தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 107: 13

தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாமும்,  நம்முடைய பின் தலைமுறைகள் (சபை) கர்த்தரின் சுதந்தரத்தில் பங்கடையும்படியாக நாம் தேவ சித்தம் செய்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தருக்கு விரோதமாக பொல்லாப்பு செய்கிறவர்களின் உதவியை, எந்த சூழ்நிலைமை நமக்கு வந்தாலும் அவர்களுடைய உதவியை தேடக்கூடாது என்பதனைக் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்

1இராஜாக்கள் 15:24- 34 

ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான்.

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருஷம் இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான்.

அவன் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.

இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான்.

பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவங்களினிமித்தமும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கின கோபத்தினிமித்தமும், கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே,

அவன் ராஜாவானபின் அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை.

நாதாபின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு,

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களின் பிரகாரம் ஆசாவின் கால்களில் வியாதிகண்டு, அவன் மரித்தான்.  அவன் நித்திரையடைந்த பின்பு, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருஷத்திலே யெரொமெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி, இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்.  அவன் கர்த்தருடைய பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து, தன் தகப்பன் வழியிலும், அவன் இஸ்ரவேலை பாவஞ்செய்ய பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.  இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனாகிய பாஷா, அவனுக்கு விரோதமாக கட்டுபாடுப் பண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிகைப்போட்டிருக்கையில், பாஷா அவனை கிபெத்தோனிலே வெட்டிப் போட்டான்.  பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக்கொன்றுப் போட்டபின் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். அப்பொழுது  யெரொபெயாமின் பாவத்தின் காரணமாக, கர்த்தர் அகியாவை வைத்துச் சொன்ன காரியங்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றி யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான். யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றும் அவன் அழிக்காமல் விடவில்லை.  ஆசாவுக்கும், பாசாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துக்கொண்டிருந்தது. யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே, அகியாவின் குமாரனாகிய பாஷா இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலை பாவஞ்செய்யபண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.  

ஆதலால் பிரியமானவர்களே, யெரொபெயாமை போல நாம் கர்த்தருக்கு விரோதமான பொல்லாப்புகளை செய்தால் கர்த்தருடைய கோபம் நம்மேல் பற்றியெரியும்; ஆகையால் அது நம்முடைய தலைமுறைதோறும் தேவனுடைய கோபம் உண்டாகும்.  ஆதலால் நம்முடைய உள்ளத்தில் எந்த தீய சிந்தைகளுக்கோ இடம் கொடாதபடி, கிறிஸ்துவின் வசனத்திற்கு கீழ்படிந்து அவர் சித்தம் செய்வோமானால் நம்முடைய மனக்கலக்கங்களை கர்த்தர் மாற்றுவார்.  அப்படியாக நம்முடைய வாழ்வை பரிசுத்தப்படுத்தும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.