தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ஏசாயா 63:10 

அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் நம்முடைய ஆத்மீக வாழ்வில் ஆத்துமா சலிப்பும் விசனமுமடையாதபடி நம்மை காத்துக்கொள்ளவேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் அந்நியரோடு கலக்காமல் நம்மை காத்துக்கொள்ளவேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 20:35- 43 

அப்பொழுது தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படி தன் தோழனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனுஷன் அவனைப்பார்த்து அடிக்கமாட்டேன் என்றான்.

அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனபடியால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனை விட்டுப் புறப்பட்டவுடனே, ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது.

அதின்பின் அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனுஷன், அவனைக் காயமுண்டாக அடித்தான்.

அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன் முகத்தின்மேல் சாம்பலைப்போட்டு, வேஷமாறினவனாய் வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான்.

ராஜா அவ்வழியாய் வருகிறபோது, இவன் ராஜாவைப்பார்த்துக் கூப்பிட்டு: உமது அடியான் யுத்தத்தில் நின்றபோது, ஒருவன் விலகி, என்னிடத்தில் ஒருவனைக் கொண்டுவந்து, இந்த மனுஷனைப் பத்திரம்பண்ணு; இவன் தப்பிப்போனால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாயிருக்கும், அல்லது ஒரு தாலந்து வெள்ளியை நீ கொடுக்கவேண்டும் என்றான்.

ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் அலுவலாயிருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்.

அப்பொழுது அவன் சீக்கிரமாய்த் தன் முகத்தின்மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதினால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான்.

அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப் போகப் புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான்.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபும், சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத்தும் தங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொண்ட பின் தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படி தன் தோழனை நோக்கி; நீ என்னை அடி என்று சொல்ல, அந்த மனுஷன் அவனை பார்த்து அடிக்கமாட்டேன் என்கிறான்.  அப்பொழுது அவன் இவனை பார்த்து; நீ கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்படியாமற்போனபடியால், நீ என்னை விட்டு போனவுடனே ஒரு சிங்கம் உன்னைகொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனை விட்டு போனவுடனே இவனைக் கண்டு கொன்று போட்டது.  அதன் பின் அவன் வேறொருவனை கண்டு என்னை அடி என்றான்; அந்த மனுஷன் அவனை காயமுண்டாக அடித்தான்.  அப்பொழுது அந்த தீர்க்கதரிசி போய் முகத்தின் மேல் சாம்பலைப்போட்டு, வேஷம் மாறினவனாய் வழியிலே ராஜாவுக்காக காத்திருந்தான்.  ராஜா அவ்வழியாய்  வருகிறபோது, இவன் ராஜவை கூப்பிட்டு சொன்னது; உமது அடியான் யுத்தத்தில் நிற்கும்போது,ஒருவன் விலகி ஒருவனை என்னிடத்தில் கொண்டு வந்து,இந்த மனுஷனை பத்திரம்பண்ணு; இவன் தப்பினால்,  உன் பிராணண் அவன் பிராணனுக்கு ஈடாயிருக்கும், அல்லது ஒரு தாலந்து வெள்ளியை நீ கொடுக்க வேண்டும் என்றான்.  ஆனால் உமது அடியான் அங்குமிங்கும் அலுவலாயிருக்கும் போது அவன் போய் விட்டான் என்றான்.  இஸ்ரவேலின் ராஜா நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான்.  அப்பொழுது அவன் சீக்கிரமாய் எழுந்து போய் தன் முகத்தின் மேலிருக்கும் சாம்பலை துடைத்து விட்டதினால், அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துக்கொண்டான்.  அப்பொழுது தீர்க்கதரிசி, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபை நோக்கி; சஙகாரத்திற்கு நான் நியமித்த மனுஷனை நீ தப்பிப்போக விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும் , உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்கிறார் என்றான்.  அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும், விசனமுமாய் தன் வீட்டிற்குப் போக புறப்பட்டு சமாரியாவுக்கு வந்தான்.  

பிரியமானவர்களே மேற்கூறப்பட்டிருக்கிற திருஷ்டாந்தமாக செய்யப்பட்டிருக்கிறதென்னவென்றால் நம்முடைய முழுமையான ஆத்தும இரட்சிப்பிற்கு தடையாகிய ஆகாபிய கிரியைகளும், பொல்லாத எண்ணங்களாகிய சீரிய கிரியைகளும் நமக்குள் மாறிமாறி வருகிறதற்கு நாம் இடம் கொடுக்கிறதால் கர்த்தர் நம்மிடத்தில் தீர்க்கதரிசியாக கிறிஸ்துவை நம்மில் அனுப்பி, நாம் செய்கிற கிரியைகள் நல்லதா கெட்டதா என்பதனை விளக்கிக்காட்டுகிறார். ஆனால் நம்மை விட்டு முழுமையும் அழிக்க வேண்டிய துர் எண்ணங்கள் அழிக்காமல், நேரத்திற்கு தகுந்த பிரகாரம் கர்த்தருடைய சத்தியவசனங்களை மாற்றி அமைப்போமானால் அவர் நமக்கு தந்திருக்கிற நித்திய ஜீவனை நாம் இழந்து விடுவதற்கு அது ஏதுவாகிறது.  அதுமட்டுமல்ல நம்மை புற ஜாதிகளின் தேசத்திற்கு நம்மை சிறைப்படுத்திக்கொடுத்து விடுகிறார். நம்முடைய ஆத்துமா எப்பொழுதும் சத்துருவால் நெருக்கப்படுமானால் நம்முடைய வாழ்வு எப்பொழுதும் சலிப்பும், விசனமுமாயிருக்கும். ஆதலால் நாம் ஒருபோதும் ஆகாபை போல கர்த்தரின் சத்துருக்களாக கருதபடுகிற காரியங்களுக்கு நாம் நம்முடைய உள்ளத்தில் இடம்கொடாதபடி அவற்றை முற்றிலும் நிக்கிரகம் பண்ணும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்படைக்க வேண்டும். அல்லாமலும் நாம் ஒவ்வொருவரும் கர்த்தர் நமக்கு தந்த பரலோக நன்மைகளை இழந்து போகாமல் அனுதினம் அவருடைய பரலோக போஜனம் புசித்து, அதிலே திருப்தியுள்ளவர்களாக வாழ்ந்து, ஆத்துமா சலிப்பும், விசனமுமடையாதபடி கிறிஸ்துவோடுகூட வாழும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.