தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 118: 25

கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் சோர்ந்து போகாமல் நற்கிரியைகளை செய்து, தேவபெலன் தரித்து,விசுவாச யாத்திரையில் பரிசுத்த பர்வதத்தை அடைந்துக்கொள்வோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் கிறிஸ்து ராஜாவாக எழுந்தருளி, ஆகாபின் ராஜ்யபாரத்தை நம்மை விட்டு மாற்றுகிறாணவார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில் 

1இராஜாக்கள் 19:1-8 

எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.

அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.

அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான்.

அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி,

ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான்.

அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான்.

கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான்.

அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான்.

மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளில், எலியா செய்த எல்லாவற்றையும் அவன் தீர்க்கதரிகளெல்லாரையும் பட்டயத்தால் கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும் ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்.  அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி, அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்கு செய்யப்பட்டது போல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதே போனால்  தேவர்கள் அதற்கு சரியாகவும், அதற்கு அதிகமாகவும் எனக்கு செய்யக் கடவர்கள் என்று சொல்லியனுப்பினாள்.   அது அவனுக்கு தெரிந்த போது எழுந்து தன் பிராணனைக் காக்க யூதாவை சேர்ந்த பெயர்செபாவுக்குப் புறப்பட்டு போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்தி விட்டான். அவன் வனாந்தரத்தில் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக் கொள்ளும்; நான் என் பிதாக்களைப் பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, ஒரு சூரைசெடியின் கீழ் படுத்துக்கொண்டு நித்திரை செய்தான்.  அப்பொழுது ஒரு தூதன் தட்டியெழுப்பி எழுந்திரு போஜனம்பண்ணு என்றான்.   அவன் விழித்து பார்க்கிற போது, இதோ தழலின் மேல் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் இருந்தது; அவன் அதை புசித்து குடித்தும் திரும்ப படுத்துக்கொண்டான்.  கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் தட்டி எழுப்பி எழுந்திருந்து போஜனம் பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகு தூரம் என்றான்.   அப்பொழுது அவன் புசித்து குடித்து , அந்த போஜனத்தின் பலத்தினால் நாற்பது நாள் இரவும் பகலும் ஒரேப் என்னும் தேவனுடைய பர்வத மட்டும் நடந்து போனான்.  

பிரியமானவர்களே,  இந்த காரியங்களை கர்த்தர் தீர்க்கதரிசியாகிய எலியாவை கொண்டு நமக்கு திருஷ்டாந்தபடுத்தினதின் விளக்கம் என்னவென்றால், எலியா பாகாலின் தீர்க்தரிசிகளை  பட்டயத்தால் கொன்று போட்டான்; ஆனால் அதன் ராஜாவாகிய ஆகாபோ, யேசபேலோ அழிக்கபடாததின் நிமித்தமாக, அவன் அவர்களின் பயமுறுத்தலினால் சோர்ந்து போகிறான்.  அவ்விதம் சோர்ந்து போகிறவன், தான் கர்த்தரிடத்தில் சாக வேண்டும் என்று கோரி, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும் என்றுசொல்லி சூரைசெடியின் கீழ் படுத்துகொண்டு நித்திரை பண்ணுகிறான். காரணம் என்னவென்றால் அவனுக்குள் ஆத்துமாவில் கிறிஸ்துவின் ஜீவன் உயிர்தெழும்பாததினால் சோர்வு உண்டாகிறது. அவ்விதம் சோர்பான வாழ்வுள்ளவர்களுக்கு சூரை செடி  அவனுக்கு நிழலாகிறது. ஆனால் கிறிஸ்துவின் கிருபையின் நிழலில் நாம் மறைந்து வாழவேண்டும்.  இவ்விதமாக கிருபையில் நிழலில் ஒதுங்க வேண்டுமானால்;  நாமும் நம்முடைய வாழ்வில் மாற்றபட வேண்டியவைகளை மாற்றி, அழிக்க வேண்டியவைகளை அழிப்போமானால் சத்துரு அவன் அவகாசத்தோடு நம்மை பின் தொடரமாட்டான். அப்படி கிறிஸ்துவின் கிருபையின் நிழல் நமக்கு இல்லாவிட்டால்;  நாம் நிற்க நிலையில்லை என்று நினைத்து சோர்ந்து நம் விசுவாசத்தை முடித்து விடுவோம் என்று நினைத்துக்கொள்ளலாம்.  இவ்விதம் அநேக பக்தி உள்ளவர்கள் தங்கள் வாழ்வை கெடுத்துக்கொள்கிறார்கள். ஆதலால் கர்த்தர் எப்படி தூதனை அனுப்பி எலியாவுக்கு தழலின் மேல் சுட்ட அடையும் தண்ணீரும் கொடுத்தாரோ, அப்படியே நமக்கும் கர்த்தர் அவருடைய முதற்பேறானவரை தந்தருளி; அவரிடத்திலிருந்து மணவாட்டியானவரையும் நமக்கு தந்தருளுகிறார்.  இப்படிபட்ட ஆசீர்வாதங்கள் நாம் பெற்றுக்கொள்வோமானால், கர்த்தர் நம் சோர்வுகளை அகற்றி விசுவாச யாத்திரையில் நம்மை பெலனடைய செய்து, கிறிஸ்துவாகிய பரிசுத்த பர்வதத்தில் நாம் போய் சேரமுடியும். இவ்விதம் நாம் சோர்வின்றி தேவ பெலன் தரித்து விசுவாச பயணம் செய்து சேர வேண்டிய ஸ்தலமாகிய பரிசுத்த பர்வதத்தில் வந்தடையும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.