தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழிகள் 24:5
ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மை நாம் நினைக்காத பாதையில் கர்த்தர் நம்மை நடத்தி செல்கிறவர் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 20:1-4
சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டு போய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்; அவனோடேகூட முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது.
அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:
உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச் சொன்னான்.
இஸ்ரவேலின் ராஜா அதற்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் தியானிக்கும் போது எலியாவை கொண்டு கர்த்தர் ஆசகேலை சீரியாவின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினதும், நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின் மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினதும், ஆபேல்மேகொலா ஊரானாகிய சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம் பண்ணு என்றார். அவ்விதமாக எலிசாவை அபிஷேகம் பண்ணி, எலியாவுக்கு பின் சென்று ஊழியஞ்செய்யும்படி செய்கிறார். இதன் பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டு போய், சமாரியாவை முற்றுகைப்போட்டு அதின் மேல் யுத்தம் பண்ணினான் அவனோடுகூட முப்பத்திரண்டு இராஜாக்களும், குதிரைகளும், இரதங்களும் இருந்தன. அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் ஆள் அனுப்பி, உன்னுடைய வெள்ளியும், உன்னுடைய பொன்னும் என்னுடையது, உன்னுடைய ஸ்திரீகளும், உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடயவர்கள் என்று பெனதாத் சொல்கிறான் என்று சொல்ல சொன்னான். அதற்கு இஸ்ரவேலின் ராஜா சொன்னது உம்முடைய வார்த்தையின்படியே நானும், என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள் என்று சொல்லியனுப்பினான். பெனாதாத் அனுப்பின ஸ்தானாபதிகள் திரும்பவும் அவனிடத்தில் வந்து
1இராஜாக்கள் 20:5,6
அந்த ஸ்தானாபதிகள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன் வெள்ளியையும், உன் பொன்னையும், உன் ஸ்திரீகளையும், உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே.
ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரின் வீடுகளையும் சோதித்து, உன் கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன்னார்கள்.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை கேட்ட ஆகாப் தன் தன் தேசத்தின் மூப்பர்களையெல்லாம் வரவழைத்து; இவன் பொல்லாப்பு தேடுகிற விதத்தைப் கவனித்துப் பாருங்கள். என் ஸ்திரீகளையும், என் குமாரர்களையும். என் வெள்ளியையும், பொன்னையும் கேட்க என்னிடத்தில ஆள் அனுப்பின போது, நான் கொடுக்மாட்டேன் என்று மறுக்கவில்லயே. அப்பொழுது சகல மூப்பரும் சகல ஜனங்ளும் அவனைப்பார்த்து; நீர் அவனுக்கு செவிக்கொடுக்கவும், அவனுக்கு சம்மதிக்கவும் வேண்டாம் என்றார்கள். அதனால் அவன் பெனதாத்தின் ஸ்தானாபதிகளை நோக்கி
1 இராஜாக்கள் 20:9
அதினால் அவன் பெனாதாத்தின் ஸ்தானாபதிகளை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என் ஆண்டவனுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், நீர் முதல் விசை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; ஸ்தானாபதிகள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்.
இந்த வார்த்தைகளை கேட்ட பெனாதாத் அவனிடத்தில் ஆள் அனுப்பி இஸ்ரவேலின் ராஜாவிடம் சொன்னது
1இராஜாக்கள் 20:10
அப்பொழுது பெனாதாத் அவனிடத்தில் ஆள் அனுப்பி: எனக்குப் பின் செல்லுகிற ஜனங்கள் எல்லாரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாயிருந்தால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.
இந்த வார்த்தைகளை கேட்ட இஸ்ரவேலின் ராஜா பிரதியுத்தம் சொன்னது, ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப் போல பெருமைபாராட்டாலாகாது என்று அவனுக்கு சொல்லுங்கள் என்றான்.
பிரியமானவர்களே, மேற்கூறப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளை நாம் தியானிக்கையில் நம்முடய உள்ளத்தில் பாகாலின் கிரியைகளாகிய ஆகாபுக்கு நாம் இடம் கொடுப்போமானால் சீரியன் நம் உள்ளத்தில் சீக்கிரத்தில் கிரியை செய்து, நம்மிடத்தில் உள்ள நன்மைகளை பறித்து எடுக்க முயற்சி செய்கிறான் என்பதன் திருஷ்டாந்தம் . மேலும் நாம் சில நேரங்களில் ஜாதிகளின் அச்சுறுத்தலால் பயந்து விடுகிறோம். ஆதலால் எப்போதும் நாம் மிகுந்த ஜாக்கிரதையுள்ளவர்களாக அந்நியருக்கு பயப்படாமல், கர்த்தரிடத்தில் நம்பிக்கையோடு பூரண கிருபையுள்ளவர்களாக காணப்பட வேண்டும். அல்லாமலும் பரிசுத்தவான்களின் ஐக்கியத்தோடு, அவர்களின் ஆலோசனைப்பெற்று ஒவ்வொரு நாளும் நாம் ஆவியில் வளருகிறவர்களாக இருக்க வேண்டும். என்னவென்றால் ஒருபோதும் அந்நிய நுகத்தில் பிணைக்கப்படலாகாது; அதனை குறித்த தேவ வசனம்
2 கொரிந்தியர் 6:14-18
அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
ஆதலால் பிரியமானவர்களே நாம் எப்போதும் கர்த்தரின் பிள்ளைகளாகவும், அவர் நம்முடைய பிதாவுமாகவும் இருக்கும்படியாக நம்மை ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.