தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1தெசலோனிக்கேயர் 5:20,21 

தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.

எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் தீர்க்கதரிசனத்தை அற்பமாக எண்ணி அதனை அசட்டைபண்ணாமல் ஜாக்கிரதையோடு நம் ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாமும், நம்முடைய பின் தலைமுறைகள் கர்த்தரின் சுதந்தரத்தில் பஙகடையும்படியாக நாம் தேவ சித்தம் செய்து நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 16:1-8 

பாஷாவுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று, அவர்:

நான் உன்னைத் தூளிலிருந்து உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாக வைத்திருக்கையில், நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என் ஜனமாகிய இஸ்ரவேல் தங்கள் பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவஞ்செய்யப்பண்ணுகிறபடியினால்,

இதோ, நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துப்போட்டு, உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன்.

பாஷாவின் சந்ததியிலே பட்டணத்தில் சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்றார்.

பாஷாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

பாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

பாஷா தன் கைகளின் செய்கையால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கி, அவர் பார்வைக்குச் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதினிமித்தமும், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும் அவன் வீட்டுக்கும் விரோதமாக ஆனானியின் குமாரனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் கர்த்தருடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று.

யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருஷம் அரசாண்டான்.

பாஷாவுக்கு விரோதமாக கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று.  கர்த்தருடைய வார்த்தையாவது, நான் உன்னை தூளிலிருந்து உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் தலைவனாக வைத்திருக்கையில், நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என் ஜனமாகிய இஸ்ரவேல் தங்கள் பாவங்களால் எனக்கு கோபம் உண்டாக்கும்படி அவர்களை பாவஞ்செய்யப்பண்ணுகிறபடியினால், இதோ நான் பாஷாவின் பின்னடியாரையும், அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துப்போட்டு உன் வீட்டை யெரொபெயாமின் வீட்டைபோல ஆக்குவேன்.  பாஷாவின் சந்ததியிலே பட்டணத்தில் சாகிறவனை நாய்கள் தின்னும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்றார். பாஷாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனுடைய வல்லமையும்,  இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.  பாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  பாஷா தன் கைகளின் செய்கையால் கர்த்தருக்கு கோபமுண்டாக்கி, அவர் பார்வைக்கு செய்த எல்லா பொல்லாப்பினிமித்தமும் அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதினிமித்தமும், இவர்களை போல ஆவான் என்று அவனுக்கும் அவன் வீட்டுக்கும் விரோதமாக ஆனானியின் குமாரனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின் மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருஷம் அரசாண்டான்.   பின்னும் நடந்த காரியங்கள் என்னவென்றால் 

1இராஜாக்கள் 16 :9-13  

இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவன் ஊழியக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறிகொண்டிருக்கையில்,

சிம்ரி உள்ளே புகுந்து, யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்தில் அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவன் இனத்தாரையாகிலும், அவன் சிநேகிதரையாகிலும், சுவரில் நீர்விடும் ஒரு நாயையாகிலும், அவன் உயிரோடே வைக்கவில்லை.

அப்படியே பாஷாவும், அவன் குமாரனாகிய ஏலாவும், தங்கள் வீணான விக்கிரகங்களினாலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கிச் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான அவர்களுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும்,

கர்த்தர் தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் விக்கிரகங்களினால் இஸ்ரவேலை பாவஞ்செய்யபண்ணினதினால் பாஷாவின் ஊழியக்காரனாகிய சிம்ரியை கொண்டு பாஷாவின் வீட்டாரையெல்லாம் கர்த்தர் அழித்துப்போடுகிறார்.  

கர்த்தருக்குள் பிரியமானவர்களே நாம் எந்தவிதத்திலாகிலும் கர்த்தருக்கு விரோதமாக பாவஞ்செய்து, கர்த்தருக்கு கோபம் உண்டாக்குவோமானால் அவர் நம்மை மட்டுமல்ல, நம்முடைய பின்னடியாரும் கர்த்தரின் சுதந்தரத்தில் பங்கடையவிடாதபடி அவர்களின் ஆத்துமாவையும் அழித்து போடுகிறார் என்பதனை வாசிக்க முடிகிறது. என்னவென்றால் நம்மை கர்த்தர் அவருடைய இரத்தத்தால் மீட்டு, இரட்சித்திரிக்கையில் நாம் கர்த்தரின் கட்டளையை மீறி நடந்து, உடன்படிக்கையை பற்றிக்கொள்ளாமல், அவர் வார்த்தையை அலட்சியம் செய்து,  தங்கள் மனம் போன போக்கில் வாழ்வோமானால், நம் கர்த்தருக்கு செய்த துரோகம்., நம் பின்னடியரை தொடரும் என்பதனை கருத்தில் கொண்டு, நாம்  ஒரு போதும் அவருடைய தீர்க்கதரிசன  வார்த்தையை அசட்டை பண்ணாமல் நம்முடைய வீடுகள் தலைமுறை தோறும் ஆசீர்வதிக்கப்படும் படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.