தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யோவான் 15:7
நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா சத்துருவினால் விழுந்து போகாதபடி கிறிஸ்துவில் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதன் திருஷ்டாந்தம்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய உள்ளத்தில் தங்கியிருந்து கிரியை செய்துக்கொண்டிருக்கிற துர் உபதேசத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதனைக் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 20:22-24
பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான்.
சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம்பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்.
அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்கள் ஸ்தலத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாகச் சேனாபதிகளை ஏற்படுத்தி;
மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் சீரியர்கள் இஸ்ரவேலர்களால் சங்கரிக்கப்படுகிறார்கள். பின்பு அந்த தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து அவனை நோக்கி: நீர் போம் உம்மை பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யதக்கது இன்னது என்று கவனித்து பாரும்; மறு வருஷத்திலே சீரியரின் ராஜா உமக்கு விரோதமாய் வருவான் என்றான். சீரியரின் ராஜாவின் ஊழியக்காரர் அவனைப்பார்த்து அவர்களுடைய தேவர்கள் மலைதேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்க்கொண்டார்கள்; நாம் அவரகளோடே சமபூமியிலே யுத்தம் பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்க்கொள்வது நிச்சயம். அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்கள் ஸ்தலத்திலிருந்து மாற்றி, அவர்களுக்கு பதிலாக சேனாபதிகளை ஏற்படுத்தி, நீர் மடியக்கொடுத்த சேனைக்குச் சரியாய்ச் சைனையையும், அந்த குதிரைகளுக்கு பதிலாக குதிரைகளையும், இரதங்களுக்கு சரியாய் இரதங்களையும் இலக்கம் பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்பண்ணி, நிச்சயமாய் அவர்களை மேற்க்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தார்கள். மறுவருஷத்திலே பெனாதாத் சீரியரை இலக்கம் பார்த்து
1இராஜாக்கள் 20:26-28
மறுவருஷத்திலே பெனாதாத் சீரியரை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ண ஆப்பெக்குக்கு வந்தான்.
இஸ்ரவேல் புத்திரரும் இலக்கம் பார்க்கப்பட்டு, தேவையானதைச் சம்பாதித்துக்கொண்டு, அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு, அவர்களுக்கு எதிரே இரண்டு சிறிய வெள்ளாட்டுக் கிடைகளைப்போலப் பாளயமிறங்கினார்கள்; தேசம் சீரியரால் நிறைந்திருந்தது.
அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் சீரியரால் தேசம் நிறையபட்டிருந்தது. இஸ்ரவேலரும் இலக்கம் பார்க்கப்பட்டு தேவையானதை சம்பாதித்துக்கொண்டு, அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு அவர்களுக்கு எதிரே இரண்டு சிறிய வெள்ளாட்டுக் கிடைகளைப்போல பாளயமிறங்கினார்கள். அப்போது தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து கர்த்தர் பள்ளதாக்குகளின் தேவனாயிராமல் மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சொல்லுகிறபடியால் இந்த ஏராளமான ஜனத்தை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்,அதனால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். நம்முடைய தேவன் மலைகளுக்கு மாத்திரமல்ல, பள்ளதாக்குகளுக்கும் தேவனாயிருக்கிறார்.
பிரியமானவர்களே இந்த காரியங்கள் எல்லாம் திருஷ்டாந்தத்துக்குரியது; என்னவென்றால் நம்முடைய வாழ்வில் கிறிஸ்துவின் பூரண கிருபைப்பெற்றுக்கொள்ளாமல் இருப்போமானால்; பொல்லாத குணங்கள் இச்சைகள் இவ்விதமான காரியங்கள் நாம் நம்முடைய உள்ளத்திலிருந்துமாற்றிக்கொண்டாலும், சீரியன் அடிக்கடி மற்றும் வருஷத்திற்கு ஒரு முறை வந்து உள்ளத்தில் போராடுவான் என்பது நமக்கு நிச்சயமாக புரிகிறது. இதனை நாம் கருத்தில் கொண்டு சிந்திப்போமானால் அநேகர் தங்கள் சூழ்நிலைகளில் ஏதாவது நெருக்கடிகள் வந்தால் சத்திய வசனத்தை புறக்கணித்து கர்த்தரை விட்டு தூரம் போகிறார்கள். இதனை பார்க்கிற நம்முடைய தேவன் தீர்க்கதரிசிகளின் வாக்கினால் நமக்கு தைரியம் நல்கி நாம் சத்துருவினால் தோற்கடிக்கப்பட்டு விழுந்து போகாதபடி ஜாக்கிரதையாய் இருக்கும்படியாக நம்மை பலப்படுத்திக்கொண்டு; கர்த்தர் சீரியராகிய அந்நிய சிந்தைகளை மடங்கடித்து நம்மை சத்தியத்திலே நிலை நிறுத்துகிறார். நாம் ஒவ்வொருவரும் சத்திய வசனத்தில் கிறிஸ்துவில் என்றன்றைக்கும் நிலைத்திருக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.