தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 20:7 

நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய பெயரை நிலங்களுக்கு தரிக்கலாகாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நாம் ஒரு போதும் தன்னிச்சையாக செயல்படக்கூடாது என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜக்கள் 16:23-28 

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு,

பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைத் தரித்தான்.

உம்ரி கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கேடாய் நடந்து,

நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் சகல வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குத் தங்கள் வீணான விக்கிரகங்களாலே கோபம் மூட்டும்படியாய் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவங்களிலும் நடந்தான்.

உம்ரி செய்த அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

உம்ரி தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, சமாரியாவிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளின்படி உம்ரியின் ராஜ்ய பாரம் பலத்துப்போனபடியால் யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேலின் மேல் ராஜாவாகி பன்னிரண்டு வருஷம் அரசாண்டான்; அவன் திர்சாவிலே ஆறு வருஷம் அரசாண்டான்; பின்பு சேமேரியின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்துக்கு வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின் மேல் ஒரு பட்டணத்தை கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாகிய சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரை தரித்தான்.  உம்ரி கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்து, தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கேடாய் நடந்து நேபாத்தின் குமாரனாகிய யெரொபயாமின் சகல வழிகளில் நடந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு தங்கள் வீணான விக்கிரகங்களினாலே கோபம் மூட்டும்படியாய் இஸ்ரவேலைப்  பாவம் செய்யப்பண்ணின அவனுடைய பாவங்களிலும் நடந்தான்.  உம்ரி செய்த அவனுடைய வர்த்தமானங்களும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.  உம்ரி தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, சமாரியாவிலே அடக்கம்பண்ணப்பட்டான்.  அவன் குமாரனாகிய ஆகாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  

பிரியமானவர்களே மேற்கூறிய வசனங்களை தியானிக்கும் போது இஸ்ரவேலை அரசாண்ட உம்ரி, தான் இரண்டு வெள்ளிகாசுக்கு விலைக்கு வாங்கின மலையின் எஜமானுடைய பெயரை, அந்த மலையின் மேல் கட்டின பட்டணத்திற்கு போடுகிறான்.  மேலும் கர்த்தர் உம்ரியை குறித்து சொல்வதாவது, இவன் முந்தின ராஜாக்களை காட்டிலும் கேடாய் நடந்தான் என்றும், யெரொபெயாமின் எல்லா பாவங்களிலும் நடந்தான் என்றும் சொல்லப்படுகிறது. அல்லாமலும் அவன் செய்த கேடானது,  குறிப்பாக எஜமானுடைய பெயரைக்கொண்டு சமாரியா என்று பேரிடப்பட்டதால், அது இந்நாள்வரைக்குமு் புறஜாதிகளுடைய தேசமாக கருதப்படுகிறது. இதனைக்குறித்து 

சங்கீதம் 49:11-14  

தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.

ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா.)

ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.

மேற்கூறப்பட்ட வசனங்களின்படி மனுஷர்களுடைய பெயரை நிலங்களுக்கு தரிக்கக்கூடாது.  இவ்விதமாக மேற்கூறிய கரரியங்களை கருத்தில் கொண்டு, உம்ரியை போல கேடான காரியங்களை நாம் செய்யாதபடி நம்மை கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.  

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.