தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 6:4
திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் நம் உள்ளத்தில் தங்கியிருந்து கிரியை செய்துக்கொண்டிருக்கிற துர் உபதேசத்தை முற்றிலும் அழிக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதபடி நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1 இராஜாக்கள் 20: 11-15
அதற்கு இஸ்ரவேலின் ராஜா பிரதியுத்தரமாக: ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டலாகாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான்.
பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கையில், இந்த வார்த்தையைக் கேட்டு, தன் ஊழியக்காரரை நோக்கி: ஆயத்தம்பண்ணுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் சண்டைசெய்ய ஆயத்தம்பண்ணினார்கள்.
அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் வந்து: அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரைக்கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான்.
அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரை இலக்கம் பார்த்தான், அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டுபேர்; அவர்களுக்குப்பின்பு, இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கமும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான்.
மேற்கூறிய வசனங்களில் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப், சீரியவின் ராஜாவுக்கு சொல்லியனுப்பின வார்த்தைகளை சொல்லும்போது, பெனாதாத்தும் மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்து வெறித்துக்கொணடிருந்தார்கள் (குடித்து வெறிப்பது என்றால் சத்தியத்திற்கு மாறான துர் உபதேசம்). இந்த வார்த்தைகளை கேட்ட போது தன் ஊழியக்காரரை நோக்கி ஆயத்தம் பண்ணுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின் மேல் சண்டை செய்ய ஆயத்தம்பண்ணினார்கள். அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் வந்து; அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ நானே கர்த்நர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்கிறார் என்றார்.அதற்கு ஆகாப் யாரைக்கொண்டு என்று கேட்க; அவன் மாகாணங்களின் அதிபதியைக் கொண்டு என்று கர்த்தர் சொல்கிறார் என்றான். பின்பு யுத்தத்தை யார் துவக்க வேண்டும் என்றுக் கேட்டதற்கு அவன், நீர் தான் என்றான். அவன் மாகாணங்களின் அதிபதிகளின் சேவகரை இலக்கம் பார்த்தான். அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டு பேர்; அவர்களுக்கு பின்பு, இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கமும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான். மேலும்
1இராஜாக்கள் 20:16-21
அவர்கள் மத்தியான வேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடித்து வெறிகொண்டிருந்தார்கள்.
மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகர் முன்தண்டாகப் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனுஷர்: சமாரியாவிலிருந்து மனுஷர் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள்.
அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்.
மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரான அவர்களும், அவர்கள் பின்னே வருகிற இராணுவமும், நகரத்திலிருந்து வெளியே வந்தபோது,
அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்படுகிறவர்களை வெட்டினார்கள்; சீரியர் முறிந்தோடிப்போனார்கள்; இஸ்ரவேலர் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின் மேல் ஏறிச் சில குதிரை வீரரோடுங்கூடத் தப்பியோடிப்போனான்.
இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு, குதிரைகளையும் இரதங்களையும் முறிய அடித்து, சீரியரில் மகா சங்காரம் உண்டாக வெட்டினான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் மாகாணங்களின் அதிபதிகள் வெளியே வந்த போது பெனாதாத்தும் அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடித்து வெறிக்கொண்டிருந்தார்கள். மாகாணங்களுடைய அதிபதிகள் முன் தண்டாக புறப்படும் போது, பெனாதாத் அனுப்பின அனுப்பின மனுஷர் சமாரியாவிலிருந்து புறப்பட்டு வருகிறார்கள் என்றுஅவனுக்கு அறிவிக்கப்பட்ட போது, அவன் சொன்னது அவர்கள் சமாதானத்திற்கு புறப்பட்டு வந்தாலும், யுத்தத்திற்கு புறப்பட்டு வந்தாலும் அவர்களை உயரோடே பிடியுங்கள் என்றான். பின்பு வந்தவர்கள் எல்லாரும் தங்களுக்கு எதிர்படுகிறவர்களை வெட்டினார்கள்; சீரியர் முறிந்தோடினார்கள். இஸ்ரவேலர் அவர்களை துரத்தினார்கள்; சீரியரின் ராஜாவாகிய பெனாதாத் குதிரையின் மேல் ஏறிச் சில குதிரை வீரரோடுகூட தப்பியோடிப் போனான். இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு குதிரைகளையும் இரதங்களையும் முறிய அடித்து, சீரியரில் மகா சங்காரம் உண்டாக வெட்டினான்.
பிரியபானவர்களே மேற்கூறப்பட்டவைகளை நாம் தியானிக்கும் போது நம்முடைய கர்த்தர் இஸ்ரவேலர்கள் தங்கள் உள்ளத்தை சுத்திகரிக்கும்படி சத்தியத்தின்படி நடந்து அவர் பாதைகளில் நடக்க மிகவும் கற்று தந்து உதவி செய்கிறவராக காணப்படுகிறார். இஸ்ரவேலனுக்குள்ளில் பாகாலின் கிரியைகளை காண்கிற தேவன், முதலில் சீரிய இராணுவத்தை அழிக்கும்படியாக கிரியை நடப்பிப்கிறார். மேலும் ஆகாபுக்கு மனந்திரும்புதலுக்காக இந்த காரியம் நடந்தேறுகிறது. அல்லாமலும் நம்மையும் இப்படியே தான் நடத்துவார். நம்மை முன் குறித்த நம்முடைய தேவன் நம்முடைய நற்கிரியைகள் எப்படி உண்டாயிருக்கிறது என்று அனுதினம் நம்மை சோதிக்கிறார். நம் எல்லாருடைய உள்ளத்திலும் சீரிய கிரியைகளை கர்த்தர் நிர்மூலம்பண்ணி நம்மை இரட்சிக்கிறதற்கு அவர் வல்லமையுள்ளவராயிருக்கிறார். ஆதலால் நம் உள்ளத்திலுள்ள எல்லா பொல்லாத எண்ணங்களை மாற்றி சத்திய வசனத்தின்படி நடந்து பரிசுத்தமாக வாழும்படியாகவும், கர்த்தர் நம்மை அனுதினம் சுத்திகரிக்கும்படியாகவும் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.