தேவனுக்கே மகிமையுண்டாவதாக
நீதிமொழகள் 21:30
கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆலோசனையைப்பெற்று ஒவ்வொரு காரியத்தையும் நடப்பிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் ஒரு போதும் கர்த்தருக்கு கோபம் உண்டாக்காதபடி நம்மை தாழ்மைப்படுத்த வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவெனில்
1இராஜாக்கள் 22:1-9
சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது.
மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும்போது,
இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,
யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.
பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.
மேற்கூறப்படட வசனங்கள் ஆகாப் கர்த்தருடைய எச்சரிப்பின் சத்தத்திற்கு தன்னை தாழ்த்தினபடியால் கர்த்தர் அந்நாட்களில் அவன் பொல்லாப்பை அவன் மேல் வரபண்ணாமல் அவன் குமாரன் நாட்களில் அதை அவன் மேல் வரபண்ணுவேன் என்றார். அதன் பின்பு சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தம் இல்லாதிருந்தது. மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் போயிருக்கும்போது, இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரிடம் கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்றும், நாம் அதை சீரியா ராஜாவின் கையினின்று பிடித்துக்கொள்ள வேண்டும் என்றும், யோசபாத்திடம் கூறி, அவனை நோக்கி கீலேயாத்திலுள்ள ராமோத்தின் மேல் என்னோடே யுத்தம் பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று கேட்டான். அதற்கு யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவிடம் நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றும் பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவிடம் கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளை கூடிவர செய்து நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின் மேல் யுத்தம் பண்ண போகலாமா, போகலாகாதா என்று கேட்டதற்கு அவர்கள் நீர் போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். பின்பு நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்றதற்கு; இஸ்ரவேலின் ராஜா யோசபாத்திடம் சொன்னது இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத் ராஜாவே அப்படி சொல்ல வேண்டாம் என்றான். அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு; இம்லாவின் குமாராகிய மிகாயாவை அழைத்து வா என்று சொல்லி, அவன் சொல்லியனுப்பின காரியமாவது
1இராஜாக்கள் 22:10-13
இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.
மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்.
மிகாயா ராஜாவினிடத்தில் வந்த போது மிகாயா சொன்னது
1இராஜாக்கள் 22:14-15
அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: "போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின்கையில் ஒப்புக்கொடுப்பார்" என்றான்.
மேற்கூறப்பட்ட காரியங்களை இரண்டு பேரும் கூறிக்கொண்ட பின்பு ராஜா மிகாயாவிடம்; நீ கர்த்தருடைய நாமத்தினால் உண்மையல்லாமல், வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்க வேண்டும் என்றான். பின்பு அவன் சொன்னது
1இராஜாக்கள் 22:17
அப்பொழுது அவன்: இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.
மேற்கூறிய தீர்க்கதரிசனத்தை கேட்ட இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி; இவன் என்னை குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று உம்மிடத்தில் சொல்லவில்லையா என்கிறான்.
பிரியமானவர்களே முந்தின கர்த்தருடைய வார்த்தைகளை நாம் தியானிக்கும் போது, எந்த ஒரு காரியமானாலும், கர்த்தரின் வேலையானாலும் கர்த்தர் நம்மிடத்தில் சொல்லாத காரியங்களில் தலையிடக்கூடாது. என்னவென்றால் ஆகாப் தன்னை கர்த்தரிடத்தில் தாழ்த்தினபோது கர்த்தர் அவனுக்கு இரக்கம் காட்டினார். ஆனால் மூன்று வருடம் இஸ்ரவேலும் சீரியாவும் யுத்தம் இல்லாமல் அமைதியாயிருந்த போது ஆகாப் ராமோத்தின் மேல் கர்த்தரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளாமல் யுத்தத்திற்கு போவதற்காக ஆயத்தப்படுகிறான். எந்த ஒரு காரியமானாலும் எந்த தேசத்தின் காரியமானாலும் நாமாவே சத்துருக்களிடத்தில் போராடக்கூடாது. நம்மை அழைத்த கர்த்தர் அவர் உண்மையுள்ளவர்; அது மட்டுமல்ல அவருக்குரிய காரியங்கள், நமக்குரிய காரியங்கள் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். மேலும் கர்த்தரின் ஆலோசையை எப்படி பெற்றுக்கொள்ளலாமென்றால் உண்மையான கர்த்தரின் ஊழியக்காரர்கள்; அவர்கள் யார் என்றால் கர்த்தரின் நாமத்திற்காக எல்லா உலக சம்பந்தமான இன்பங்கள், சந்தோஷங்களை அற்பமும் குப்பை என்று எண்ணி, தங்களை சிறுமைப்படுத்தி, பரலோக ராஜ்யத்துக்குரியவைகளை மட்டும் தங்கள் வாழ்க்கையில் மேன்மைபடுத்தி கிறிஸ்துவோடு வாழ்கிறவர்கள். கர்த்தர் அவர்களிடமிருந்து நம்மோடு நம் குறைகளை எடுத்துக்கூறி பேசினால் தான் உண்மையான கர்த்தரின் தீர்க்கதரிசிகள். ஆனால் நானூறு தீர்க்தரிசிகளை இஸ்ரவேலின் ராஜா அழைத்தனுப்பினதில் அவர்கள் மனுஷனுடைய நினைவுகளுக்கேற்ற தீர்க்கதரிசனம் சொன்னதை பார்க்கிறோம். ஆனால் இந்நாட்களில் அநேகர் இப்படிபட்ட கள்ளதீர்க்கதரிசனத்தை உண்மை என்றும்; உண்மையான கர்த்தரின் வார்த்தைகளை பொய்யென்றும் சொல்லி பரிசுத்த ஆவியானவரை துக்கப்படுத்துகிறதை பார்க்கிறோம். ஏனென்றால் அவர்கள் தங்களுக்கு உகந்த பிரகாரம் காரியங்களை கர்த்தர் நடப்பிக்காததால் அவ்விதமாக நினைத்துகொள்கிறார்கள். ஏன் அவர்களுக்கு அந்த காரியத்தை கர்த்தர் நடப்பிக்கவில்லை என்று அவர்கள் உணரமாட்டார்கள்; தங்களை பக்தியும், பரிசுத்தம் என்று நினைத்து, தங்கள் பொல்லாத கிரியைகளை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் கர்த்தரிடத்திலிருந்து எவ்விதம் கருத்துக்கள் வெளிப்பட்டது என்று சிந்தனை செய்யாமல், தங்களுக்குள் மாற்றங்களை வருவித்துக்கொள்ளாமல் நடந்துக்கொண்டு கர்த்தருக்கு விரோதமாக பேசுகிறதால் அவர்கள் எத்தனை தண்டனை கர்த்தரிடத்தில் இருந்து பெற்றுக்கொண்டாலும், தோலில் உணர்வு இல்லாதவர்களை போல நடந்து தங்களை பாழாக்கி பாழான இடங்களில் வாழ்ந்து ஆத்துமா தொய்ந்து, பின் அதனை உணரமுடியாமல் இருக்கிறபடியால் அப்படியே மாண்டு போகிறதை பார்க்கிறோம். இதனை வாசிக்கிறவர்கள் நாம் ஒவ்வொருவரும் எப்படியிருக்கிறோம் என்பதனை சிந்தித்துக்கொள்வோம். ஆதலால் பிரியமானவர்களே, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபை போல கர்த்தரின் ஆலோசனை பெற்றுக்கொள்ளாமல் எந்த காரியத்திலும் நாம் தலையிடக்கூடாது என்பதனை நாம் அறிந்து கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.