தேவனுக்கே மகிமையுண்டாவதாக
ஏசாயா 55:13
முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் நம்முடைய வாழ்வில் சாபத்தீடானதிற்கு அடிமைப்படாதபடி காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய பெயரை நிலங்களுக்கு தரிக்கலாகாது என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 16:29-34
யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்.
உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு,
தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான்.
ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான்.
அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக் கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.
மேற்கூறிய வசனங்களில் உம்ரி கர்த்தருக்கு விரோதமான பொல்லாப்புகளை செய்து தன் பிதாக்களோடே நித்திரையடைந்து சமாரியாவிலே அடக்கம்பண்ணபட்ட பின்பு; அவன் குமாரனாகிய ஆகாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். ஆனால் அவன் யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது கொஞ்சம் காரியமென்று நினைத்தாற்போல், அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம் பண்ணினதுமல்லாமல் , அவன் போய் பாகாலையும் சேவித்து, அதனை பணிந்துக்கொண்டு, தான் சமாரியாவிலே கட்டின கோவிலிலே பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான். அதுவுமட்டுமில்லாமல் ஆகாப் ஒரு விக்கிரக தோப்பையும் வைத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய் செய்துவந்தான். அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான். கர்த்தர் நூனின் குமாரனகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின் படியே அதின்அஸ்திபாரத்தை போடுகிறபோது, அபிராம் என்னும் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செசூப் என்னும் தன் இளைய குமாரனையும் சாகக்கொடுத்தான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்டிருக்கிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால் யெரொபெயாமின் ராஜ்யபாரத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் பாவங்கள் செய்வதற்கேதுவாக யெரொபயாமின் பாவங்கள் தொடந்துக்கொண்டு இருக்கிறதை பார்க்கிறோம். மேலும் ராஜாக்கள் கொஞ்ச காரியமான பாவங்கள் என்று நினைக்கிறதின் காரணமாக அங்கு பாவங்கள் மீண்டும் பெருகிக்கொண்டிருக்கிறது, அதனை யாரும் உணரவில்லை. இப்படிதான் நம்மிலும் அநேகம் பேர் கேடானவைகளை செய்து கெட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள். அவ்விதம் உள்ளவர்களின் உள்ளத்தில் கர்த்தரால் இடித்து உடைக்கப்பட்ட சாப கட்டுகள் மீண்டும் தலையெடுக்கும் என்பதனை திருஷ்டாந்தப்படுத்தி, ஈயேல் எரிகோவை கட்டுகிறதை பார்க்கிறோம். என்னவென்றால் கர்த்தருடைய வார்த்தை யோசுவா மூலம் எரிகோவை மறுபடியும் கட்டத்தொடங்கினால் அதன் அஸ்திபாரம் போடும் போது மூத்த குமாரனும், அதன் வாசல்கள் வைக்கும் போது தன் இளைய குமாரனையும் சாகக்கொடுப்பார்கள் என்ற வார்த்தை பிரகாரம் ஈயேலுக்கு நடந்தது. ஆதலால் எரிகோ என்பது நம்முடைய இரட்சிப்புக்கு முன்னால் இருந்த அனுபவம். இவ்விதமாக நாம் விட்டு விட்ட சாபதீடான காரியங்களை மீண்டும் நம் வாழ்வில் கொண்டு வந்தால் நம்முடைய ஆத்துமா மரிக்கும்; மேலும் நாமும் பலனில்லாதவர்களாக அழிந்து போகுவோம். நாம் வாழ்ந்த கிறிஸ்தவ வாழ்க்கை ஒற்றுமில்லாமல் வெறுமையாக்கப்படும். ஆதலால் இரட்சிப்பை பெற்ற நாம் ஒரு போதும் சாபத்திற்குள்ளாகாதபடி ஜாக்கிரதையாக நம்மை காத்துக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.