தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 116:13
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் உயிர்தெழுந்த கிறிஸ்துவை ஆராதிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமாவை பூரணகிருபையால் கர்த்தர் நிறைவாக்குகிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 18:1-5
அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோவெனில் சமாரியாவிலே கொடிதாயிருந்தது.
ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான்.
யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.
ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களின் விளக்கம் என்னவென்றால் ஆகாபும் அவன் மனைவியாகிய யேசபேலும் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானவைகளை செய்கிற படியால், ஆகாபுடைய அரமனை விசாரிப்புக்காரனை வைத்தே கர்த்தர் தம்முடைய தீர்க்கதரிசிகளை பாதுகாக்கும் இருதயத்தை கொடுக்கிறார். மேலும் எலியா ஆகாபை சந்திக்கும்படிக்கு ஒரு முகாந்தரத்தை ஒருக்குகிறார். இதனை கர்த்தர் திருஷ்டாந்தபடுத்துவது என்னவென்றால் நம் உள்ளம் ஆகாபுடைய ராஜ்யபாரமானால், கர்த்தரின் நற்கிரியைகளை அழிக்கும்படி பரஸ்திரீயாகிய யேசபேல் ஆகாபுடைய மனைவியாகிய மணவாட்டி சபையாகயிருந்து நம்முடைய பரிசுத்த வாழ்வை சீர்குலைக்கும்வண்ணம் திட்டம்போட்டுக்கொண்டிருப்பதால் கர்த்தர் பனியும் மழையும் பெ்யாதிருக்கும் என்று ஆகாபுக்கு கட்டளையிடுகிறார். ஆகையால் ஆகாப் யேசபேல் கிரியைகளை அழிக்கும் படி மூன்று வருஷத்திற்கு பின்பு, அவர் தம்முடைய தீர்க்கதரிசி நம்மில் வெளிப்படுகிறார் என்பதும், அதற்கு முகாந்தரம் ஒருக்கும்படியாகவே ஆகாபுடைய அரண்மனை விசாரிப்புக்காரனை ஏற்ப்படுத்துகிறதையும் பார்க்கிறோம். இதனை விளக்கவே நம் நடுவில் ஒரு தீர்க்கதரிசி தோன்றுவார் என்று எழுதப்பட்டிருக்கிறது. இதன் வசனம்
உபாகமம் 18:9-15
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும்போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்.
தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,
மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.
இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.
உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.
நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார்.
உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்கள் கிறிஸ்துவுக்கு திருஷ்டாந்தம். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில், ராஜாதி ராஜாவாகவும், பரிசுத்த ஆவியானவர் மணவாட்டி சபையாகவும் வெளிப்படும் போது, யேசபேலின் தந்திர கிரியைகளாகிய பாகாலின் மேடைகளை கர்த்தர் உடைத்து நிர்மூலம் பண்ணவும் எழுந்தருளுகிறார் என்பது தான், திருஷ்டாந்தத்தோடு நீ போய் ஆகாபுக்கு உன்னை காண்பி; கர்த்தர் தேசத்தின் மேல் மழையை கட்டளையிடுவேன் என்று எலியாவிடம் சொல்லியனுப்புகிறார். அவ்விதம் கர்த்தர் நம்நடுவில் உயிர்த்தெழுகிறார் என்பதும், இவ்விதம் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை ஆராதிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.