஸ்ரவேல் கோத்திரங்களிலெங்கும் தெரிந்துக்கொண்ட எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்.  அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின் பேர் நாமாள்.  மேலும் யூத ஜனங்கள் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து, தாங்கள் செய்து வருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.  

அவர்கள் 1இராஜாக்கள் 14:23-24 

அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.

தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள்.

மேற்க்கூறப்பட்ட அருவருப்புகளின்படியெல்லாம் செய்தார்கள்.  அல்லாமலும் ரெகொபெயாம் ராஜ்யபாரம் பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து 

1இராஜாக்கள் 14:26 

கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.

சீஷாக் எடுத்துக்கொண்டு போன பொருட்களுக்கு பதிலாக ரெகொபெயாம் வெண்கல பரிசைகளை செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியை காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்பித்தான்.  ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் போது, அரமனை சேவகர் அவைகளை பிடித்துக்கொண்டு போய், திரும்ப தங்கள் அறையிலே வைப்பார்கள்.  ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்கள் எல்லாம் யூதாவின் நாளாகம புஸ்தகத்தில் இருக்கிறது.  ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாளெல்லாம் யுத்தம் நடந்துக்கொண்டிருந்தது.ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்.  அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 

பிரியமானவர்களே, மேற்கூறிய வார்த்தைகளை நாம் தியானிக்கையில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியில், பரிசுத்தம் கெட்டு போகாமல் இருக்க வேண்டுமானால் எந்த விக்கிரக சேவையும் இருக்கக்கூடாது.  விக்கிரக சேவைகள் நம்மிடம் இருக்குமானால், நம்முடைய ஆத்துமா மரிக்கும் என்பதனையும், அதனை குமாரனாகிய அபியா என்றும் திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  நம்முடைய ஆத்துமா ஜீவனற்று போனால் நம்முடைய வாழ்வு துக்கமாக தீரும்.  மேலும் நாம் பெற்றிருந்த  கிருபைகள் இழக்க நேரிடும்.  அவ்விதம் இழந்தவர்களாக இப்போது இருப்போமானால் மீண்டும் ஆலயமாகிய கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் அதனைப் பெற்றுக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும்.  இந்த இரண்டு காரியமாகிய மரணமும், ஜீவனும் நம்முடைய வாழ்வில் மாறி மாறி யுத்தம் செய்கிறதாயிருக்கும்.  ஆதலால் நாம் ஒருபோதும் நம் இருதயத்தை அந்நிய ஆவிகளுக்கு ஒப்புக்கொடாமல் இருக்க வேண்டும்.  அவ்விதம் நாம் அந்நிய ஆவிகளுக்கு உள்ளத்தில் இடம் கொடுத்தால், நம்மிடத்தில் உள்ள கிருபையை கர்த்தர்  மற்றவர்களுக்கு கொடுக்கிறார்.  ஆதலால் நாம் பெற்ற கிருபைகளை இழந்துப் போகாதபடி காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.