தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 23:6 

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை கர்த்தர் நிறைவாக்குகிறார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில் மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளம் தேவனுடைய ராஜ்யம் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 17:15-24 

அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.

கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.

இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்? என்றாள்.

அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:

என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு;

அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.

கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது; அவன் பிழைத்தான்.

அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.

அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.

மேற்கூறிய வசனங்களில் சாறிபாத் ஊர் விதவையின் உள்ளம் தேவனுடைய ராஜ்யமாக மாறியதின் திருஷ்டாந்தம். கர்த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே பானையில் மா செலவழிந்து போகவும் இல்லை, கலசத்தில் எண்ணைய் குறையவும் இல்லை.  பானையின் மாவும், கலசத்தில் எண்ணையும் என்றால்; நம் உள்ளத்தில் கர்த்தராகிய இயேசு உயிர்தெழுந்திருக்கிறார் என்பதன் திருஷ்டாந்தம்.  இவைகள் நடந்த பின்பு, வீட்டுகாரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அந்த வியாதி அதிகரித்துகொண்டே இருந்தது.  அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும்  என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர்  என்றதற்கு தேவனுடைய மனுஷன் 

1 இராஜாக்கள் 17:19  

அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:

அவ்விதம் பிள்ளையை தாயினிடத்திலிருந்து வாங்கி 

1இராஜாக்கள் 17:20, 21 

என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு;

அந்தப் பிள்ளையின்மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.

மேற்கூறப்பட்ட வார்த்தைகளினால் கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணின போது; கர்த்தர் எலியாவின் சத்தத்தை கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுக்குள் திரும்பி வந்தது; அவன் பிழைத்தான்.  அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல் வீட்டிலிருந்து அவனை கீழ் வீட்டிற்குள் கொண்டு வந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து; பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான். பின்பு அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி; நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தருடைய வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றாள். 

பிரியமானவர்களே, கர்த்தரின் வாயிலிருந்து பிறக்கும் வார்த்தைகள் உண்மையானவைகள் என்பதனை இங்கு நிரூபிக்கிறார்.  அல்லாமலும் ஆத்துமா உயிர்ப்பிக்கப்பட்ட சாறிபாத் ஊர் விதவையின் வாழ்வில் கர்த்தரின் பரீட்சை நடந்த போது, அவள் முறுமுறுக்கிறாள்.  ஆனால் இரக்கமுள்ள தேவன் தேவனுடைய மனுஷனுடைய விண்ணப்பத்தை அங்கீகரிக்கிறார்.  அல்லாமலும் அவள் ஆத்துமா மேல்வீட்டின் அனுபவத்தில் வரவேண்டும் என்பதற்காகவே இவ்விதமாக ஒரு பரீட்சை நடத்துகிறார். அந்த மேல் வீடானது கிறிஸ்துவின் மாம்சமும்,கிறிஸ்துவின் இரத்தமும் புசிக்கிற இடம். கிறிஸ்துவின் மாம்சம் அப்பமாகவும், அவருடைய இரத்தத்திற்கு திராட்ச ரசமும் ஆசீர்வதித்து தந்து, நாம் அதனை புசிக்கும் போது நம்முடைய ஆத்துமா என்றன்றைக்கும் பிழைக்கும்படியாக செய்கிறார்.  இவைகள் தான் சாறிபாத் ஊர் விதவையின்  வாழ்வை கர்த்தர் நிறைவாக்குகிறார்.  இவ்விதமாக கர்த்தர் நம்மையும் கிறிஸ்துவுகுள்ளாக நிறைவாக்கி ஆசீர்வதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.