தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 106:47

எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய முன்னோர்களின் விக்கிரக மேடைகளும். கலாச்சார வாழ்ககை முழுமையும் நம்மை விட்டு அகற்றப்பட வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் உள்ள போராட்டங்கள் மரணமும், ஜீவனும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 15:1-15 

நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி,

மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.

தன் தகப்பன் தனக்கு முன்செய்த எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை.

ஆனாலும் தாவீதினிமித்தம் அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்குப் பிற்பாடு அவன் குமாரனை எழும்பப்பண்ணுகிறதினாலும், எருசலேமை நிலைநிறுத்துகிறதினாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.

தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.

ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

அபியாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி,

நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.

ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

அவன் இலச்சையான புணர்ச்சிக்காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி,

தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா நிர்மூலமாக்கி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.

மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது.

தன் தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் யெரொபெயாமின் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின் மேல் ராஜாவாகி மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்.  அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய  தாயின் பேர் மாகாள்.  தன் தகப்பன் முன் செய்த சகல பாவங்களிலும் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை.  ஆயினும் தாவீதினிமித்தம் அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்கு பின்பு அவனுடைய குமாரனை எழும்பப்பண்ணுகிறதினாலும், எருசலேமை நிலை நிறுத்துகிறதினாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார். தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்று தவிரக் கர்த்தர் தனக்கு கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்கு செம்மையானதை செய்து வந்தான்.  மேலும் ரெகொபெயாமுக்கும், யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துக்கொண்டிருந்தது.  அபியாமின் மற்ற வர்த்தமானங்களெல்லாம் நாளாகம் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின், அவனை தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா யூதாவின் மேல் ராஜாவாகி நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்.  அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை செய்தான்.  அவன் இலச்சையான புணர்ச்சிக்காரரைத் தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் செய்த நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி, தோப்பிலே அருவருப்பான விக்கிகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கி விட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் நிர்மூலம்பண்ணி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.  மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடு உத்தமமாயிருந்தது.  தன் தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துக்கொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே வைத்தான். ஆசாவுக்கும், இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துக்கொண்டிருந்தது. 

பிரியமானவர்களே கர்த்தரால் ஒன்று சேர்க்கப்பட்ட இஸ்ரவேலும் யூதாவும், சாலொமோன் செய்த பாவத்தினால் மீண்டும் கர்த்தரே இரண்டாக்கி, அதில் ஒரு பங்கு மாத்திரம் தாவீதின் விளக்காக எரிந்து எப்பொழுதும் பிரகாசிக்கவும் மற்ற எல்லாவற்றையும் கிறிஸ்து ஆளுகை செய்யும் படியாகவும் அவர்களுக்குள் எப்பொழுது யுத்தம் நடந்துக்கொண்டிருக்கும்படியாகவும்; அவ்விதம் யுத்தம் செய்து, அவர்கள் தங்கள் பாரம்பரிய கோவில்களாகிய விக்கிரக  மேடைகளை அகற்றவும், இவ்விதம் பல காரியங்களை கர்த்தர் செய்கிறாரென்றால் நம் உள்ளம் எப்படியும் பரிசுத்தப்படுத்தவும், உள்ளத்தில் உள்ள விக்கிரக மேடைகளை அகற்றி; கர்த்தருடைய வார்த்தையாகிய அக்கினியால் நம் உள்ளத்தில் இருக்கிற கலாச்சாரத்தை அழித்து நிர்மூலம் பண்ணுகிறார்.  அல்லாமலும் கர்த்தருக்குரிய காரியங்களை கர்த்தரின் ஆலயத்தில் ஒப்படைக்கும்படியாகவும் தேவன் திருஷ்டாந்தப்படுத்துகிறார். கர்த்தருக்குள் பிரியமானவர்களே, இதிலிருந்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் நம்முடைய உள்ளத்தில் இருக்கிற போராட்டங்களை கர்த்தர் அகற்றும்படியாகவும், நம்முடைய சகல பாரம்பரியத்தையும் விட்டு விட்டு, நம்முடைய ஆவி ஆத்தும சரீரம் முழுமையும் அவரிடத்தில் ஒப்படைக்கும்படியாகவும் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.