தேவனுக்கே மகிமையுண்டாவதாக
யாக்கோபு 4:10
கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் ஒரு போதும் கர்த்தருக்கு கோபம் உண்டாக்காதபடி நம்மை தாழ்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கிறிஸ்துவின் திராட்ச தோட்டமாக (தேவனுடைய ராஜ்யமாக) இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால்
1இராஜாக்கள் 21:17-29
கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான்.
நீ அவனைப் பார்த்து: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய்.
நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து,
நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.
யேசபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும்.
ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் தின்னும் என்றார்.
தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னின்று துரத்திவிட்ட எமோரியர் செய்தபடியெல்லாம், அவன் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, மகா அருவருப்பாய் நடந்துகொண்டான்.
ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்.
மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில் ஆகாப், நாபோத்துடைய திராட்ச தோட்டத்தை எடுத்துக்கொள்ளும்படியாக எழுந்து போன போது; கர்த்தர் எலியா தீர்க்தரிசியிடம் சொன்னது நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற ஆகாபை சந்திக்கும்படி போ; இதோ அவன் நாபோத்தின் திராட்ச தோட்டத்தை சொந்தமாக எடுத்துக்கொள்ளும்படி அங்கே போயிருக்கிறான். நீ அவனை நோக்கி: நீ கொலை செய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்கிறார் என்று சொல் என்றார். அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி என் பகைஜனே, என்னை கண்டு பிடித்தாயா என்றான். அதற்கு அவன் கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்ய உன்னை விற்றுப் போட்டாய். நான் உன் மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, உன் சந்ததியை அழித்துப் போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர் விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து, நீ எனக்கு கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலை பாவஞ்செய்ய பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபோத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார். மேலும் யேசபேலை குறித்து கர்த்தர் சொல்கிறார்; நாய்கள் யேசபேலை யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும் என்றும், பட்டணத்தில் சாகிறவனை நாய்களும், வெளியில் சாகிறவனை ஆகாயத்து பறவைகளும் தின்னும் என்றார். அல்லாமலும் தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்ய தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப் போல் ஒருவனுமில்லை. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னின்றுத் துரத்திவிட்ட எமோரியர் செய்தபடியெல்லாம் நரகலான விக்கிரகங்களை பின்பற்றி அருவருப்பாய் நடந்துக்கொண்டான். ஆகாப் இந்த வார்த்தைகளை வார்த்தைகளைக் கேட்டபொழுது, தன் வஸ்திரங்களை கிழித்துக்கொண்டு , தன் சரீரத்தின் மேல் இரட்டைப் போர்த்துக்கொண்டு, உபவாசம் பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துக்கொண்டான். அவ்விதம் தன்னை மாற்றிக்கொண்டதால், கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று; அவர் எனக்கு முன்பாக தன்னை தாழ்த்துகிறபடியால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரபண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின் மேல் வரப்பண்ணுவேன் என்றார்.
பிரியானவர்களே மேற்கூறப்பட்ட வசனங்கள் நமக்கு திருஷ்டாந்தத்திற்கு என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் முழுமையான இரட்சிப்பை சுதந்தரித்து கர்த்தரின் தோட்டம் ஆகாமல், ஆகாபின் கிரியைகளும், யேசபேலின் தந்திரத்தினால் நம்முடைய ஆத்துமா கொல்லப்படுமானால், நம்முடைய ஆத்துமா பிசாசுக்கு அடிமையாக்கப்பட்டு கள்ளத்தீர்க்கதிசிகளுக்கு அடிமையாக்கப்படுகிறோம். ஆதலால் கர்த்தரின் வார்த்தையாவது
பிலிப்பியர் 3:2
நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
மேற்கூறியப்பிரகாரம் நாம் எல்லாவற்றிலும் எச்சரிப்போடு நம் ஆத்துமாவை காத்துக்கொள்ள வேண்டும். நாம் எச்சரிக்கையாக இருந்து கர்த்தருடைய சத்தியத்தின் படி நம்முடைய ஆத்துமாவை காத்துக்கொள்ளாவிட்டால், பிசாசனவன் அவன் நம்மை அவனுக்கு சொந்தமாக்கி விடும்படியாக வருகிறான். ஆனால் நம்முடைய தேவனோ அதற்கு நம்மை ஒப்புக்கொடாதபடி நமக்குள் கிறிஸ்துவை அனுப்பி நம்மை இரட்சிக்கும்படியாக எச்சரிப்பின் தொனியோடு நம்மிடத்தில் வருகிறார். அவ்விதம் கர்த்தர் அவருடைய எச்சரிப்பின் சத்தத்தோடு நம்மிடம் பேசும் போது ஆகாப் ராஜா தன்னை தாழ்த்தினது போல் நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுப்போமானால், அவர் தம்முடைய கோபத்தை நம்மை விட்டு மாற்றுவார். அது மட்டுமல்ல யெரொபெயாமின் பாவத்தை போல் நம்முடைய பாவம் நம்மை தொடராதபடியும், மற்றவர்களை பாவத்திற்குட்படுத்தாமலும், எந்த நரகலான விக்கிரகங்களாலும் நம்மை அருவருத்துக்கொள்ளாதபடியும், பரஸ்திரீயின் வார்த்தைகளோலோ, ஆலோசனைகளாலோ சிக்கிக்கொள்ளாதபடியும் எப்பொழுதும் நம்மை நாம் காத்துக்கொண்டு கிறிஸ்துவுக்குள் நம்மை திடபடுத்திக்கொண்டு, கர்த்தருக்காக வாழும்படி ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.