தேவனுக்கே மகிமையுண்டாவதாக

ரோமர் 8:11 

அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங் கூட இருப்பதாக, ஆமென். அல்லேலுயா.

மணவாட்டி சபையாகிய நாம் எப்போதும் உயிர்பெற்று வாழ வேண்டும்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கழிந்த நாளில் நாம் தியானித்த வேதப்பகுதியில், மணவாட்டி சபையாகிய நம்மில் கர்த்தர் நீதியை சால்வையாக தரித்தும், வைராக்கியமாக போர்த்தும் கொண்டிருக்கிறார் என்பதனை குறித்து தியானித்தோம்.  

அடுத்தபடியாக நாம் தியானிப்பது என்னவென்றால் 

2 இராஜாக்கள் 2:19-25 

பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள்.

அப்பொழுது அவன்: ஒரு புதுத் தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது,

அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.

அவன் அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழிநடந்து போகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள்.

அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.

அவன் அவ்விடத்தை விட்டுக் கர்மேல் பர்வதத்திற்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.

மேற்கூறிய வசனங்கள் பிரகாரம் எலிசா எரிகோ பட்டணத்திலிருக்கும் போது, அந்த பட்டணத்தின் மனுஷர் எலிசாவிடம்; இதோ எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ் நிலம் என்றார்கள்.  அப்பொழுது அவன் ஒரு தோண்டியை எடுத்து,அதிலே உப்புப் போட்டு கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டு வந்த போது, அவன் நீரூற்றண்டைக்கு போய், உப்பை அதிலே போட்டு: இந்த தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இதினால் இனி சாவு வராது, நிலம்பாழும் இராது என்று கர்த்தர் சொல்கிறார் என்றான்.  எலிசா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அந்த தண்ணீர் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.    அவன் அவ்விடம் விட்டு பெத்தேலுக்குப் போனான்.; அவன் வழி நடந்து போகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப்பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டை தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள்.  அப்பொழுது அவன் திரும்பி அவர்களை பார்த்து : கர்த்தரின் நாமத்திலே அவர்களை சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து; அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளை பீறிப்போட்டது.  அவன் அவ்விடத்தை விட்டு கர்மேல் பர்வதத்திற்கு போய், அங்கேயிருந்து சமாரியாவுக்கு திரும்பினான்.  

பிரியமானவர்களே, ஜீவ தண்ணீராம் கிறிஸ்து  நம்மில் மகிமைப்படகிறவராயிருக்கிறார்;  மேலும் நம்முடைய ஆத்துமாவிற்குள் நித்திய ஜீவன் கெட்டும், ஆவிக்குரிய வளர்ச்சியில்லாமல் பாழான நிலமாக இருப்போமானால், அது சாபப்பட்டணமாகிய எரிகோவுக்கு தேவன் ஒப்புமை படுத்துகிறார்.  அவ்விதமாக இருக்கிறவர்களின் உள்ளத்திலே வேதவசனமாகிய உப்பு தூவப்படும்போது, நாம் நம்முடைய பாவங்களற சுத்திகரிக்கப்பட்டும், பரிசுத்தமாக்கப்பட்டு, ஆத்துமாவில் கிறிஸ்துவின் ஜீவன் விளங்கி, நம்முடைய சாவை தேவன் மாற்றி, அவர் நம்மில் மகிமைப்பட்டு ஆத்துமா மரிக்காமல் பாதுக்காக்கிறார் என்பதனை மேற்கூறப்படுகிற பகுதியில் திருஷ்டாந்தபடுத்துகிறார். இந்த நற் கிரியைகளையெல்லாம் செய்யும்படியாக நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் கிறிஸ்து தீர்க்கதரிசியாக வருவார் என்பதனை விளக்கும்படியே, எலிசா அபிஷேகம்பண்ணப்படுகிறான். அவ்விதம் அபிஷேகம்பண்ணப்பட்டவரை கர்த்தர் இரட்சித்திருக்கையில் அவரை பரிகாசம் பண்ணுவோமானால் கர்த்தரே நமக்கு சத்துருவாகி நம்மை (ஆத்துமாவை) பீறிப்போடுகிறார். ஆதலால் பிரியமானவர்களே நாம் ஒரு போதும் பாழ்நிலமாக  இல்லாதபடி,   ஆத்துமா சாகாதபடி ஆரோக்கியமான ஆத்துமாவாகவும், அந்த ஆத்துமா ஜீவ தண்ணீர் ஊறுகிற ஊற்றாகவும், இருந்து நம்மை காத்துகொள்வோமானால் நம்முடைய சாவக்கேதுவான சரீரம் உயிரடைந்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வோம்.  இவ்விதமாக நம்முடைய சாபம் நிறைந்த சரீரம்  கிறிஸ்துவினால் ஜீவன் பெற்று உயிரடையும்படியாக கர்த்தரிடத்தில் ஒப்புக்கொடுப்போம்.

ஜெபிப்போம்.

கர்த்தர் யாவரையும் தாராளமாய் ஆசீர்வதிப்பார்.

-தொடர்ச்சி நாளை.