தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யோவான் 12:47

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் உலக இரட்சகராக உயிர்தெழுந்த கிறிஸ்து வெளிப்படுகிறார்.  

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் உயிர்தெழுந்த கிறிஸ்துவை ஆராதிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 18: 6-21 

அப்படியே தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள்.

ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;

அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான்.

அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன்.

உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்.

இப்போதும் நீ போய், உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.

நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயதுமுதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன்.

யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறுபேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?

இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்.

அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான்.

ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான்.

அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.

இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.

அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.

அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

மேற்கூறப்பட்டிருக்கிற வசனங்களில் எலியா ஒபதியாவிடம் இன்றைக்கு என்னை ஆகாபிடத்தில் காண்பிப்பேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்ட பின் ஒபதியா ஆகாபிடத்தில் போய் எலியா சொல்ல சொன்னதை அறிவித்தான்; அப்பொழுது ஆகாப் எலியாவை சந்திக்க போனான்.  ஆகாப் எலியாவை கண்டவுடனே இஸ்ரவேலை கலங்கபண்ணுகிறவன் நீயல்லவா என்றதற்கு எலியா இஸ்ரவேலை கலங்க பண்ணுகிறவன் நானல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களை பினபற்றினதால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலை கலங்கப்பண்ணுகிறவர்கள்.  பின்பு எலியா சொன்னது 

1இராஜாக்கள் 18:19 

இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான்.

மேற்கூறபட்ட வார்த்தைகளை கேட்ட ஆகாப் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி கர்மேல் பர்வதத்திலே அந்த தீர்க்கதரிசிகளை கூடிவரும்படி செய்தான்.  அப்பொழுது எலியா சகல ஜனதண்டைக்கும் வந்து சொன்னது 

1இராஜாக்கள் 18:21  

அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

மேற்கூறிய வார்த்தைகளை கேட்ட ஜனங்கள் அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.  

பிரியமானவர்களே, மேற்கூறபட்டிருக்கிற வசனங்களை நாம் தியானிக்கையில் நமக்கு புரியவருவது என்னவென்றால் இஸ்ரவேலர்கள் தான் பாகால்களை சேவிக்கிறார்கள், அவர்கள் கர்த்தரையும் சேவிக்கிறார்கள்.  ஆதலால் தான் எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்தி குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வம் ஆனால் அவரை பின்பற்றுங்கள், பாகால் தெய்வம் ஆனால் அவரை பின்பற்றுங்கள் என்றதற்கு ஜனங்கள் எந்த மறுபடியும் சொல்ல வில்லை.  இதிலிருந்து என்ன தெரிகிறது; ஜனங்கள் கர்த்தரை சரியாக அறிந்துக்கொள்ளவில்லை.  இதனை போல இப்போதும் அநேகருடைய உள்ளங்கள் பாகாலின் பலிபீடமாக தான் இருக்கிறது என்பதும் அவர்களின் மணவாட்டி சபை யேசபேலின் கிரியைகளும், ஆகாபுடைய ஆளுகையுமாக இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.  யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளை கொலை செய்கிறாள் என்றால் கர்த்தரின் தீர்க்கதரிசன வார்த்தைகளாகிய அவருடைய கட்டளைகளை கற்பனைகளை கைக்கொள்ளவிடாதபடி ஆத்துமாவை அழித்துக்கொண்டிருக்கிறாள்.  எப்படியெனில் பலவிதமான உலக உல்லாசங்களை செய்ய வைத்து கர்த்தரின் வார்த்தைகளை அசட்டைபண்ணும்படியாக கிரியை நடப்பிப்பது வேசிதன ஆவி.  அவ்விதம் இருக்கிற உள்ளங்கள் விக்கிரகங்களால் நிறைபட்டு, அது விக்கிரக தோப்பாகி விடுகிறது.  இதனை நம் உள்ளத்தில் அழிக்கும்படியாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, உயிர்த்தெழுந்து நம்மில் ராஜ்யபாரம் செய்து ஆளுகை நடப்பித்து ஆகாபிய அரண்மனையாகிய விக்கிரக தோப்புகளை நிர்மூலம் பண்ணி கிறிஸ்து உலக இரட்சகராக நம்மில் வெளிப்படுகிறார்; அப்படிபட்டவர்களை கர்த்தர் அவரோடு நித்திய ராஜ்யத்திற்காக ஆயத்தப்படுத்துகிறார். இப்படியாக நாம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் அவர் உலகத்தின் இரட்சகராக வெளிப்படும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.