தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 17:20,21 

தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் தேவனுடைய ராஜ்யம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒருபோதும் நம்முடைய வாழ்வில் சாபத்தீடானதிற்கு அடிமைப்படாதபடி காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 17:1-5 

கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:

நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.

அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.

அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.

மேற்கூறிய பகுதிகளில் ஆகாப் இஸ்ரவேலை ஆளுகை செய்துக்கொணடிருக்கும் போது ஈயேல் எரிகோவைக் கட்டினான். கிலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி சொன்னது: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களில் பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்றான்.  பின்பு கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி; கர்த்தர் சொன்னது நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒழித்துக்கொண்டிரு; அந்த ஆற்றின்தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னை போஷிக்க காகங்களுக்கு கட்டளையிடுவேன் என்றார்.  அவன் போய் கர்த்தருடைய வார்த்தையின் படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் தங்கியிருந்தான். பின்னும் கர்த்தர் சொன்னது போல் 

1இராஜாக்கள் 17:6-8 

காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.

தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சில நாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று.

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:

மேற்கூறிய கர்த்தருடைய வார்த்தைகள் நிறைவேறின பின்பு கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி; அவர் நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்கு போய், அங்கே தங்கியிரு ; உன்னை பராமரிக்கும் படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன் என்றார். அப்படியே கர்த்தரின் வார்த்தையின் படியே அவன் எழுந்து 

1இராஜாக்கள் 17 :10-14 

அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.

கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.

அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.

அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம்.

கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

மேற்கூறிய வார்த்தைகளை எலியா சொன்னபிரகாரம் அவள் செய்தாள்; அவளும் இவனும் அவள் வீட்டாரும் அநேக நாள் சாப்பிட்டார்கள்.  கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே , பானையிலே மா செலவழிந்துப் போகவும் இல்லை; கலசத்தில் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் நம்முடைய உள்ளத்தில் தேவனுடைய ராஜ்யம் வருவதற்கான திருஷ்டாந்தங்கள் என்பதனை உணர்ந்துக் கொள்ள வேண்டும்.  எப்படியெனில் இஸ்ரவேலின் ராஜா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு உள்ளத்தில் இடம் கொடாமல் நாம் உலக ஐக்கியங்களுக்கு இடம் கொடுப்போமானால் அங்கு வருகிறவன் ஆகாப் அவன் நம் உள்ளத்தில் பாகாலின் பலிபீடம் அமைப்பான் என்பதும்; அவன் மனைவி யேசபேல்; அவள் சீதோனியாவை சேர்ந்தவளும், சீதோனியரின் ராஜாவாகிய ஏத் பாகாலின் குமாரத்தியும், மற்றும் அவன் பாகாலையும் சேவித்து பணிந்துக் கொள்கிறான் என்பதும் வாசிக்க முடிகிறது. அவ்விதம் நாம் பாகாலுக்கு இடம் கொடுப்போமானால்   மீண்டும் நாம் எரிகோ பட்டணமாகுவோம் என்பதும்; அவ்விதம் தேவனுக்கு விரோதமான காரியங்களை செய்வதினால் ; கர்த்தர் தீர்க்கதரிசியைக்கொண்டு அவர் செய்யபோகிற காரியங்களை சொல்கிறார்.  அதென்னவனில் அத்தேசத்தில் பனியும் மழையும் பெய்யாது என்பது,  பாகாலின் பலிபீடமாக நம் உள்ளம் விக்கிரகங்கள் இருக்குமானால் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் வெளிப்படாது என்றும்; ஆனால் நம் உள்ளத்தில் பெற்றுக்கொண்டிருந்த தீர்க்கதரிசியின் வார்த்தைகளை கர்த்தர் அழிந்து போகாமல் பாதுகாக்கிறவர் என்பதும்; பின்பு நம்முடைய வாழ்வு மணவாளன் வெளிப்படாத வாழ்வாக இருந்தால் அது சாறிபார் ஊர் ஆகவும், நம்மை விதவைக்கு ஒப்பாக்கி; அந்த ஆத்துமா மரித்து போகாமல் பாதுகாக்கும்  படியாக கர்த்தர் தீர்க்கதரிசியை அனுப்பி அந்த விதவையின் ஆத்துமா அழிந்து போகாதபடி பாதுகாக்கிறார். பின்பு உயிர்த்தெழுந்த கிறிஸ்து அங்கு மகிமையாக என்றன்றைக்கும் வாசம்பண்ணுகிறவராக வெளிப்படுகிறார்.  இப்படியாக கர்த்தர் நம்மை உடைத்து உருவாக்கி நம்மை அவருடைய மகிமையான அபிஷேகத்தால் நிரப்புகிறார்.  இப்படியாக தேவனுடைய ராஜ்யம்(குறையாத அப்பமும், எண்ணெயும்) நம் உள்ளத்தில் வெளிப்படுகிறது.  இதற்காக நாம் காத்திருந்து பெற்றுக்கொள்ளும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.