தேவனுக்கே மகிமையுண்டாவதாக

எசேக்கியல் 3:27 

நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் தருகிற வார்த்தைகளை சொல்வதற்கு தயங்கக் கூடாது.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தரின் ஆலோசனையைப்பெற்று ஒவ்வொரு காரியத்தையும் நடப்பிக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 22:18 

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.

மேற்கூறிய வசனங்களில் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் மிகாயா சொன்ன தீர்க்கதரிசன வார்த்தைகளை நம்பாமல் யோசபாத்திடம் பேசினபோது, யோசபாத்  அவனை நோக்கி சொன்னது 

1இராஜாக்கள் 22:19-23  

அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.

அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.

எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.

ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.

இந்த கர்த்தருடைய வார்த்தையை கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பதையும், பரம சேனையெல்லாம்  அவரிடம் அவர் வலது பக்கத்தில் நிற்கிறதையும், அவர் இடது பக்கத்தில் நிற்கிறதையும் கண்டேன்.  அப்போது அவன் கண்ட விதமாவது ஆகாப் போய் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு போய் அங்கே விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு ஒருவன் இப்படியும், ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.  அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து கர்த்தருக்கு முன்பாக நின்று நான் அவனுக்கு போதனை செய்வேன் என்றது.  எதினால் என்று கர்த்தர் அதனை கேட்ட போது, அது சொன்னது என்னவென்றால் நான் அவர்கள் தீர்க்கதரிசிகள் எல்லார் வாயிலும் போய் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது.  அதற்கு அவர் நீ அவனுக்கு போதனை செய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படியே செய் என்றார்.  ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்து தீமையாக சொன்னார் என்றான்.  அப்போது கேனானின் குமாரனாகிய சிதேக்கியா கிட்ட வந்து, மிகாயாவை கன்னத்தில் அடித்து, கர்த்துடைய ஆவி எந்த வழியாய் என்னை விட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.  அதற்கு மிகாயா: நீ ஒழித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான். அப்போது இஸ்ரவேலின் ராஜா மிகாயை பிடித்து, அவனை பட்டணத்து தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் குமாரனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டு போய்;  இவனை சிறைசாலையில் வைத்து நான் சமாதானத்தோடே வருமளவும் இடுக்கத்தின் அப்பத்தையும், இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக்கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லி அனுப்பினான்.  அப்போது மிகாயா சொன்னது: நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறதுண்டானால் கர்த்தர் என்னைக் கொண்டு பேசினது இல்லை என்று சொல்லி; ஜனங்களே நீங்கள் எல்லாரும் இதை கேளுங்கள் என்றான். 

பிரியமானவர்களே, மேற்க்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கையில், கர்த்தரை கோபப்படுக்கிற காரியங்கள் நாம் மனபூர்வமாகவோ மற்றும் நம்முடைய கீழ்படியாமையினாலோ நாம் செய்வோமாகில் நம்மை எப்படியாவது அவர் விழ பண்ணுவார் என்பது முந்தின பகுதிகளில் நமக்கு புரிய முடியும்; என்னவென்றால் ஆகாப் செய்த பொல்லாப்பினிமித்தம் அவனை அழிக்கும்படியாகவே கர்த்தர் பொய்யின் ஆவியை அவன் அழைத்திருந்த எல்லா தீர்க்கதரிசிகளின் வாயிலும் அனுப்புகிறார்.  ஆனால் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் ஆலோசனையால் மிகாவை அழைத்து கர்த்தரின் ஆலோசனையை கேட்கிறான்.  ஆனாலும் அவனும் முதலில் சொன்னது ராமோத்திற்கு யுத்தம் பண்ண போகலாம், காரியம் வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்கிறான்.ஆனால் ராஜா சந்தேகத்தோடு உன்னை எத்தனை தடவை ஆணையிடுவிக்க வேண்டும் என்று கேட்ட பிறகுத்தான் உண்மையாக நடக்க போகிற காரியங்களை அவன் சொல்கிறான். அவ்விதம் உண்மையை வெளிப்படுத்தினதினால் அவன் கன்னத்தில் அறையபடுகிறான் மட்டுமல்ல ராஜாவினால் நெருக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு,  சிறையின் வாழ்வும், இடுக்கத்தின் அப்பமும்,இடுக்கத்தின் தண்ணீருக்கும் ராஜ கட்டளையிடுகிறான்.  ஆனால் கர்த்தர் தம்முடைய பிள்ளைகள் ஒடுக்கபட்டாலும், துன்புறுத்தபட்டாலும் கைவிடாதபடி பாதுகாத்து தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறவராயிருக்கிறார். அதேபோல் தான் கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,  உண்மையான தேவனுடைய ஜனங்கள் மற்றவர்களால் துன்புறுத்தபட்டு, பல விதத்தாலும் நெருக்கப்படுவார்கள்.  ஆனால் நாம் கர்த்தரின் வார்த்தைகள் நிறைவேறும் வரையிலும் பொறுமையோடு இருப்போமானால்,  அவர் தாம் சொன்னதை நன்மையாகவோ, தீமையாகவோ செய்கிறவர்.  ஆனால் கர்த்தரிடத்தில் உண்மையாக இருக்கிறவர்களுக்கு கர்த்தர் நன்மையையே செய்கிறவர்.  மேலும் கர்த்தரால்  ஒருவருக்கு நன்மையாக ஏதாவது காரியங்கள் செய்திருப்போமானால், அவர்கள் நமக்கு தீமை செய்வார்களானால் ஒரு போதும் தீமை அவர்களுடைய வீட்டை விட்டு நீங்காது என்று கர்த்தரின் வசனம் நீதிமொழிகள் 17:13-ல் சொல்கிறது.  

ஆதலால் நாமாகவே யாருக்கும் தீமை செய்யவோ, மற்றும் இருதயத்தில்  மற்றவர்களுக்கு தீமை வரவேண்டும் என்ற நினைவோ நம் உள்ளத்தில் வராமல் நாம் நம்மை பரிசுத்தபடுத்தி பாதுகாக்க வேண்டும்.  மேலும் எப்பக்கம் நாம் நெருக்கப்பட்டாலும் சோர்ந்து போகாதபடி கிறிஸ்துவுக்குள் திடநம்பிக்கையோடு காணப்பட வேண்டும்.  இப்படியாக நாம் கர்த்தருக்காக உண்மையுள்ளவர்களாக காத்திருப்போம்; ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.