தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1யோவான் 3:7 

பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் தன்னிச்சையாக செயல்படக்கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் தீர்க்கதரிசனத்தை அற்பமாக எண்ணி அதனை அசட்டைபண்ணாமல் ஜாக்கிரதையோடு நம் ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 16:14-24

ஏலாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்; ஜனங்கள் அப்பொழுது பெலிஸ்தருக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராகப் பாளயமிறங்கியிருந்தார்கள்.

சிம்ரி கட்டுப்பாடுபண்ணி, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே பாளயமிறங்கின ஜனங்கள் கேட்டபோது, இஸ்ரவேலரெல்லாம் அந்நாளிலேதானே பாளயத்திலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேல்மேல் ராஜாவாக்கினார்கள்.

அப்பொழுது உம்ரியும் அவனோடேகூட இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து, திர்சாவை முற்றிக்கை போட்டார்கள்.

பட்டணம் பிடிபட்டதைச் சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரமனைக்குள் பிரவேசித்து, தான் இருக்கிற ராஜ அரமனையைத் தீக்கொளுத்தி, அதிலே செத்தான்.

அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவன் பாவத்திலும் நடந்ததினால், கட்டிக்கொண்ட அவனுடைய பாவங்களினிமித்தம் அப்படி நடந்தது.

சிம்ரியின் மற்ற வர்த்தமானங்களும், அவன் பண்ணின அவனுடைய கட்டுப்பாடும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் இரண்டு வகுப்பாய்ப் பிரிந்து, பாதி ஜனங்கள் கீனாத்தின் குமாரனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி ஜனங்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள்.

ஆனாலும் கீனாத்தின் குமாரனாகிய திப்னியைப் பின்பற்றின ஜனங்களைப்பார்க்கிலும், உம்ரியைப் பின்பற்றின ஜனங்கள் பலத்துப் போனார்கள்; திப்னி செத்துப்போனான்; உம்ரி அரசாண்டான்.

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு,

பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைத் தரித்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்கள் பிரகாரம் சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டபின் ஏலாவின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும்  இஸ்ரவேல் ராஜாக்களுடைய நாளாகம புஸ்தகத்தில் எழுதபட்டிருக்கிறது.  மேலும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி ஏழு நாள் ராஜாவாயிருந்தான். ஜனங்கள்  பெலிஸ்தருக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராகப் பாளயமிறஙகியிருந்தார்கள்.    சிம்ரி கட்டுபாடு பண்ணி, ராஜாவைக்கொன்றுப்போட்டான் என்பதை அங்கே பாளயமிறங்கின ஜனங்கள் கேட்ட போது, இஸ்ரவேலரெல்லாம் அந்நாளிலேதானே பாளயத்திலே படைதலைவனாகிய உம்ரியை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக்கினார்கள். உம்ரியும் அவனோடேகூட இஸ்ரவேனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து திர்சாவை முற்றுகைப்போட்டார்கள்.  பட்டணம் பிடிபட்டதை சிம்ரி கண்ட போது, அவன் ராஜாவின் வீடாகிய அரமனைக்குள் பிரவேசித்து, தான் இருக்கிற ராஜ அரமனையைத் தீக்கொழுத்தி அதிலே செத்தான். சிம்ரி, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதை செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலை பாவஞ்செய்யபண்ணின அவன் பாவத்திலும் நடந்ததினால், கட்டிக்கொண்ட அவன் பாவங்களினிமித்தம் அப்படி நடந்தது. பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் இரண்டு வகுப்பாய் பிரிந்து பாதி ஜனங்கள் கீனாத்தின் குமாரனாகிய திப்னியை ராஜாவாக்கி, அவனை பின்பற்றினார்கள்; பாதி பேர் உம்ரியை பின்பற்றினார்கள்.  திப்னியை பின்பற்றின ஜனங்களை பார்க்கிலும் உம்ரியை பின்பற்றின ஜனங்கள் பலத்துப் போனார்கள்.  திப்னி செத்து போனான்; உம்ரி அரசாண்டான். 

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் யெரொபெயாமின் வழிகளில் நடந்து கர்த்தருக்கு விரோதமான செயல்கள் செய்தால், அந்த ராஜ்யபாரங்கள் நிலை நிற்காது என்றும், மற்றும் மற்றவர்களின் ராஜ்யபாரம் எடுக்க வேண்டும் என்று நினைத்து தன்னிச்சையாக நடந்துக்கொள்ளுகிறவர்களுடைய ராஐ்யபாரம் நிலைத்திராது என்றும் ஒவ்வொருவரும் அறிந்துக்கொள்ள வேண்டும்.  இங்கு நாம் வாசிக்கும் போது ராஜாக்கள் கொல்லப்படுவதும், கொல்லப்பட்ட ராஜாக்களின் ஸ்தானத்தை எடுக்கிறவர்களும், நிலைத்திரார்கள்.  இதனை போல் நம்மில் அநேகம் பேர் கர்த்தரின் சபையை இரண்டாக்கி, ஆத்துமாக்களை வஞ்சித்து வைத்து, அவர்கள் தங்கள் தேவைகளுக்காக தேவனுடைய வேலையை தாங்கள் ஆதாயதொழிலென்று எண்ணுகிறார்கள். அவர்களை குறித்து கர்த்தர் சொல்வது, அவர்கள் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ் செய்கிறார்கள்.  அல்லாமலும் அநேகர் பிறரிடம் இருக்கிற அபிஷேகம் தங்களுக்கு வேண்டுமென்று ஆசைப்படுகிறவர்களும் உண்டு.  அவர்களுடைய அபிஷேகம் நிலைத்திராமல், அது சிம்ரி பெற்ற ராஜ்யபாரம் போலாகும்.  

ஆதலால் பிரியமானவர்களே, இதனை வாசிக்கிற யாவரும் மேற்குறிக்கப்பட்டிருக்கிற கருத்துக்களை கவனமாய் ஆராய்ந்தறிந்து, தங்களை கெடுத்துக்கொண்டவர்களை போல் ஆகாதபடிக்கும், அநீதத்தின் பலனை அடையாதபடிக்கும் தங்களை காத்துக்கொள்ள வேண்டும்.  அல்லாமலும் கிறிஸ்துவின் அபிஷேகம் பெற்று, அனுதினம் கர்த்தருக்குரிய காரியங்களில் கவனமாய் நடந்து, பரிசுத்தம் பெற்று, கர்த்தருக்கு செம்மையானதை செய்து, நீதியின் பலனை சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களாக நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.