தேவனுக்கே மகிமையுண்டாவதாக
சங்கீதம் 6:10
என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.
மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் ஒரு போதும் தேவனை விட்டு உயர்வான எண்ணங்கள் தோன்றக்கூடாது.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம் கர்த்தர் தருகிற வார்த்தைகளை கூறுகிறதற்கு தயங்கக்கூடாது என்பதன் விளக்கங்கள் குறித்து தியானித்தோம்.
அடுத்தபடியாக நாம் தியானிப்பது
1இராஜாக்கள் 22:29-34
பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.
இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான்.
சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவரையும் நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.
ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனுக்கு நேராகச் சாய்ந்து வந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்.
இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டு அவனைவிட்டு, விலகிப்போனார்கள்.
ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் மிகாயா, இஸ்ரவேலின் ராஜாவைக்குறித்து, நீர் சமாதானத்தோடே திரும்பி வருகிறது உண்டானால் கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே இதை கேளுங்கள் என்று சொன்ன பிறகும் இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவுமாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு போனார்கள். இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி; நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜ வஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான். சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவரையும் நோக்கி: நீங்கள் சிறியவரோடும், பெரியவரோடும் யுத்தம் பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடே மாத்திரம் யுத்தம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான். ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தை காண்கையில் இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம் பண்ண அவனுக்கு நேராக சாய்ந்து வந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான். இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டு அவனை விட்டு விலகிப் போனான். மேலும் ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது. அப்பொழுது அவன் தன் சாரதியை பார்த்து; நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டு போ ; எனக்கு காயம்பட்டது என்றான் பின்பு
1இராஜாக்கள 22:35-37
அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.
பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது.
அப்படியே ராஜா இறந்தபின்பு, சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்.
மேற்கூறப்பட்ட வசனங்களில் உள்ளபடி இஸ்ரவேலின் ராஜா சமாரியாவில் அடக்கம்பண்ணப்படுகிறான். அந்த இரதத்தையும், அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிற போது, கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது. ஆகாபின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின தந்த அரண்மனையின் வரலாறும், அவன் கட்டின எல்லா பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. ஆகாப் தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின், அவன் குமாரனாகிய அகசியா அவன் ஸ்தலத்தில் ராஜாவானான்.
பிரியமானவர்களே இங்கு நாம் பார்க்கும் போது கர்த்தர் நம்முடைய சுத்திகரிப்புக்கேற்ற காரியங்களை குறித்து திருஷ்டாந்தப்படுத்துகிறார் என்னவென்றால் ஆகாபுடைய கிரியைகளாகிய உயர்ந்த எண்ணங்களை அகற்றும்படியாகவே கர்த்தர் இங்கு செயல்படுகிறார். எப்படியென்றால் சீரியராகிய பொல்லாத செயல்களால், நம் உள்ளத்தில் எழம்புகிற உயர்ந்த மேட்டிமையான எண்ணங்களை நிர்மூலம் பண்ணுகிறார். அந்தபடியாகவே நாம் எந்த உயர்ந்த எண்ணங்களையும் வைத்துக்கொண்டு தேவனுடைய கிருபையில்லாமல் எவ்விதத்திலும் நாம் யாரையும் ஏமாற்றி தப்பித்துக் கொள்ளமுடியாது என்பதற்காகவே கர்ததர் இந்த காரியங்களை குறித்து நமக்கு தெளிவுகாட்டுகிறார். அல்லாமலும் கர்த்தரை விட்டு எந்த காரியத்தை நாம் செய்யலாம் என்று நினைத்தாலும் நம் ஆத்துமா கொலைசெய்யப்பட்டு, பிசாசுதான் நம் இரத்தத்தை நக்கும் என்பது தான் அதன் அர்த்தம். இப்படியெல்லாம் பிசாசு நம்முடைய இரத்தம் நக்குகிறது என்றால் கர்த்தரின் வார்த்தைகளுக்கு கீழ்படியாமல், சொந்த விருப்பம் செய்வதும்; இவையெல்லாம் நம்முடைய வாழ்வில் மாற்றபட்டு, கிறிஸ்துவே எல்லா ஜனங்களுக்கும் உள்ளத்தில் எழும்புகிற உயர்வான எண்ணங்களை மாற்றி, நம்மை சுத்திகரித்து, நம்மை தன்னை தான் தாழ்த்தும்படியாக,அவரே ராஜாதி, ராஜாவாக நம்மில் வெளிப்பட்டு நம்மை பரிசுத்தபடுத்தும்படியாக ஒப்புக்கொடுப்போம்
ஜெபிப்போம்.
கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.
-தொடர்ச்சி நாளை.