தேவனுக்கே மகிமையுண்டாவதாக

யூதா 1:20,21 

நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,

தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நம்முடைய விசுவாசம் இடையில் அற்றுப்போகாதபடி ஜாக்கிரதையோடு காத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய உள்ளத்தில் ஒரு போதும் தேவனை விட்டு உயர்வான எண்ணங்கள் தோன்றக்கூடாது என்பதனை குறித்து தியானித்தோம். 

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

1இராஜாக்கள் 22:41-53  

ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.

யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் அசுபாள்.

அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.

யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடே சமாதானமாயிருந்தான்.

யோசபாத்தின் மற்ற வர்த்தமானங்களும், அவன் காட்டிய வல்லமையும், அவன் பண்ணின யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான்.

அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.

பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன்கேபேரிலே உடைந்துபோயின.

அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.

யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

ஆகாபின் குமாரனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருஷத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், தன் தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து,

பாகாலைச் சேவித்து, அவனைப் பணிந்துகொண்டு, தன் தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கினான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ஆகாப் மரித்தபின் அவன் குமாரனாகிய அகசியா, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  ஆசாவின் குமாரனாகிய யோசபாத், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்திலே யூதாவின் மேல் ராஜாவானான்.  யோசபாத் ராஜாவாகிற போது முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமின் மேல் ராஜ்யபாரம் பண்ணினான்.  சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்  பெயர் அசுபாள். அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்தான்; ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின் மேல் பலியிட்டு தூபங்காட்டி வந்தார்கள்.  யோசபாத்தின் மற்ற வர்த்தமானங்களும், அவன் காட்டிய வல்லமையும், அவன் பண்ணின யுத்தமும், யூதாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.  மேலும் தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான்.  அப்போது ஏதோமில் ராஜா இல்லை, பிரதி ராஜா ஒருவன் இருந்தான்.  மேலும் யோசபாத் பொன்னுக்காக ஓப்பீருக்கு போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களை செய்வித்தான். ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன்கேபேரிலே உடைந்து போயின.  அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா,  யோசபாத்திடம் என் வேலைக்கார் உம்முடைய வேலைக்காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை. ஆனால் எசியோன் கேபேரிலே செய்வித்த கப்பல்கள் உடைந்து போவதற்கு காரணம் என்னவென்றால் 

2 நாளாகமம் 20:35-37 

அதற்குப்பின்பு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனான அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடே தோழமைபண்ணினான்.

தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடே கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள்.

மரேசா ஊரானாகிய தொதாவானின் குமாரனான எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடே கூடிக்கொண்டபடியினால், கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று, அவர்கள் தர்ஷீசுக்குப் போகக் கூடாமற்போயிற்று.

மேற்கூறப்பட்ட கர்த்தரின் வார்த்தைகளில் யூதாவின் ராஜாவாகிய யோசபாத், பொல்லாப்பு செய்கிறவனாகிய அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடே தோழமை பண்ணினான்.  தர்ஷீசுக்கு போக கப்பல்களை செய்ய அவனோடு கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன் கேபேரிலே கப்பல்களை செய்வித்தார்கள்.  அப்பொழுது மரேசா ஊரானாகிய தொதாவாவின் குமாரனான எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி நீர் அகசியாவோடேக் கூடிக்கொண்டபடியினால்,  கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான்.  ஆதலால் கப்பல்கள் உடைந்து போயிற்று; ஆதலால் அவர்கள் தர்ஷீசுக்கு போகக்கூடாமற் போனது என்பது நமக்கு விளக்கப்படுகிறது.  யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  ஆனால் ஆகாபின் குமாரனாகிய அகசியா 

1இராஜாக்கள் 22:51-53 

ஆகாபின் குமாரனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருஷத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், தன் தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து,

பாகாலைச் சேவித்து, அவனைப் பணிந்துகொண்டு, தன் தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கினான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் ஆகாபை குறித்து கர்த்தர் கூறியது போலவே அவன் குமாரனாகிய அகசியா பொல்லாத வழிகளில் நடந்து கர்த்தருக்கு கோபமூட்டுகிறவனாயிருக்கிறான்.  

பிரியமானவர்களே, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் கப்பல்கள் என்பது விசுவாச வாழ்க்கையைக் காட்டுகிறது.  நம்முடைய விசுவாசம் அனுதினம் வளர வேண்டுமானால், நாம் கர்த்தரின் செய்கைகளை கவனித்து, அவருடைய சொற் கேட்டு நடந்து அனுதினம் கர்த்தர் நமக்கு தருகிற ஆவிக்குரிய வளர்ச்சியைஅடைந்துக்கொள்ள வேண்டும்.   ஆனால் எந்த காரணத்தை முன்னிட்டும் கிறிஸ்துவும், பரிசுத்த வான்களின் ஐக்கியமும் நம்முடைய வாழ்வில் இருக்கவேண்டுமேயல்லாமல், கர்த்தருக்கு விரோதமாக பொல்லாப்பு செய்கிறவர்களோடு ஐக்கியதைப்பட்டு எந்த காரியங்களையும் செய்யக்கூடாது.  அப்படி செய்கிறவர்களாக இருப்போமானால் நம்முடைய விசுவாசம் இடையில் முறிந்து போகிறது. இதனை திருஷ்டாந்தப்படுத்தி கர்த்தர் நமக்கு ஆசாவின் குமாரனாகிய யோசபாத்தை காட்டுகிறார்.  இதன் காரணம் மேடைகள் தகர்க்கபடாமல் இருந்தது அதன் ஒரு காரணம்; ஆதலால் அவன் உள்ளம் கர்த்தரிடத்திலிருந்து தூரம் இருந்ததால் தான் அவன் பொல்லாப்பு செய்த அகசியாவோடு தொடர்பு வைக்கிறான்.  ஆதலால் அவன் செய்த கிரியை கர்த்தர் முறித்துப்போடுகிறார்.  மேலும் நாம் கவனிக்க வேண்டிய காரியமாவது ஆகாபிடத்தில் கர்த்தர் கூறியது போல் அவன் குமாரனாகிய அகசிய பொல்லாத வழியில் நடக்கிறான் என்றால், தகப்பன் நடந்தது போல் பாகாலை சேவிக்கிறான்.  ஆதலால் கர்ததரின் கோபம் தலைமுறைக்கு தொடர்ந்துக்கொண்டிருக்கிறது.  இதனை வாசிக்கிற கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, கர்த்தர் விரும்பாத எந்த காரியத்தையும் செய்வதற்கு நாம் துணியக்கூடாது.  ஏனென்றால் நாம் கர்த்தரிடத்தில் வாதாட முடியாது.  எப்போதும் நம் உள்ளத்தில் அவரை பற்றிய பயமும், அச்சமும் நமக்குண்டாயிருக்க வேண்டும்.  மேலும் எத்தனையோ குடும்பங்கள் முன்னோர்கள் இவ்விதமான துணிகரமான பாவங்கள் செய்ததால், அவர்களின் தலைமுறைகள் அனுபவிக்கிற கஷ்டங்களுக்கு அளவில்லை.  அவர்கள் மறைந்து விடுவார்கள்; இவை ஒன்றும் காணமாட்டார்கள்.  ஆதலால் நாமும் நம் வாழ்வை ஒன்று இந்த காரியங்களை குறித்து சிந்தித்து பார்ப்போம்.  இந்த நாட்களில் கர்த்தர்  இந்த  வெளிச்சம் தந்து நமக்கு அறிவதற்கு ஒரு தருணம் தந்தாரானால் நாம் அதனை உபயோகப்படுத்தி நமக்கும், தேவ சபைக்கும், நம் தலைமுறைக்கும் அனுகிரமாயிருக்கும் படியாகவும், எருசலேமும், யூதாவுமாகிய நம்முடைய நித்திய ஜீவன் கெட்டுப்போகாமல், கர்த்தரிடத்திலிருந்து இரக்கம் பெற்று,  நம்மை பரிசுத்தபடுத்தபடுத்தும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.