தேவனுக்கே மகிமையுண்டாவதாக

நீதிமொழிகள் 20:16 

அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடு வாங்கிக்கொள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் அந்நியரோடு கலக்காமல் நம்மை காத்துக்கொள்ளவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய ஆத்துமா சத்துருவினால் விழுந்து போகாதபடி கிறிஸ்துவில் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும் என்பதன் திருஷ்டாந்தம் குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 20:29-34 

ஏழுநாளளவும் அவர்கள் முகமுகமாய்ப் பாளயமிறங்கியிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேல் புத்திரர் ஒரேநாளிலே சீரியரில் லட்சம் காலாட்களை மடங்கடித்தார்கள்.

மீதியானவர்கள் ஆப்பெக் பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள்; அங்கே மீதியாயிருந்த இருபத்தேழாயிரம்பேரின்மேல் அலங்கம் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓடிப்போய் நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையிலே பதுங்கினான்.

அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்; நாங்கள் இரட்டுகளை எங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளை எங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடே வைப்பார் என்று சொல்லி,

இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா, அவன் என் சகோதரன் என்றான்.

அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான்.

அப்பொழுது பெனாதாத் இவனைப் பார்த்து: என் தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என் தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கை பண்ணி அவனை அனுப்பிவிட்டான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் கர்த்தர் சீரியரை இஸ்ரவேலர் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு முன்பே ஒப்புக்கொடுத்தேன் என்று சொல்லுகிறபடியால் கர்த்தர் இஸ்ரவேலரை இரட்சிப்பது நிச்சயம் என்று அறிகிறோம். ஆதலால் இரண்டு தரத்தாரும் ஏழுநாளளவும் முகமுகமாய் பாளயமிறங்கியிருந்தார்கள்.  ஏழாம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேல் புத்திரர் ஒரேநாளிலே சீரியரில் இலட்சம் காலாட்களை மடங்கடித்தார்கள்;  மீதியானவர்கள் ஆப்பெக் பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள். அங்கே மீதியாயிருந்த இருபத்தேழாயிரம் பேர் மேல் அலங்கம்  இடிந்து விழுந்தது: பெனாதாத்தும் ஓடி போய் நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையிலே பதுங்கினான்.  அப்பொழுது  அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி சொன்னது இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்;நாங்கள் இரட்டுகளை எங்கள் அரைகளில் கட்டி,கயிறுகளை எங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடே வைக்கக்கூடும் என்று சொல்லி இரட்டுகளை அரைகளில் கட்டிக்கொண்டு, கயிறுகளை தங்கள் தலைகளில்சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து கன்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம் பண்ணுகிறான் என்றார்கள்.  அதற்கு அவன் இன்னும் அவன் உயிரோடு இருக்கிறானா அவன் என் சகோதரன் என்றான்.  அந்த மனுஷர் வாயின் சொல்லை நன்றாய் கவனித்து உடனே பிடித்து,  உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன் போய் அவனை அழைத்துக் கொண்டு வாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்த போது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றினான்.  பின்பு பெனாதாத் சொன்னது: என் தகப்பன் உம்முடைய தகப்பன் கையிலே பிடித்த பட்டணங்களை திரும்ப கொடுத்துவிடுகிறேன்; என் தகப்பன்  சமாரியாவிலே செய்தது போல நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கை பண்ணி அவனை அனுப்பிவிட்டான். 

பிரியமானவர்களே,  முந்தின வசனங்களில் நாம் தியானிக்கும் போது ஏழு நாள் இஸ்ரவேலரும் சீரியரும் முகமுகமாய் பாளமிறங்கினார்கள் என்றால், ஏழாம் நாள் இஸ்ரவேலருக்கு ஒரு விடுதலையின் நாள்.  என்னவென்றால் நாம் ஏழு நாள் கர்த்தரின் சபையில் உபவாசத்தோடு இருப்போமானால் நம் உள்ளத்தை பொல்லாத எண்ணங்கள்  நம்மை வஞ்சிக்காதபடி காத்துக்கொள்ளலாம்.  ஆனால் ஆகாபுடைய வாழ்வில் சரியான மனந்திரும்புதல் இல்லாமல் இருக்கிற காரணத்தால், அவன் சீக்கிரத்தில் உலக எண்ணங்களுக்குள் சிறைப்பட்டு போகிறான் என்பதனை வாசிக்க முடிகிறது.  மேலும் சீரிய ராஜாவை அவன் தன் சகோதரன் என்றதால், அவனுடைய வாயின் வார்த்தையிலிருந்தே பெனாதாத்தின் மனுஷர்கள்  பிடித்து எடுத்துக்கொண்டு, அப்படியே  ஆகாபை பெனாதாத்தோடு உடன்படிக்கை எடுப்பதற்கு வைத்து சிறைப்படுத்திக்கொள்கிறார்கள்.  இதன் காரணம் என்னவென்றால் ஆகாபிடத்தில் பாகாலின் கிரியைகள் இருப்பதால், அவனில் இரட்சிப்பு இல்லாதிருக்கிறது.  அல்லாமலும் நாம் சிந்திக்க வேண்டியது நம்முடைய சகோதரர்கள் என்றால் பிதாவின் சித்தம் செய்கிறவர்கள் மட்டும்.  மற்றவர்கள் அந்நியர்கள் என்ற உணர்வு  இருக்க வேண்டும்.  அவர்களிடத்தில் எந்த உடன்படிக்கையும் நாம் செய்துக்கொள்ளாதபடி எச்சரிப்போடு காணப்பட வேண்டும்.  இவ்விதமாக நாம் சத்திய வசனத்திற்கு கீழ்படிந்து வாழும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.