தேவனுக்கே மகிமையுண்டாவதாக

சங்கீதம் 16:4,5 

அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.

கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம், எந்த கஷ்டமான சூழ்நிலைமை நமக்கு வந்தாலும் நாம் பெற்ற கர்த்தரின் அபிஷேகத்திற்கு மாறான தவறுகள் செய்து ஆத்துமா சாகாதபடி பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்முடைய விசுவாசம் இடையில் அற்றுப்போகாதபடி ஜாக்கிரதையோடு காத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 1:1-18 

ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்து போனார்கள்.

அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.

கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்?

இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான்.

அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவன் அவர்களிடத்தில் கேட்டான்.

அதற்கு அவர்கள்: ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள்.

அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு எதிர்ப்பட்டு வந்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனுஷன் எப்படிப்பட்டவன் என்று கேட்டான்.

அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;

அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.

அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது.

மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான்.

எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது.

திரும்பவும் மூன்றாந்தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.

இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.

அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப் போய்,

அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்க ஆட்களைஅனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

அகசியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

மேற்க்கூறப்பட்ட வசனங்களில் ஆகாப் மரணமடைந்த பின்பு மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய் கலகம் பண்ணி பிரிந்து போனார்கள்.  ஆகாபின் குமாரனாகிய அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு, இந்த வியாதி நீங்கி பிழைப்பேனோ என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான்.  ஆனால் கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவிடம் நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்படப் போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூடத்தில் விசாரிக்க போகிறீர்கள்? இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்கிறார் என்பதை அவர்களுக்கு சொல் என்ற போது எலியா போய் அப்படியே சொன்னான்.  அந்தபடியே அந்த ஆட்கள் திரும்பி வந்த போது: நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவர்களிடத்தில் கேட்டதற்கு; அவர்கள் அவனிடம் எலியா எதிர்பட்டு வந்து சொன்னதையெல்லாம் அப்படியே சொல்ல, அவன் அவர்களிடம் கேட்டது என்னவென்றால்,உங்களுக்கு எதிர்பட்டு வந்த மனுஷன் எப்படிபட்டவன் என்று கேட்டான்.  அதற்கு அவர்கள் 

2 இராஜாக்கள்1:8-18 

அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி;

அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான்.

அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது.

மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான்.

எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது.

திரும்பவும் மூன்றாந்தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.

இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான்.

அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப் போய்,

அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்க ஆட்களைஅனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்து போனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

அகசியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

மேற்கூறப்பட்ட வசனங்களை நாம் தியானிக்கும் போது எலியாவின் அடையாளத்தை கூறும் போது அகசியா அவர்களிடம் அவன் திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி, அவனிடத்திற்கு ஒரு தலைவனையும் ஐம்பது சேவகரையும் அனுப்ப அவர்கள் மலையின் உச்சியில் இருந்த எலியாவிடம் ஏறி போய், தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வர சொல்கிறார் என்று சொல்லும் போது, எலியா அந்த ஐம்பது பேருக்கு தலைவனாயிருந்தவனுக்கு பிரதியுத்தரமாக சொன்னது, நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி உன்னையும் ஐம்பது பேரையும் பட்சிக்க கடவது என்றான். உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி அந்த ஐம்பது பேரையும் பட்சித்து போட்டது.  மறுபடியும் அவ்விதமே நடந்தது, அடுத்து மூன்றாம் தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்த போது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு; தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பது பேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.  இப்போதும் அவன் சொன்னது, இதோ அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும்  அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக.  அப்போது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடுகூட இறங்கி போ, அவனுக்கு பயப்படாதே என்றான்; அப்பொழுது அவன் எழுந்து அவனோடுகூட ராஜாவினிடத்திற்கு போனான்.  அங்கு அவன் போய் ராஜாவை பார்த்து இஸ்ரவேலிலே ராஜா இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்பேயோரிடத்திற்கு ஆட்களை அனுப்பினாய்;  ஆதலால் நீ ஏறின கட்டிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்கிறார் என்றான். எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின் படியே அவன் இறந்து போனான்; அவனுக்கு குமாரன் இல்லாதபடியினால்,அவன் ஸ்தானத்திலே யோசபாத்தின் குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்திலே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.  அகசியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகம புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.  

பிரியமானவர்களே, மேற்கூறிய வசனங்களின் கருத்துகளை நாம் தியானிக்கும் போது, இஸ்ரவேலின் ராஜாவாகிய அகசியா தான் வியாதிப்பட்டிருக்கையில், வியாதியிலிருந்து நீங்கி பிழைப்பேனோ என்று ஆலோசனைக்காக எக்ரோனின் தேவனாகிய பாகால் பேயோரிடத்தில் ஆட்களை அனுப்பினது கர்த்தருக்கு பிரயமில்லாமல் இருந்ததால் தேவனுடைய மனுஷனாகிய எலியா, அந்த ஆட்களுக்கு எதிரிட்டு வந்து கூறிய காரியத்தால் அவன் நேரடியாக பார்க்கும்படி  எலியாவினிடத்தில் ஆட்களை அனுப்பினான். ஆனால் தேவனுடைய மனுஷனாகிய எலியா பயந்து கர்த்தரிடத்தில் விண்ணப்பிக்க இரண்டு  தடவை போனவர்களையும் அக்கினி பட்சித்தது.  மூன்றாம் தடவை கர்த்தருடைய தூதன், எலியாவிடம் பயப்படாதே, இறங்கி போ என்று சொல்லவும், அவன் ராஜாவினிடத்தில் வந்து கர்த்தர் கூறிய காரியத்தை ராஜாவினிடம் தைரியமாய் சொல்ல, அப்படியே அவன் சொன்னது போல் அகசியா இறந்து போகிறான். அல்லாமலும் எலிய கர்த்தரின் வார்த்தைகளை சொல்ல, அது அப்படியே சம்பவிக்கிறது என்றால் அவன் இருந்த இடம் மலையின் உச்சி, என்னவென்றால் அது அவனுடைய பரிசுத்தமான ஜெப வாழ்வைக்காட்டுகிறது. அல்லாமலும்  இந்த காரியங்களை நாம் சிந்திக்கும் போது, நாமும் கஷ்டங்களும், வியாதிகளும் வரும் போது, கர்த்தரை காட்டிலும் மற்றவர்களிடம் நம்பிக்கை வைக்கிறோம். மேலும் அந்நிய தேவர்களின் கோவில்களுக்கும், மற்றும் பல தரப்பிலும் தேவனுக்கு மாறான செய்கைகளையும் செய்கிறோம்.  இப்படியாக அநேகர் விழுந்து போகிறோம். ஆதலால் இவ்விதமான செயல்பாடு உள்ளவர்களின் ஆத்துமா சாகும் என்பது நிச்சயம்.  இதனால் கர்த்தர் திருஷ்டாந்தத்தோடு விளக்கி காட்டுகிறார்.  ஆதலால் நம்முடைய ஆத்துமா தீட்டாகி சாகாதபடியும், பரிசுத்தபடும்படியாகவும் நம்மை ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.