தேவனுடைய ராஜ்யம் எங்கே இருக்கிறது:-

Sis. பி. கிறிஸ்டோபர் வாசினி
Jun 23, 2020

தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 14:16-17

உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள்.

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக, ஆமென். 

 அல்லேலூயா.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே,கழிந்த நாளில் நாம் தியானித்த வேத பகுதியில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் போஜனத்தையும் அவர் பானம் பண்ணுதலையும் நம் ஆத்துமாவின் ஆதாயம் செய்து நமக்குளில் வாசம் பண்ணி, போஜனபாரம் பண்ணுவது நமக்கு தேவன் யோசேப்பை வைத்து  திருஷ்டாந்தபடுத்துகிறதை, நாம் தியானித்து கொண்டு இருக்கிறோம்.மேலும்,

லூக்கா 22 :29

ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன் என்றார்.

அந்த ராஜ்யம் எது? அது தேவனுடைய ராஜ்யம் நாம் தேவனுடைய ராஜ்யத்தை மட்டுமே தேட வேண்டும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார். ஆனால் நாம் உலகத்தையே நாடி தேடி ஓடுகிறோம்.அதைத்தான் இயேசுகிறிஸ்து சொல்லுகிறார்.

லூக்கா 12:29-32

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.

இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.

தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.

பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள்பிதா பிரியமாயிருக்கிறார்.

ஆனால்,நாம் ஒவ்வொருவரும் எவ்வளவோ தேவனுடைய வார்த்தையாகிய சத்தியத்தை பேசியும்,கேட்டும், உலகத்திலுள்ளவைகளையே நாடி தேடி ஓடுகிறோம்.ஆனால் அப்போஸ்தலர் நாட்களில் நடந்தது என்ன?ஜனங்கள்  மனந்திரும்புகிறதை பார்க்கிறோம்.

அப்போஸ்தலர் 2:38-41

பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.

வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;

இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.

அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.

அவர்கள் எப்படி மனந்திரும்பினார்கள் என்றால் பாவ பழக்கங்களாகிய உலக சிந்தைகள், உலக நினைவுகள், பொல்லாத குணங்கள், சிற்றின்பங்கள், எல்லாவற்றையும் விட்டுவிட்டு

அப்போஸ்தலர் 2:42

அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

அப்போஸ்தலர் 2:44-47


விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள்.

காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்.

அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லலாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி,

தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.

ஆனால்,நம்மளில் எப்படிப்பட்ட மனந்திரும்புதல் இருக்கிறது என்பதை சிந்தித்து பார்ப்போம். ஏதாவது பழைய நினைவுகளை விட்டோமா?இல்லை உலக சிந்தைகள்,நம்முடைய பொறாமை,உலக கவலை, சம்பாத்தியம் செய்ய வேண்டும், தலைமுறைகளுக்காக சேர்த்து வைக்க வேண்டும்.ஆடம்பரமாக வாழ வேண்டும்,சுகபோகமாக அனுபவிக்க வேண்டும்,மற்றும் உலக ஆசைகளை நாம் விட்டு மனந்திரும்பி இருக்கிறோமா? சிந்தித்து பாருங்கள். இவைகளை விடாமல் பரலோகத்தை நாடுகிறோம் என்றால் ,ஏதாவது நம்முடைய மனந்திரும்புதலுக்கு அர்த்தம் உண்டா?நாமே சிந்திப்போம்.

இவ்விதமான காரியங்கள் எல்லாம் நாம் உள்ளத்தில் வைத்து விட்டு இரட்சிக்கப்பட்டேன் என்று சொன்னால் எந்த அர்த்தமுமில்லை அப்போஸ்தலர்கள் தாங்கள் ஆஸ்திகள்,சம்பாத்தியங்கள், சகலத்தையும் தேவனுக்கென்று அப்போஸ்தலர் பாதத்தில் வைத்து எல்லோரும் ஒன்று போல் அனுபவித்தார்கள்.

பிரியமானவர்களே நம்முடைய வாழ்க்கைக்கும் அவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது.இவ்வித கிரியைகள் பொல்லாதவைகளாக இருக்கிறதால், தேவன் முழு உலகத்தையும் நியாயந்தீர்க்கிறார்.இன்றே மனந்திரும்புவோமானால் கர்த்தர் எல்லா கொள்ளை நோயையும், வாதையையும் நோயையும் நீக்கி விடுவார்.தேவ கற்பனைக்கு நாம் யாவரும் கீழ்ப்படிய வேண்டும்.மேலும் நம் உள்ளம் தான்,மனந்திரும்பும் போது, தேவ ராஜ்யமாக மாறுகிறது. அதைத்தான் தேவன் யோசேப்பையும், அவருடைய சகோதரர்களையும் வைத்து திருஷ்டாந்தபடுத்துகிறார்.

மேலும்,யோசேப்பு தன் சகோதரனாகிய பென்யமீனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப் பாத்திரமாகிய பானபாத்திரத்தையும், தானியத்துக்கு கொடுத்த பணத்தையும் வைக்கச் சொன்னது என்னவெனில் சாக்கை தேவன் நம்முடைய உள்ளமாகவும் அந்த உள்ளத்தில் தேவராஜ்யம் வரும் என்பதற்குத் திருஷ்டாந்தமாக வெள்ளிப்பாத்திரமாகிய பானபாத்திரமும் (கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உள்ளத்தில் வெளிப்படுவார் என்றும்) மேலும்  நமக்கு தரும் உலக ஆசீர்வாதங்கள் அனைத்தும் தேவனுக்கு உரியது என்பதையும் இந்தக் காரியம் நமக்கு திருஷ்டாந்தப்படுத்துகிறது. அதைத்தான் அப்போஸ்தலர்கள் செய்துவந்தார்கள்.அவ்வித அப்போஸ்தலர்கள் தேவனுடைய மகத்தான வேலையைச் செய்தார்கள். ஜனங்கள் இரட்சிக்கப்பட்டு தேவ சபையிலே சேர்த்துக் கொள்ளப்பட்டுக்கொண்டு இருந்தார்கள்.

மேலும், அவர்கள் காத்திருந்த போது காத்திருந்த எல்லார் மேலும் ஒன்றுபோல் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.

அருமையான தேவ ஜனமே, இந்த நாட்களில் என்ன நடக்கிறது,சிந்தித்து பாருங்கள் எல்லோரும் தனக்கென்று சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளதால் எத்தனை நாள் காத்திருந்தாலும் ஒன்றுமே நடக்கவில்லை.நாம் யோசிப்போம் எங்கேயாவது இந்த நாட்களில் அன்று பெந்தேகொஸ்தே நாள் நடந்தது போல் ஏதாவது சபைகளிலோ எங்கேயாவது அப்படிப்பட்ட காரியம் நடந்தது உண்டோ? சிந்தியுங்கள் ஏனென்றால் இந்த நாட்களில் தேவன் அவ்வித காரியங்களை செய்யாத காரணம் என்னவென்றால்,மனுஷர்களுடைய உள்ளம் எல்லாம் உலகம், அதனால் தேவராஜ்யம் எல்லோரிடத்திலும் ஒன்று போல் வரவில்லை. ஆனால் சில பேர் தங்கள் உள்ளத்தை வெறுமையாக்குகிறவர்கள்  நடுவில் தேவன் பிரகாசிக்கிறார்.

லூக்கா 17:20-24

தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது.

இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார்.

பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள்.

இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள், நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள்.

மின்னல் வானத்தின் ஒரு திசையில்தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறது போல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.ஜெபிப்போம்.கர்த்தர் யாவரையும் ஆசீர்வதிப்பாராக.

-தொடர்ச்சி நாளை.

மனந்திரும்புவோமானால் 

யையும் 

செய்யாதது