தேவனுக்கே மகிமையுண்டாவதாக
எரேமியா 33:3
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்மை நாம் நினைக்காத பாதையில் கர்த்தர் நம்மை நடத்தி செல்கிறவர்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் சோர்ந்து போகாமல் நற்கிரியைகளை செய்து, தேவ பெலன் பெற்று, விசுவாச யாத்திரையில் பரிசுத்த பர்வதத்தை அடைந்துக்கொள்வோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 19:9-21
அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார்.
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.
பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று.
அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி,
பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு.
சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்.
ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர்பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஒட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான்.
அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக் கொள் என்றான்.
அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.
மேற்கூறிய வசனங்களில் எலியா தேவ பெலன் பெற்று நாற்பது நாள் நடந்து ஒரேப் பர்வதம் மட்டும் போய் அங்குள்ள ஒரு கெபியில் போய் தங்கின போது, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி; எலியாவிடம் உனக்கு என்ன காரியம் என்றார். அதற்கு எலியா சேனைகளின் கர்த்தருக்காக வெகு பக்தி வைராக்கியமாயிருந்தேன். இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையை தள்ளி விட்டு, உமது பலிபீடத்தை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளை பட்டயத்தால் கொன்று போட்டார்கள்; நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருந்தேன், என் பிராணனையும் வாங்க தேடுகிறார்கள் என்றான். அப்போது கர்த்தர்
1இராஜாக்கள் 19:11-12
அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை.
பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று.
மேற்கூறிய பிரகாரம் நடந்த பிறகு, அந்த மெல்லிய சத்தம் கேட்ட போது எலியா தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது கர்த்தர் எலியாவே,இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் உண்டாயிற்று. அதற்கு எலியா சொன்னது
1இராஜாக்கள் 19:14
அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான்.
மேற்கூறிய வார்த்தைகளை கேட்ட கர்த்தர் எலியாவிடம்
1இராஜாக்கள்19:16-18
பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு.
சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான்.
ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கர்த்தர் எலியாவிடம் சொல்ல அவன் அவ்விடம் விட்டு புறப்பட்டு போய், பன்னிரண்டு ஏர் பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடம் மட்டும் போய், அவன் மேல் தன் சால்வையைப் போட்டான். அப்பொழுது அவன் மாடுகளை விட்டு, எலியாவின் பிறகே ஓடி; நான் என் தகப்பனையும், தாயையும் முத்தம் செய்ய உத்தரவு கொடும், அதற்குப் பின் உம்மை பின் தொடர்வேன் என்றான். அதற்கு அவன்; போய் திரும்பி வா; நான் உனக்கு செய்ததை நினைத்துக்கொள் என்றான். அப்பொழுது அவன் இவனை விட்டு போய், ஓர் ஏர் மாடுகளை பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் இறைச்சியை சமைத்து ஜனங்களுக்கு கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்ட பிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்கு பின் சென்று அவனுக்கு ஊழியஞ் செய்தான்.
பிரிமானவர்களே நாம் தேவ பெலன் பெற்று, ஒரு போதும் சத்துருக்களால் சோர்ந்து போகாமலும், கெபிக்குள் போகாமலும், பர்வதத்தில் நிற்கும்படி சொல்கிறார். பர்வதம் என்றால் கத்தரின் சபை. கர்த்தரின் சபையில் கர்த்தர் வெளிப்படுகிறார். நாம் ஒவ்வொருவரும் கர்த்தரின் பர்வதமாக மாற வேண்டும். அப்படியானால் நாம் ஒவ்வொருவரும் அவரின் சபையாகிறோம். நம்மிலிருந்து அவர் வெளிப்படுகிறார்;எப்படி வெளிப்படுகிறாரென்றால் மெல்லிய சத்தத்தின் மூலம் வெளிப்படுகிறார். அவ்விதம் நம்மில் வெளிப்பட்டு நம்மோடு பேசுகிறவராயிருக்கிறார். யார் நம்மை துரத்துகிறார்களோ,அவர்களை அவர் நியாயம் தீர்க்கிறவராயிருக்கிறார். நாம் கர்த்தரிடத்தில் உண்மையுள்ளவர்களாயிருப்போமானால் நமக்காக நாம் அறியாததும், நமக்கு எட்டாததுமான காரியங்களை செய்கிறார். ஆதலால் பிரியமானவர்களே நாம் ஒரு போதும் சோர்ந்து போகாதபடி உண்மையுள்ளவர்களாக காணப்பட வேண்டும். இவ்விதமாக நம்மை கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.