தேவனுக்கே மகிமையுண்டாவதாக

1 தெசலோனிக்கேயர் 4:16,17 

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.

பின்பு, உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் கிறிஸ்துவோடு வாழ்ந்தால் பரலோகத்திற்கு நம்மை எடுத்துக்கொள்வார்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நாம், எந்த கஷ்டமான சூழ்நிலைமை நமக்கு வந்தாலும் நாம் பெற்ற கர்த்தரின் அபிஷேகத்திற்கு மாறான தவறுகள் செய்து ஆத்துமா சாகாதபடி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 2:1- 3

கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான்.

எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.

அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

மேற்கூறப்பட்ட வசனங்களில் எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ள போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுபோனான். எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல் மட்டும் போக அனுப்புகிறார் என்றான் அதற்கு எலிசா: நான் உம்மை விடமாட்டேன் என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்கிறேன் என்றான்.  அப்படியே இருவரும் பெத்தேலுக்கு போனார்கள்.  அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து; இன்று கர்த்தர் உனக்கு தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னை விட்டு எடுத்துக் கொள்வார் என்பது உனக்கு தெரியுமா என்று கேட்டதற்கு, அவன் சொன்னது, எனக்கு தெரியும், சும்மா இருங்கள் என்றான்.  பின்பு எலியா சொன்னது 

2 இராஜாக்கள் 2:4  

பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள்.

பின்பு எரிகோவிலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் சொன்னது 

2 இராஜாக்கள் 2:5  

எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

பின்பு எலியா எலிசாவிடம் சொன்னது  

2 இராஜாக்கள் 2:6  

பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.

மேற்கூறிய வார்த்தைகள் பிரகாரம் இருவரும் யோர்தானுக்கு போனார்கள், அப்போது தூரத்திலே நின்று ஐம்பது தீர்க்கதரிசிகள் இதனை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  அப்போது இவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது எலியா 

2 இராஜாக்கள் 2:8-10 

அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள்.

அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.

அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்றான்.

மேற்கூறியபடி இருவரும் பேசிக்கொண்டு போகும் போது, இதோ அக்கினி ரதமும் அக்கினி குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து அவர்கள் இருவரையும் பிரித்தது; எலியா சுழற்காற்றிலே பரலோகத்திற்கு ஏறி போனான்.  அதை எலிசா கண்டு என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தை பிடித்து இரண்டு துண்டாக கிழித்தான்.  ஆனால் எலியாவின் மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எலிசா எடுத்துக்கொண்டான்.  

பிரியமானவர்களே மேற்கூறிய கர்த்தருடைய வார்த்தைகளை நாம் தியானிக்கும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்து பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவார் என்பதனை கர்த்தர் நமக்கு எலியாவைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்துகிறார்.  நம்முடைய கிறிஸ்து உயர்ந்த மலையில் ஏறி ஜெபம் பண்ணுகிறார், என்பது அவர் பரிசுத்தத்தில் உயர்ந்தவரும், உன்னதமான தேவனும், மகா மேன்மையுள்ளவருமாயிருக்கிறார். இந்த படியே எலியாவும்உயர்ந்த மலையின் மேல் இருக்கிறதை பார்க்கிறோம்.  அல்லாமலும் நாமும் பரிசுத்தத்தில் வளர வேண்டும்.  அது மட்டுமல்ல இஸ்ரவேல் சபையை கர்த்தர் எகிப்திலிருந்து இஸ்ரவேல் தேசத்துக்கு நடத்தி வரும்போது கன்மலையாகிய கிறிஸ்து அவர்களோடுகூட எப்போதும் உண்டு.  அதனை போலவே மணவாட்டி சபையாகிய நம் உள்ளத்தில் எழும்புகிற போராட்டமாகிய எரிகோ, யோர்தான் இருந்துநாம் வெற்றிபெற வேண்டுமானால், ஒரு போதும் கிறிஸ்து இயேசுவை விட்டு விடாதபடி அவரையே பின்பற்ற வேண்டும். அப்படியாக நாம் அவரை எப்போதும் தரிசிக்கிறவர்களாகவேயிருப்போமானால் நமக்காக அவர் போராட்டங்களை ஜெயித்து நம்மை அவரோடு பரலோகத்தில் சேர்த்துக்கொள்வார்.  இவ்விதமான ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்படியாக ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.