போஜனபானம் பண்ணுதல்:- திருஷ்டாந்தம்.

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jun 22, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

லூக்கா 22:29-30

ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன்.

நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக,ஆமென்.

அல்லேலூயா.

 போஜனபானம் பண்ணுதல்:- திருஷ்டாந்தம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் போஜனம் என்ன என்பதையும்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நம்மோடு போஜனம் பண்ணுகிறதையும், அந்த போஜனத்தின் கிரியை ஆத்தும அறுவடை செய்கிறதையும், அந்த அறுவடையில் நல்ல கோதுமையாகிய ஆத்துமாவை, நித்திய ஜீவனுக்காக பலனை, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அவருடைய களத்தில் சேர்க்கிறதையும் பதரை அவியாத அக்கினியால் சுட்டெரிக்கிறார் என்பதையும் நாம் தியானித்தோம்.

மேலும்,பதர் என்பது உலகம், மாமிசம், பிசாசின் கிரியைகள் இதனை சத்துரு கொண்டு விதைத்து விடுகிறான். அதனால் கோதுமை மணிக்குள் பதர் ஆகிவிடுகிறது .ஆதலால்,

மத்தேயு 3:12

தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.

ஆதலால் பிரியமானவர்களே இது தான் ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் நல்ல கோதுமை மணியாக இல்லாமல் பதராக காணப்படுமானால் தேவன் நமக்கு அக்கினியில் வெந்துருகிற வேதனை தருகிறார் .அதை தான்,

மத்தேயு 3:10

இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.

கோடாரி என்பது தேவனுடைய வசனம் அது நியாயதீர்ப்பை காட்டுகிறது. இந்த நியாயதீர்ப்பு எங்கு நடக்கிறது என்றால் தேவனுடைய வீட்டில், தேவனுடைய வீடு யார்? என்றைக்கும் நாம் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, பாவத்துக்கு மரித்து,நீதிக்கு பிழைக்கும் படி ஞானஸ்நானம் பெற்றுக் கொள்கிறோமோ, அந்த நாளிலிருந்து நாம் தேவனுடைய வீடு என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அந்த நாளிலிருந்து அந்த வீட்டுக்குள் பொல்லாங்கனுடைய களைகளுக்கு நாம் இடம் கொடுப்போமானால் நியாயத்தீர்ப்பு தொடங்கும். அதிலிருந்து நாம் ஒவ்வொரு நாளிலும் தேவனுடைய சத்திய வசனத்தை கேட்டும்,தியானித்தும், வாசித்தும்,ஜெபித்தும்,தேவ நீதியை செய்தும், அநியாயத்துக்கு நம்மை விலக்கிக் காப்போமானால் நாம் நியாயதீர்ப்பின் அக்கினியில் வெந்துருகாதபடி தேவன் நம்மில் அன்புகூர்ந்து இரங்கி நித்திய ஜீவனாகிய பலனை நமக்கு நிச்சயம் தருவார் என்பதில் மாற்றமில்லை.

அதனால்,

1 பேதுரு 4:17-19

நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?

நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.

இதிலிருந்து நமக்கு தெரியவருகிறது என்னவென்றால்,நம் முழு ஆத்துமாவிலும் தேவ வசனம் நிறைந்திருக்கிறது.அவர் கற்பனைகள்,கட்டளைகள் அவர் நியாயங்கள் சகலத்துக்கும் கீழ்ப்படிந்து நம்மை முழுவதும் உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தாவாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் ஒப்புக்கொடுக்க வேண்டும்.

 நம் உலகத்தின் ஆவிக்கு நம் உள்ளத்தில் இடம் கொடுக்காத படி தேவனுடைய ஆவியினால் சகலத்தையும் ஆராய்ந்து கொள்ளுகிறவர்களாக இருக்கவேண்டும். அப்போதுதான் நித்திய ஜீவனையாகிய பலனை பெற்றுக்கொள்ள முடியும்.

அதைத்தான் ,

கலாத்தியர் 6:7-10

மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.

இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் நாம் எப்போதும் தேவ சத்தத்திற்கு  (வசனத்திற்கு கீழ்படிய வேண்டும்) மேலும் ஆவிக்கென்று விதைக்க வேண்டும். நம் வாழ்க்கை முழுமையும் ஆவிக்குரிய வாழ்க்கையாக இருக்குமானால் மாத்திரமே,விதைக்கிறவன்,

அறுக்கிறவன் இருவரும் ஒருமித்து சந்தோஷப்படதக்ககதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனைக்காக பலனை சேர்த்துக் கொள்கிறான்.

அதைத்தான் யோசேப்புடைய வாழ்க்கையில்       திருஷ்டாந்தப்படுத்தி தேவன் கொண்டு வருகிற காரியம் என்னவென்றால் கிறிஸ்துவின் போஜனம் அநேகம் பேரை அவரண்டையும் சேர்த்துக் கொள்ளும்,சேர்த்து கொண்ட பிறகு அவர் நம்மளில் இருந்து சந்தோஷப்படுகிறவராகயிருக்கிறார். அதனால் தான்,

1 தெசலோனிக்கேயர் 5:16-18

எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

அதனால் பிரியமானவர்களே நம்மளில் கிறிஸ்து எப்போதும் சந்தோஷமாகவும் இடைவிடாமல் ஜெபிக்கிற வராகவும்,எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செய்கிறவராகவும் காணப்படுகிறார்.அதனால் நாம் தேவ ஆவிகேற்ற பிரகாரம் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

மேலும் யோசேப்பும் அவன் சகோதரரும் போஜனம் பண்ணும் போது யோசேப்பு தனக்கு முன் வைக்கப்பட்ட போஜனத்தில் ஐந்து மடங்கு அவர்கள் எல்லோரை காட்டிலும் பென்யமீனுக்கு யோசேப்பு கொடுக்கிறான்.போஜனம் பண்ணின பின்பு அவர்கள் யாவரும் பானம் பண்ணுகிறதை பார்க்கிறோம். இவ்விதமாக போஜன பானம் பண்ணி அவர்களுக்குள்ளே சந்தோஷமாயிருந்தார்கள். என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்விதமாக இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திர பிதாக்களும் போஜனபானம் பண்ணுகிறதை  பார்க்கிறோம். இது தேவன் நமக்கு காட்டிய திருஷ்டாந்தம்.

தானியம் வாங்க வந்த யாக்கோபின் குமாரர் பதினொருவரையும் தங்கள் தேசத்துக்கு யோசேப்பு தன் விசாரணைகாரரிடம் சொல்லி அனுப்பிவிடுகிறான். அனுப்பி விடும்போது அவருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றி கொண்ட போகதக்க பாரமாய் தானியத்தினாலே  நிரப்பி அவர்கள் கொண்டு வந்த பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு,

ஆதியாகமம் 44:2

இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான்.

இவைகளையெல்லாம் விசாரணைகாரனிடம் சொல்லி அவன் செய்து அதிகாலையில் அந்த மனிதர்கள் தங்கள் கழுதையை ஓட்டிக் கொண்டு போகும்படி அனுப்பி விட்ட பிறகு யோசேப்பு அவர்கள் வெகுதூரம் போவதற்கு முன்னே விசாரணைகாரனிடம் நீ புறப்பட்டு அந்த மனிதரை பின் தொடர்ந்து பிடித்து,நீங்கள் நன்மைக்கு தீமை செய்தது என்ன?அது என் எஜமானுடைய பானபாத்திரமல்லவா?அது போன வகை ஞானதிருஷ்டியால் அவருக்கு தெரியாதா?நீங்கள் தகாத காரியம் செய்தது என்று அவர்களோடே சொல் என்று யோசேப்பு விசாரணைகாரனை அனுப்ப,அவனும் அப்படியே அந்த வார்த்தைகளை அவர்களுக்கு சொன்னான்.

இந்த வார்த்தைகளை கேட்டவுடனே இப்படிப்பட்ட காரியத்துக்கும் எங்களுக்கும் வெகுதூரம்,நாங்கள் எங்கள் சாக்குகளில் இருந்த பணத்தை திருப்பிக் கொண்டு வந்தோம். நாங்கள் உம்முடைய எஜமான் வீட்டிலிருந்த வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும் திருடி போவாமா?அது யாருடைய சாக்கில் காணப்படுகிறதோ அவன் கொலையுண்ணகடவன் நாங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள்.

அவன் அப்படியே ஆகட்டும் அது எவனிடத்தில் காணப்படுவதோ அவன் எனக்கு அடிமை என்றும், நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான்.

ஆதியாகமம் 44:11-12

அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்.

மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குமட்டும் அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது.

நம்முடைய தேவனாகிய கர்த்தர்  யோசேப்பை வைத்து இந்த காரியங்களை நமக்கு திருஷ்டாந்தப்படுத்தி காட்டுகிறார்.ஏனென்றால் தேவன் நேசிக்கிற பிள்ளைகளை மிகவும் சோதிக்கிறார்.உள்ளத்தில் எவ்வளவு உண்மையிருக்கிறது என்பதையும்  பொறுமை, நிதானம்,கீழ்ப்படிதல் எல்லாவற்றையும் நன்கு ஆராய்ந்தறிகிறார். மேலும் பென்யமீனுக்கு ஐந்து மடங்கு ஆகாரம் அதிகமாக அனுப்புகிறது.தான் நேசிக்கிற பிள்ளைகளுக்கு அதிகமான கிருபையளிக்கிறவராகயிருக்கிறார்.மேலும் வெள்ளி பாத்திரமாகிய பானபாத்திரம் என்பது தேவனுடைய பானபாத்திரக்காரனாக ஆக்கும்படியாக, மேலும் தன்னை இஸ்ரவேலுக்கு வெளிப்படுத்தும்படியாக கர்த்தர் இந்த காரியங்களால் நம்மை திருஷ்டாந்தபடுத்துகிறார்.   இவ்வித உண்மையோடு இருந்தால் நாம் உண்மையான இஸ்ரவேலனாக ஊழியம் செய்ய முடியும். ஜெபிப்போம்.கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பார்.

தொடர்ச்சி நாளை.