தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 5: 4
நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு விரோதமாக பொல்லாப்பு செய்கிறவர்களின் உதவியை, எந்த சூழ்நிலைமை நமக்கு வந்தாலும் அவர்களுடைய உதவியை தேடக்கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய முன்னேர்களின் பாரம்பரிய விக்கிரக மேடைகளும், கலாச்சார வாழ்க்கையும் நம்மை விட்டு அகற்றபட வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியக நம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 15:16-23
ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான்.
அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி:
எனக்கும் உமக்கும் என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப் போகும்படிக்கு, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச் சொன்னான்.
பெனாதாத், ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரோத் அனைத்தையும் நப்தலியின் முழுத்தேசத்தோடுங் கூடமுறிய அடித்தான்.
பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவிலிருந்துவிட்டான்.
அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லாரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர பறைமுறை இடுவித்து; அவைகளினால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண்டிருந்தது.
மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்ததைகளில் ஆசாவுக்கும்,இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துக்கொண்டிருந்தது. மேலும் ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடி இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா, யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவை கட்டினான். அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும், பொன்னையையும் ராஜ அரண்மனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளை தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாது என்னும் சீரியாவின் ராஜாவுக்கு கொடுத்தனுப்பி, அவன் சொல்ல சொன்னது; எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும், உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும், பொன்னையையும் அனுப்புகிறேன். இஸ்ரவலின் ராஜாவாகிய பாஷா என்னை விட்டு விலகி போகும்படி நீர் வந்து அவனோடு பண்ணின உடன்படிக்கையை தள்ளி போடும் என்று சொல்ல சொன்னான். பெனாதாத், ராஜாவாகிய ஆசாவுக்கு செவிக்கொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும், கின்னரோத் அனைத்தையும் நப்தலியின் முழுதேசத்தோடுக் கூட முறிய அடித்தான். பாஷா அதனைக்கெட்டி ராமாவை கட்டுகிறதை விட்டு திர்சாவிலிருந்துவிட்டான். அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லாரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும், அதன் மரங்களையும் எடுத்துவர பறைமறை இடுவித்து அவைகளினால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும், மிஸ்பாவையும் கட்டினான். ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்த யாவையும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் முதிர் வயதான காலத்தில் அவன் கால்களில் வியாதி கண்டிருந்தது.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட வரர்த்தைகளை தியானிக்கும் போது, இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் யுத்தம் நடக்கிறதை, கர்த்தர் திருஷ்டாந்தப்படுத்துகிறாரென்றால், நம் உள்ளத்தில் உள்ள ஆவிக்குரிய யுத்தங்கள் மற்றும் ஆத்துமா வாஞ்சிக்கிற காரியங்களை காட்டுகிறார். மேலும் நாம் தியானிப்பது என்னவென்றால் நாம் கிறிஸ்துவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுக்கொள்வதும், மற்றும் சில நேரங்களில் நாம் கர்த்தரின் சத்திய வா்த்தைகளை விட்டு விட்டு, தன் மனதில் தோன்றுகிறதை செய்வதும், நம் உள்ளத்தில் நடக்கிற தேவனுக்கு பிரியமில்லாத காரியங்களினால், நம்மை கர்த்தரை விட்டு தூரமாக்குகிற செயல்கள் நம்மிடம் இருக்கிறதை தான் பாஷா ராமாவை கட்டுகிறான் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதனை நாம் உடனடியாக உணர்ந்து; நம் வாழ்வின் ஆவிக்குரிய வளர்ச்சியில் வீழ்ந்திருக்கிறதை கண்டடைந்து சீக்கிரத்தில் கர்த்தரின் உதவியை நாம் நாடுவோமானால் கர்த்தர் நமக்கு எல்லாவற்றிலும் உதவி செய்வார். ஆனால் ஆசாவோ கர்த்தரின் சித்தம் செய்து வந்தாலும், பாஷாவோடு யுத்தம் செய்ய சீரியாவின் உதவியை நாடினான். ஆசா சொன்னது சீரிய ராஜாவாகிய பெனாதாத்திடம் பாஷாவோடு உள்ள உடன்படிக்கையை தள்ளிப்போட சொல்லி, அவன் உதவியை நாடினதால் கர்த்தர் ஆசாவிடம் கோபம் உள்ளவரானார். ஆதலால் அவன் கடைசி நாட்களில் அவன் கால்களில் வியாதி கண்டிருந்தது. அது போல் நாமும் நம்முடைய வாழ்வில் ஆத்துமா வாஞ்சிக்கிற பிரகாரம் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தால் கர்த்தர் நம்மையும் தண்டித்து விடுவார். ஆதலால் கர்த்தருக்குள் பிரியமானவர்களே, நாம் எந்த சூழ்நிலமையிலும் கர்த்தருக்கு பொல்லாப்பு செய்யும் படி நடக்கிறவர்களின் உதவியை தேடக்கூடாது, அவர்களோடு இருக்கவும் கூடாது. இதனை கருத்தில் கொண்டு நம்மை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.